இலக்குகளை அடைய உதவும் இணையதளங்களின் வரிசையில் புதிய தளமாக அறிமுகமாகி இருக்கும் டேபுக் தளம், பயனாளிகள் தாங்கள் செய்ய விரும்பும் பணிகளை தொடர்ந்து கடைபிடிப்பதற்கான ஊக்கம் அளிக்கும் வழியாக அமைந்துள்ளது.
சுயமுன்னேற்றம் அல்லது மேம்பாட்டில் விருப்பம் உள்ளவர்கள் தாங்கள் செய்ய விரும்பும் செயல்களை குறித்து வைத்துக்கொண்டு அதை மறக்காமல் இருக்க விரும்புவார்கள். இதற்கு உதவும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது டேபுக்.கோ இணையதளம்.
இந்த தளத்தில் வரிசையாக செய்ய வேண்டிய செயல்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. படிக்க வேண்டிய புத்தகங்கள், பார்க்க வேண்டிய திரைப்படங்கள், தினமும் ஓடுவது என இந்த பட்டியல் அமைந்துள்ளது. இவற்றை கிளிக் செய்து , நமக்கான குறிப்புகளை அதில் இணைக்கலாம். ஓட்டப்பயிற்சி என்றால், தினமும் அது பற்றி குறிப்பிடலாம். இப்படி செய்வதன் மூலம் தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபடலாம்.
இந்த பட்டியல் தவிர பயனாளிகள் தாங்கள் விரும்பும் எந்த செயலை வேண்டுமானாலும் புதிதாக சேர்த்துக்கொண்டு அது தொடர்பான முன்னேற்றத்தை தொடர்ச்சியாக பதிவு செய்து வரலாம். மிகவும் எளிமையான வடிவமைப்புடன் இந்த தளம் அமைந்துள்ளது .
இலக்கை நோக்கி முன்னேற விரும்புகிறவர்கள் தாங்களை தாங்களே கண்காணித்துக்கொள்ளவும், அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவதற்கான ஊக்கம் பெறவும் இந்த தளம் உதவும்.
இணைய முகவரி: https://www.daybook.co/
செயலி புதிது: வாசிப்பை பகிர உதவும் செயலி
படித்தால் மட்டும் போதுமா? பகிர வேண்டாமா? என கேட்பது போல ஸ்மார்ட்போன் யுகத்தில், புத்தக பிரியர்கள் விரும்பி வாசிக்கும் புத்தகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வசதியை அளிக்கும் வகையுல் புக்லைட்ஸ் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் புத்தக பிரியர்கள் தாங்கள் வாசிக்கும் மின்புத்தகங்களில், மிகவும் ரசித்த பகுதியை அடிக்கோடிட்டு அதன் திரை தோற்றத்தை மற்றவர்களுடம் பகிர்ந்து கொள்ளலாம்.
பொதுவாக ஒரு புத்தகத்தை வாசித்ததும், அதில் நம்மை கவர்ந்த பகுதிகளை மனதுக்குள் அசைபோட்டுவிட்டு பின்னர் மறந்து விடுகிறோம். ஆனால் இதற்கு பதிலாக புத்தகத்தில் ரசித்த பகுதிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், வாசிப்பின் பயனை பரவலாக பெறலாம் எனும் அடிப்படையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய சேவைகளிலும் புத்தகத்தின் சிறந்த பகுதிகளை பகிர்ந்து கொள்ள முடியும். புத்தக புழுக்கள் தங்கள் ரசனையை பகிர்ந்து கொள்வதற்கான வழியாக இருக்கும் என்பதோடு, புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வழியாகவும் இந்த பகிர்தல் அமையலாம்.
புத்தக வாசிப்பை இணைய யுகத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியாக இந்த செயலி அமைந்துள்ளது. எந்த அளவு வெற்றி பெறுகிறது என்பதையும், ஆண்ட்ராய்டு போனுக்கான மாதிரி வெளியாகும் வாய்ப்புள்ளதா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: http://booklights.us/