எந்த துறையிலேமே தொழில்நுட்ப பதங்கள் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இணைய உலகில் இத்தகைய பதங்கள் இன்னும் அதிகம். அதோடு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பதங்கள் வேறு அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து இணையவாசிகளுக்கு வழிகாட்டும் வகையில் வெப்போபீடியா தளம் செயல்பட்டு வருகிறது.
இந்த தளத்தை நவீன தொழில்நுட்ப பதங்களுக்கான இணைய அகராதி என்று சொல்லலாம். தொழில்நுட்ப தேடியந்திரம் என்றும் சொல்லலாம். இணையம், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்ப பதங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை இந்த தளத்தில் சமர்பித்து பொருள் அறியலாம்.
இதன் முகப்பு பக்கத்தில் மேலே உள்ள தேடல் கட்டத்தில் தொழில்நுட்ப பதத்தை டைப் செய்தால் போதும் அதற்கான விரிவான விளக்கம் தோன்றும். இவைத்தவிர முகப்பு பக்கத்திலேயே தினம் ஒரு தொழில்நுட்ப பதத்திற்கான அர்த்தம் இடம்பெறுகிறது. சமீபத்திய தொழில்நுட்ப பதங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.
ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் இணைவாசிகள் ஆகியோருக்கு பயன் தரும் வகையில் தொழில்நுட்ப பதங்களுக்கான விளக்கம் எளிமையான முறையில் தரப்படுவது இந்த தளத்தின் சிறப்பம்சம். தினமும் புதுப்புது வார்த்தைகளுடன் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டு வருவது இன்னும் சிறப்பு.
எனவே இப்போது தான் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகள் என்றாலும் அதற்கான விளக்கத்தை இதில் காணலாம். இதுத்தவிர தொழில்நுட்பம் சார்ந்த ஆழமான விளக்க மற்றும் வழிகாட்டுதல் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
இணையத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் புக்மார்க் செய்து கொள்ள வேண்டிய தளம் இது: http://www.webopedia.com/
இதே போலவே வாட் ஈஸ் (http://whatis.techtarget.com/ ) இணையதளம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகள் மற்றும் சொற்றடர்களின் விளக்கம் அளிக்கும் தளமாக இருக்கிறது.
டெக்டெர்ம்ஸ் (techterms.com ) தளமும் இதே போலவே தொழில்நுட்ப பதங்களுக்கு பொருள் அறிய உதவுகிறது. இதையும் தொழில்நுட்ப தேடியந்திரமாக பயன்படுத்தலாம்.
வைஸ்கீக் (wisegeek.com ) தளத்தையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரைகளும் தனித்தனி தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. இந்த தளம் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும் பழைய கட்டுரைகள் பயனுள்ளவை.
இணைய அகராதி
இணையம் தனக்கான தனி மொழியையும் உருவாக்கியிருக்கிறது. இணையத்தில் பயன்படுத்தப்படும் புதிய சொற்களும், சுருக்கங்களும் அநேகம் இருக்கின்றன. இணையத்திலேயே புழங்குபவர்களுக்கு இந்த வார்த்தைகளும் இணைய மொழிகளும் அத்துமடி என்றாலும் சராசரி இணையவாசிகளுக்கு இவை புரியாத புதிராக இருக்கலாம். அதிலும் குறிப்பாக இணைய அரட்டை மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்படும் குறிப்புகள் குழப்பத்தை அளிக்கலாம். இத்தகைய இணைய மொழிகளுக்கான விளக்கத்தை அளிக்கிறது நெட்லிங்கோ இணையதளம்.
இணையத்தின் குறுக்கெழுத்தாக அமையும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை இதில் தேடிக்கொள்ளலாம். இணைய குறிப்புகள் பலவும் இடம்பெற்றுள்ளன. தினம் ஒரு வார்த்தை விளக்கமும் அளிக்கப்படுகிறது. இந்த விளக்கத்தை இமெயில் மூலமும் பெறலாம்.
இணைய முகவரி: http://www.netlingo.com/