வருமான வரி தாக்கல் செய்ய உதவும் இணையதளங்கள்

பொருட்களை வாங்குவது, வங்கி கணக்கை இயக்குவது, மாதாந்திர பில் தொகைகளை செலுத்துவது, டிக்கெட் முன்பதிவு செய்வது என இணையம் மூலமே பல தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. இந்த வரிசையில் இணையம் மூலம் வருமான வரித்தாக்கல் செய்வதை எளிதாக்கும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன.

பெரும்பாலான இந்தியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில்லை. வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் வருவதில்லை என்பதில் துவங்கி இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வருமான வரி வரம்புக்குள் வராவிட்டாலும் கூட, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது நல்லது என்கின்றனர். அவசியம் என்றும் வரி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர். முறையாக வரிக்கணக்கை தாக்கல் செய்வது தனிநபர்களுக்கும் நல்லது , அரசுக்கும் நல்லது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது வங்கி கடன் பெறுவது போன்ற விஷயங்களில் உதவியாக இருக்கும். அதே போல வரி செலுத்தும் வரம்பிற்குள் வருபவர்கள் தங்கள் வரி சேமிப்பை முறையாக திட்டமிடவும் உதவும்.
வரித்தாக்கல் செய்வது சிக்கலானது என நினைத்து தயங்குபவர்களும் இருக்கின்றனர். வரித்தாக்கல் தொடர்பான விஷயங்களை நன்கறிந்தவர்களும் கூட, இதற்கென சரியாக நேரம் ஒதுக்க முடியாமல் தடுமாறுவதும் உண்டு. எப்படி இருந்தாலும் சரி, வருமான வரித்தாக்கல் செய்வதில் உதவுவதற்கு என்றே பல இணையதளங்கள் இருகின்றன தெரியுமா? இந்த தளங்கள் உதவியோடு இணையம் மூலமே எளிதாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யலாம்.
இணையம் மூலம் வரித்தாக்கல் என்று வரும் போது, வருமானவரித்துறையின் அதிகாரபூர்வ தளத்தையே கூட நாடலாம். இதில் இ-பைலிங் எனப்படும் இணையம் மூலம் வரித்தாக்கல் செய்வதற்கான தனிப்பகுதி இருக்கிறது: https://incometaxindiaefiling.gov.in/
வரித்தாக்கல் செயல்முறையை வழிகாட்டும் வகையில் இந்த பகுதி அமைந்திருந்தாலும், புதியவர்களுக்கும், வரித்தாக்கல் நடைமுறையில் அதிக பரிட்சயம் இல்லாதவர்களுக்கும் அடுத்தடுத்த இணைப்புகளாக அமைந்திருகும் இந்த வழிகாட்டுதல் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
வரித்தாக்கலுக்கான பிரத்யேக இணையதளங்கள் இப்படி குழம்பி நிற்க வேண்டிய அவசியம் எல்லாமல் மிக எளிதாக வரித்தாக்கல் செய்ய வழி செய்கின்றன. இந்த வகை தளங்களில் கிளியர்டாக்ஸ், டாக்ஸ்பேனர், டாக்ஸ்மைல், மைஐடிரிட்டர்ன் உள்ளிட்ட தளங்கள் பிரபலமாக இருக்கின்றன.
இவற்றில் பரவலாக அறியப்பட்ட தளம் என கிளியர்டாக்சை (cleartax.in ) குறிப்பிடலாம். வரித்தாக்கல் செய்ய விரும்புகிறவர்களுக்கு மிக எளிதாக வழிகாட்டும் இடைமுகத்தை கொண்டிருப்பது இதன் சிறப்பாக கருதப்படுகிறது. இந்தியாவில் இணையம் மூலம் வரித்தாக்கல் செய்வதில் மிக எளிமையான சேவை என்றும் இது தன்னை வர்ணித்துக்கொள்கிறது. பயனாளிகள் சமர்பிக்கும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக கையாளப்படுவதாகவும் உறுதி அளிக்கிறது. அதைவிட முக்கியமாக அடிப்படை சேவை இது இலவசமாக