அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான பாப் டைலன் இலக்கிய நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது உலக அளவில் ஆச்சர்யத்தையும், ஏற்படுத்தவே செய்தது. இருந்தாலும் இந்த விருக்து ஒரு இலக்கிய மேதைக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பலரது அபிப்ராயமாக இருக்கிறது.
மேலைநாட்டு இலக்கிய மேதைகளின் பெயர்களுக்கு பரிட்ய்சமான தமிழ் இலக்கிய உலகில் பாப் பாடகரான டைலனுக்கு இலக்கிய நோபல் எனும் செய்தி கொஞ்சம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
எனக்கு டைலனிடம் அதிக பரிட்சயம் இல்லை: இசையிலும் அத்தனை தேர்ச்சி இல்லை என்பதால், டைலனுக்கு இலக்கிய நோபல் வழங்கப்பட்டது சரியா? தவறா? என அலசி ஆராய முற்படப்போவதில்லை. டைலனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அவரைப்பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிவிட துடித்துக்கொண்டிருந்தேன். டைலனை அதிகம் அறியாத நிலையில், வெறும் கூகுள் தேடலில் அவரைப்பற்றி எழுத விரும்பவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக டைலன் பற்றி எழுது அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. டைலன் விஞ்ஞானிகளை பெரிதும் கவர்ந்திருக்கிறார் எனும் செய்தி தான் அது.
டைலனின் வரிகள் அமெரிக்க பாடல் பாரம்பரியத்தில் புதிய கவித்துவ வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்ற நோபல் குழுவின் பாராட்டு ஒரு புறம் இருக்க, அவரது வரிகள் விஞ்ஞானிகளால் அவரது ஆய்வுக்கட்டுரைகளில் விரும்பி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது எனும் தகவல் அவரது கவித்துவ தாக்கத்தை உணர்த்துவதாக இருக்கிறது.
இதில் என்ன விஷேசம் என்றால், இந்த தகவல் கடந்த ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது தான். பி.எம்.ஜே எனும் சஞ்சிகையில் வெளியான அந்த கட்டுரை, விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைகளில் 727 முறை பாப் டைலன் பற்றிய மேற்கோள்கள் இருப்பதாக தெரிவிக்கிறது.
ஆக, டைலன் விஞ்ஞானிகளையும் கவர்ந்திருக்கிறார். இதற்கு அழகான உதாரணம் பார்ப்போமா? நைட்ரிக் அமிலம் பற்றிய கட்டுரை ஒன்றில், பதில் காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது (“Nitric Oxide and Inflammation: The answer is blowing in the wind.” ) எனும் டைலனின் வரி பொருத்தமாக அமைந்துள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த ஜெர் ரிஜ்கர்ஸ் எனும் விஞ்ஞானி, நான் டைனலில் ரசிகன், அதனால் தான் அவரை மேற்கோள் காட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
டைலனின் பாடல் வரிகள் சாகசம் நிறைந்ததாக, சித்தனையை தூண்டுவதாக இருப்பதே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிற்க, ஸ்வீடனின் கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், தங்களில் யார் அதிக அளவில் டைலனின் வரிகளை மேற்கோள் காட்டுகிறோம் என பார்க்கலாம் என ஒரு போட்டி வைத்துக்கொண்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
டைலனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது பற்றி கருத்து கூறும் முன் டைலனை அறிந்து கொள்வது நல்லது.
விஞ்ஞான சமூகத்தில் டைலனின் தாக்கம் ஒரு புறம் இருக்க, விஞ்ஞான கட்டுரைகளில் அவரை விட தாக்கம் செலுத்திய பாடகர்கள் இல்லாமல் இல்லை: அவர்களின் பெயர் பீட்டில்ஸ்!
செய்தி இணைப்பு:https://www.newscientist.com/article/2109079-its-not-just-the-nobel-committee-scientists-love-bob-dylan-too/
பாப் டைலன் பற்றி அறிய:http://bobdylan.com/
–

1 Comments on “விஞ்ஞானிகளை கவர்ந்த பாப் டைலன்!”
nagendra bharathi
அருமை