இணையத்தை உலுக்கி இருக்கும் வான்னகிரை ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் இணையவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நோமோர்ரேன்சம்.ஆர்க் இணையதளத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மால்வேர் எனும் தீய நோக்கிலான மென்பொருள்கள் வடிவில் கம்ப்யூட்டருக்குள் நுழைந்து, அதனை தற்காலிகமாக முடக்கி அல்லது, அதில் உள்ள கோப்புகளை அணுக முடியாமல் செய்து விட்டு, இந்த தாக்குதலில் இருந்து விடுபட பினைத்தொகை கேட்டு மிரட்டும் உத்தியுடன் நடைபெறும் தாக்குதல் ரான்சம்வேர் என குறிப்பிடப்படுகிறது.
இந்த வகையான தாக்குதலுக்கு இலக்காகும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான புகலிடமாக உருவாக்கப்பட்டது நோமோர்ரேன்சம்.ஆர்க் இணையதளம். யூரோப்போல் ,நெதர்லாந்து காவல்துறை மற்றும் வைரஸ் தடுப்பு நிறுவனங்களான காஸ்பர்ஸ்கை, இண்டெல் செக்யூரிட்டி ஆகியவை இணைந்து இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளன.
ரான்சம்வேர் தாக்கினால், பினைத்தொகை கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தும் இந்த தளம், ஏற்கனவே நன்கறியப்பட்ட ரான்சம்வேர் தாக்குதல்களில் இருந்து விடுபடுவதற்கான சாவியை வழங்குகிறது. புதிய தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
இந்த வகை தாக்குதல்களுக்கு தற்காப்பே சிறந்தது என்றாலும், தற்போதைய வான்ன கிரை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த தளம் சில முக்கிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
அவற்றில் முதன்மையானது, mb v1 செயலிழக்கச்செய்வதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்பதாகும். மேலும் மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள பாதுகாப்பு பேட்சை உடனே பயன்படுத்த வேண்டும்.
மேலும் சில தற்காப்பு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது: https://www.nomoreransom.org/prevention-advice.html
—
இது தொடர்பான முந்தைய கட்டுரை: http://bit.ly/2pOjlVU