வழங்குகிறது. வரித்தாக்கலுக்கு பிரதானமாக தேவைப்படும் படிவம் 16 – ஐ சமர்பித்தவுடன் ஏழு நிமிடங்களுக்கும் குறைவாக வரித்தாக்கல் செய்துவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் இதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வரித்தாக்கலுக்காக தனியே எந்த தகவல்களையும் உள்ளீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. உரிய படிவங்களை பதிவேற்றினால் தானாக வரித்தாக்கல் நடைமுறையை கவனித்துக்கொள்கிறது. வரிமான வரி தாக்கல் செய்வபவரின் பிரிவிற்கு ஏற்ப பொருத்தமான வரித்தாக்கல் படிவத்தையும் இந்த தளமே தேர்வு செய்து கொள்கிறது.
வரித்தாக்கல் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும், இந்த தளத்தின் மூலம் வல்லுனர்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். வரித்தாக்கலில் வல்லுனர்கள் வழிகாட்டுதல் தேவை என நினைத்தால் அதற்கான கட்டணச்சேவையையும் நாடலாம். தனிநபர்கள் மட்டும் அல்லாமல் வர்த்தக நிறுவனங்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இந்த சேவையை அணுகலாம்.
இந்த தளம் மூலம் இது வரை பத்து லட்சம் பேருக்கு மேல் வரித்தாக்கல் செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரித்தாக்கல் செய்வது தவிர வருமான வரி தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படுத்த உதவும் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. வரிசேமிப்பிற்கான 80சி பிரிவின் கீழ் வருமான வரிச்சலுகைகளை பெற முதலீட்டு வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக்கொள்வது என வழிகாட்டும் பகுதியும் இருக்கிறது.
வருமான வரி கணக்கிட உதவும் கால்குலேட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களும் இருக்கின்றன. வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட பலவேறு வழிகாட்டி கட்டுரைகளும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இவைத்தவிர , வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான வழிகாட்டி உள்ளிட்டவையும் உள்ளன. வருமான வரி விசயங்கள் தொடர்பான பயனுள்ள தகவல்களை அளிக்கும் வலைப்பதிவு பகுதியும் உங்களை கவரலாம்.
கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து புதிய அம்சங்கள் மற்றும் சேவைகளை அறிமுகம் செய்து கொண்டே இருப்பதும் இந்த தளத்தின் சிறப்பம்சமாக இருக்கிறது. கிளியர்டாக்ஸ் சார்பில் செயலி வடிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கிளியர் டாக்ஸ் வருமான வரித்தாக்கல் தளங்களில் பிரபலமாக கருதப்படுவதோடு, இந்தியாவின் பிரகாசமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பயிற்சி பள்ளி என வர்ணிகப்படும் அமெரிக்காவின் ஒய் காம்பினேட்டர் ஸ்டார்ட் அப் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு நிதி பெற்ற பெருமையும் உரியது.
கிளியர் டாக்ஸ் நிறுவனத்தின் பின்னே சுவாரஸ்மான கதையும் உள்ளது. இதன் நிறுவனரான அர்சித் குப்தா தில்லியைச்சேர்ந்தவர். கவுகாத்தி ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர் அதன் பிறகு அமெரிக்காவில் மேற்படிப்பு பயிலச்சென்று அங்கேயே நல்ல வேலையிலும் சேர்ந்துவிட்டார். இதனிடயே கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவர், வருமான வரித்தாக்கல் செய்வதில் உள்ள சிக்கல்களை கண்டு திகைத்துப்போனார். இணையம் மூலம் எளிதாக வரித்தாக்கல் செய்வதற்கான வழி இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தவர் அதற்கான இணையதளத்தையும் தானே துவக்க தீர்மானித்தார். இந்த எண்ணத்துடன் அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பி வந்து கிளியர் டாக்ஸ் தளத்தை துவக்கினார். வரித்தாக்கலுக்கு தேவையான மென்பொருள் உள்ளிட்டவற்றை உருவாக்கினார். அவரது தந்தை தொழில்முறை தணிக்கையாளராக இருந்தது அவருக்கு ஊக்கமாகவும், உதவியாகவும் அமைந்தது.
2011 ல் இந்த தளம் அறிமுகமானது. அதன் எளிமையான வடிகாட்டும் தன்மைக்காக தொடர்ந்து இணையவாசிகளின் ஆதரவை பெற்று வளர்ச்சி அடைந்து வருகிறது.
டாக்ஸ்பேனர் (TaxSpanner ) தளம் கிளியர்டாக்சிற்கு சில ஆண்டுகள் முன்னதாக துவக்கப்பட்டது. தில்லியை சேர்ந்த அங்கூர் சர்மா உள்ளிட்ட பொறியியல் பட்டதாரிகள் ஒன்றிணைந்து இந்த தளத்தை துவக்கினர். 2006 ம் ஆண்டு அரசு மின்னணு நிர்வாகத்தை ஊக்குவித்து வந்த நிலையில், இணையம் மூலமே வரித்தாக்கல் செய்வதையும் ஊக்குவிக்கத்துவங்கியது. பொதுவாக அந்த கால கட்டத்தில் தனிநபர்கள் இந்த வசதியை பயன்படுத்துவது மிகவும் அரிதாக இருந்தது. இந்நிலையில் தான் தனிநபர்களும் இணையம் மூலம் வரித்தாக்கல் செய்ய வழிகாட்டும் சேவையாக டாக்ஸ்பேனர் அறிமுகமானது. சுய தொழில் முனைவோர் வரித்தாக்கல் செய்வதற்கான வசதியையும் அறிமுகம் செய்த இந்த தளம், செல்போன் மூலம் வரித்தாக்கல் செய்யவும் வழி செய்கிறது. இதற்கான வசதி 2011 ல் அறிமுகமானது.
ஆனால் ஒன்று இந்த தளம் இலவச சேவை வழங்குவதில்லை. எல்லாமே கட்டண சேவை தான். 499 ரூபாயில் இருந்து இதன் கட்டண சேவை துவங்குகிறது. அதிக கட்டணத்திற்கு வல்லுனர்கள் வடிகாட்டுதலும் பெறலாம். எளிதான வழிகாட்டுதலோடு,இணையம் வடி அரட்டை மூலமாக விளக்கம் அளிப்பது உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. இந்த தளத்தின் வடிவமைப்பு அத்தனை நேர்த்தியானது என்று சொல்ல முடியாவிட்டாலும், இந்த சேவை சிறப்பாகவே இருப்பதாக பரவலாக கருதப்படுகிறது.
இதே டாக்ஸ்மைல் , டாக்ஸ் மேனேஜர்.இன் , மைஐடிரிட்டர்ன் உள்ளிட்ட தளங்களும் வரித்தாக்கல் சேவைகளை அளிக்கின்றன. மைஐடிரிட்டர்ன் தளம் மிகவும் எளிதாக ஒவ்வொரு படியாக வடிகாட்டும் வகையில் உள்ளது. டாக்ஸ்மேனேஜர் தளம் பல்வேறு பிரிவினருக்கு தனித்தனியே சேவை அளிக்கும் வகையில் அடர்த்தியான அம்சங்களோடு அமைந்துள்ளது. அடிப்படை சேவை இலவசம். கட்டணச்சேவையும் இருக்கின்றன.
எச்.அண்ட் ஆர் பிளாக், டாக்ஸ் ஆக்ட், டாக்ஸ் லேயர் உள்ளிட்ட வேறுபல தளங்களும் இருக்கின்றன. ஆக வருமான வரித்தாக்கல் செய்வதை ஒரு சுமையாக கருத வேண்டாம். வரித்தாக்கலுக்கு வழிகாட்டும் தளங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கின்றன. மேலும் வரிமான வரி தொடர்பான தெளிவை பெறவும் இந்த தளங்களை நாடலாம்.

0—

நன்றி. வணிகமணியில் எழுதும் இனி எல்லாம் இணையமே தொடரில் இருந்து..

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

1 Comments on “வருமான வரி தாக்கல் செய்ய உதவும் இணையதளங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *