ஆவணப்படங்களுக்கான தேடல் தளங்கள்

topதிரைப்படங்களுக்கு என்று தனியே தேடியந்திரங்கள் இருப்பது போல டாக்குமண்ட்ரி என குறிப்பிடப்படும் ஆவணப்படங்களுக்காக என்றே தனியே தேடியந்திரங்கள் இருக்கின்றன. டாப்டாக்குமண்ட்ரிபிலிம்ஸ், டாக்குமண்டரிஹெவன்,டாக்குமண்ட்ரிஸ்டிராம், டாக்குமண்ட்ரிவயர் என ஆவணப்பட பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடிய அளவில் இந்த பட்டியல் நீள்கிறது.

ஆனால், தேடியந்திர அளவுக்கோளின் படி பார்த்தால் இவற்றை முழு வீச்சிலான தேடியந்திரங்கள் என்று வரையறுக்க முடியாது. இவை தேடல் வசதி கொண்ட இணையதளங்களாக இருக்கின்றன. இருப்பினும் முழுக்க முழுக்க ஆவணப்படங்களை மையமாக கொண்டு செயல்படுவதால் இவற்றின் மூலம் புதிய ஆவணப்படங்களை அணுகுவது எளிதானது.

பொதுவாக தேடியந்திரங்கள் இணையத்தில் துழாவி, இணைய பக்கங்களை அட்டவனையிட்டு அவற்றை தேடப்படும் குறிச்சொல்லுக்கு ஏற்ப பட்டியலிட்டு தருகின்றன. இதற்கு மாறாக ஆவணப்பட இணையதளங்கள் அவற்றை ஒரே இடத்தில் தொகுத்தளிக்கின்றன. இந்த தளங்கள் பட்டியலிடும் ஆவணப்படங்களை பெரும்பாலும், இணையத்தில் நீங்களே தேடிக்கொள்ளலாம். ஆனால் அதற்காக தனியே மெனக்கெடும் தேவை இல்லாமல் இவை ஆவணப்படங்களை தொகுத்து அளிக்கின்றன. எனினும் விஷயமறிந்தவர்களின் தேர்வு மற்றும் சக ஆவணப்பட ரசிகர்களின் பங்கேற்கு ஆகிய அம்சங்கள் இவற்றை ஆவணப்பட தேடலுக்கு நிகரில்லாதவையாக ஆக்குகின்றன.

டாப்டாக்குமண்ட்ரிபிலிம்ஸ்.காம் (http://topdocumentaryfilms.com/ ) இதற்கு நல்ல உதாரணம். இந்த தளம் ஆவணப்படங்களை அழகாக தேர்வு செய்து முன்வைக்கிறது. முகப்பு பக்கத்திலேயே ஆவணப்படங்களின் பட்டியலை பார்க்கலாம். ஒவ்வொரு படம் குறித்த சுருக்கமான அறிமுகத்துடன் அவற்றுக்கான இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. எந்த தலைப்பில் ஆவணப்படம் தேவையோ அதற்கான குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம்.
இவைத்தவிர ஆவணப்படங்களை அவற்றின் வகைகளுக்கு ஏற்பவும் தேடலாம். சிறந்த ஆவணப்படங்களின் பட்டியலும் இருக்கிறது. தனிமனித முயற்சியாக துவங்கி, ரசிகர்களின் பங்களிப்போடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த தளம். பின்னூட்டங்கள் வாயிலாக, ஆவணப்படங்கள் தொடர்பான விவாத்த்திலும் ஈடுபடலாம்.

டாக்குமண்டரிஹெவன்.காம் (http://documentaryheaven.com/ ) தளமும் ஏறக்குறைய இதே விதமாக அமைந்திருக்கிறது. வழக்கமான பட்டியல் தவிர, அதிகம் பார்க்கப்பட்டவை, மற்றும் இப்போது பார்க்கப்படுவை எனும் தலைப்புகளிலும் ஆவணப்படங்கள் முன்வைக்கப்படுவது சுவாரஸ்யம் அளிக்கலாம்.

டாக்குமண்டரிஸ்டிராம்.காம் (http://documentarystorm.com/ ) புதிய படங்கள், அதிகம் பார்க்கப்படுபவை, அதிக வாக்குகள் பெற்றவை என தனித்தனி தலைப்புகளில் ஆவணப்படங்களை பட்டியலிடுகிறது. இவைத்தவிர போகிற போக்கில் தேர்வு செய்யப்பட்டு முன்வைக்கப்படும் பட்டியலும் உள்ளது. வகைகள் மற்றும் முன்னணி பட்டியல் மூலமும் தேடலாம்.

டாக்கும்னட்ரிவயர்.காம் ( http://www.documentarywire.com/) தளமும் இதே போன்ற அம்சங்களை கொண்டிருந்தாலும், இந்த தளத்தில் ரசிகர்களின் பங்கேற்பு மற்றும் அதற்கான அம்சங்கள் அதிகம் இருப்பதை உணரலாம். இதில் உறுப்பினராக சேர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டு உரையாடலில் ஈடுபடலாம். உறுப்பினர்களின் கருத்துக்கள் தனியே முன்னிறுத்துப்படுவதால், அவற்றை பின்பற்றியும் ஆவணப்படங்களை அணுகலாம். அதிகம் விரும்ப பட்ட மற்றும் அதிகம் விவாதிக்கப்பட்ட ஆவணப்படங்களின் பட்டியலையும் காணலாம்.

பிரிடாக்குமண்டரிஸ்.ஆர்க் ( https://freedocumentaries.org/) ஆவணப்படங்களை ஸ்டீரிமிங் முறையில் பார்க்க வழிசெய்கிறது.

டாக்குமண்டரி24.காம் (http://www.documentary24.com/ ) மிக எளிமையான வடிவமைப்புடன் வரவேற்கிறது. செய்திகளுக்கான பட்டியல் போல ஆவணப்படங்கள் பட்டியலிடப்பட்டிருப்பதால் அவற்றை எளிதாக தேர்வு செய்யலாம்.வரிசையாக பட்டியலை பார்க்கலாம். அல்லது மேலே உள்ள வகைகளில் கிளிக் செய்து அணுகலாம்.
டாக்குமண்டரிலாக்.காம் (http://www.documentary-log.com/ ) கொஞ்சம் சிக்கலான வடிவமைப்பு கொண்டிருந்தாலும், ஆசிரியர் குழு பரிந்துரை, அதிக பின்னூட்டங்கள் பெற்றவை என கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது.
டாக்குமண்டரிடியூப்.காம் (http://www.documentarytube.com/ ) தளத்தையும் இந்த பட்டயலில் சேர்த்துக்கொள்ளலாம். ஆவணப்படங்கள் தொடர்பான செய்திகள் மட்டும் கட்டுரைகளையும் அளிப்பது இதன் சிறப்பம்சம்.
ஆவணப்பட உலகில் மூழ்கி திளைக்க விரும்புகிறவர்களுக்கும், புதிய ஆவணப்படங்களை கண்டு கொள்ள விரும்புகிறவர்களுக்கும் இந்த தளங்கள் உற்சாகம் அளிக்க கூடியவை!

———

குறிப்பு: தேடியந்திரங்கள் தொடர்பாக தமிழ் இந்து இணைய பதிப்பில் எழுதி வரும் ஆ’வலை’ வீசுவோம் தொடரின் நீட்சியாக இதை வாசித்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்:http://bit.ly/2aFndTa

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *