இணைய வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தியதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்த வேண்டியவர்கள் பட்டியலில் சிறிஸ் மெசினாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரோடு ஸ்டோவ் பாயட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்டுவதை விட, பொருத்தமான ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி வாழ்த்துச்சொன்னால் உள்ளங்குளிர ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில், இணைய உலகில் ஹாஷ்டேக் உருவாகி பிரபலமானதில் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒருவர் அதை உருவாக்கியவர். இன்னொருவர் அதை வழிமொழிந்து ஆதரித்தவர்.
ஹாஷ்டேக் என்றதும், # எனும் குறியீட்டுடன் இணையத்தில் குறிப்பாக டிவிட்டரில் அடிக்கடி பகிரப்படும் பதங்கள் நினைவுக்கு வரும். நீங்களே கூட இத்தகைய பதகங்களை உருவாக்கி பகிர்ந்து இருக்கலாம் அல்லது, உங்களை கவர்ந்த தலைப்புகளுடன் இத்தகைய பதத்தை குறிப்பிட்டு நீங்களும் இணைந்திருக்கலாம். # முன்குறிப்புடன் அமையும் பதங்கள் ஹாஷ்டேக் என குறிப்பிடப்படுகின்றன. சமூக ஊடக மொழியின் பிரதான குறுக்கெழுத்து என இதை சொல்லலாம். வெறும் குறுக்கெழுத்து மட்டும் அல்ல, இணைய இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தவும், ஒருங்கிணைக்கவும் உதவும் ஆன்லைன் ஆயுதம். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களும் இந்த கருத்தை முழு மனதோடு ஆமோதிப்பார்கள்.
அந்த அளவுக்கு ஹாஷ்டேக் சமூக ஊடக உலகில் பிரபலமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கின்றன. ஒரு கணக்குப்படி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் மட்டும் தினந்தோறும் 125 மில்லியன் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு பகிரப்படுகின்றன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சேவைகளில் பகிரப்படுபவை தனிக்கணக்கு.
ஹாஷேக் அதிகம் பயன்படுத்தப்படுவதற்கான காரணம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. ஏனெனில் இவை குறும்பதிவுக்கடலில் அவரவர் தங்கள் நோக்கத்திற்கும், தேவைக்கும் பொருத்தமான குறும்பதிவுகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டியாக இருக்கின்றன. குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை ஒருங்கிணைப்பதற்கான குறியீடாக அமைவதன் மூலம் ஹாஷ்டேக் இதை சாத்தியமாக்குகிறது. அது மட்டும் அல்ல, குறும்பதிவுகள் சார்ந்த உரையாடலை மேற்கொள்வதற்கான வழிகாட்டியாகவும் ஹாஷ்டேக் அமைகிறது.
ஹாஷ்டேக் மட்டும் உருவாக்கப்படவில்லை எனில் டிவிட்டர் சேவை இந்த அளவு பயனுள்ளதாக இருந்திருக்குமா? என்பது தெரியவில்லை. டிவிட்டர் உருவாக்கப்பட்ட போதே, அதில் குறும்பதிவுகளை வெளியிடுவது, நண்பர்களை பின் தொடர்வது உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன. ஆனால் அதில் கூச்சலும், குழப்பமும் அதிகம் இருந்தது. தொடர்ச்சியாக வெளியாகி கொண்டிருக்கும் குறும்பதிவுகளில் பொருத்தமானவை பிரித்தறிவதற்கான வழி இல்லாமல் இருந்தது.
ஆனால், ஹாஷ்டேகின் அறிமுகம் இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு காண உதவியது. # எனும் அடையாளத்துடன் குறிப்பிட்ட மையக்கருத்தை சுட்டிக்காட்டும் குறிச்சொல்லை சேர்ப்பதன் மூலம் தொடர்புடைய குறும்பதிவுகளை எல்லாம் அந்த குறிச்சொல் கீழ் அடையாளம் காணலாம். உதாரணத்திற்கு இந்தியா கிரிக்கெட்டில் பெரிய அளவில் வெற்றி பெறும் போது, # இந்திய கிரிக்கெட் எனும் குறியீட்டை உருவாக்கி குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டால், இந்திய கிரிக்கெட் வெற்றி தொடர்பாக வெளியாகும் குறும்பதிவுகள் அனைத்தையும் இதன் கீழ் படித்துவிடலாம். இது ஒரு விவாதச்சரடாகவும் தொடரும். இந்த குறியீட்டை கிளிக் செய்தால் போதும், தொடர்புடைய குறும்பதிவுகளை வரிசையாக காணலாம்.
இந்த வசதி தான் டிவிட்டரில், தொடர்ந்து கைகொடுக்கிறது. சமூக ஊடக பயன்பாட்டல் வளைகுடா நாடுகளில் 2010 ம் ஆண்டில் வெடித்த அரபு வசந்தம் புரட்சியின் போது போராட்டக்கார்கள் கருத்துக்களை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் ஆயுதம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, பிளாக் லைவ்ஸ் மேட்டர் எனும் ஹாஷ்டேக் சமத்துவத்திற்காகவும் மனிதநேயத்திற்காகவும் குரல் கொடுக்க பயன்பட்டது. பேரிடர் காலங்களில் உதவிகளையும், நிவாரண பணிகளையும், பயனுள்ள உயிர்காக்கும் தகவல்களை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் கைகொடுக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது, #சென்னை ரைன்ஸ், #சென்னை பிளட்ஸ் போன்ற ஹாஷ்டேகுகள் உதவிகளை ஒருங்கிணைக்க வழிகாட்டின. மெரினாவில் தைப்புரட்சி அமைதியாக மலர்ந்து வெற்றி பெற்றதிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஹாஷ்டேக் முக்கிய பங்கு வகுத்தன. தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களை முன்னிறுத்திவதிலும் ரசிகர்கள் ஹாஷ்டேக் ஆராதனை செய்வதை பார்க்கலாம்.
டிவிட்டரில் அறிமுகமாகி பின்னர் பேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக ஊடககங்களிலும் பிரபலமான ஹாஷ்டேக் இன்று, மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்யும் இணைய கூறுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இந்த பெருமை எல்லாம் ஒருவிதத்தில் சிறிஸ் மெஸினாவையே சேரும். அவர் தான், 2007 ம் ஆண்டில் முதல் முதலாக # குறியீட்டின் பயன்பாட்டை முன்வைத்தார். அப்போது அவர் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற சவுத் பை சவுத்வெஸ் எனும் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாடு தொடர்பான குறும்பதிவுகளை அவரும் நண்பர்களும் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனார். ஆனால் அந்த மாநாட்டில் ஆர்வம் இல்லாத மற்ற நண்பர்கள் இதை ரசிக்கவில்லை. நாம் முக்கியமாக கருதாத ஒரு மாநாடு தொடர்பான தகவல்கள் ஏன் நம்முடைய டைம்லைனில் ஏன் எட்டிப்பார்க்கின்றன என்று வெறுப்படைந்தனர்.
அப்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மெஸினார் இது பற்றி யோசித்துப்பார்த்தார். டிவிட்டரில் எல்லா குறும்பதிவுகளையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல், ஒருவர் தனக்கு தேவையானதை மட்டும் பார்ப்பதற்கான வழி என்ன எனும் கேள்வியோடு நண்பர்களோடும் பேசிப்பார்த்தார். டிவிட்டரில் விவாத குழுக்களை அமைக்கலாம் எனும் யோசனை உண்டானது. ஆனால் அது சிக்கலாக இருக்கும் என நினைத்தார். மிக எளிதான ஒரு வழி அவருக்கு தேவைப்பட்டது. இதனிடையே தான், இணைய அரட்டை அறைகளில் விவாதங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் பவுண்டு (#) குறியீடு இதற்கு பொருத்தமாக இருக்கும் எனத்தோன்றியது. உடனே கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன் என மனதுக்குள் பாடியபடி இந்த தகவலை குறும்பதிவாக பகிர்ந்து கொண்டார். ; http://chrismessina.me/
இது தொடர்பாக விரிவான விளக்கப்பதிவு ஒன்றையும் எழுதி வெளியிட்டார். சில நாட்கள் கழித்து ஸ்டோவ் பாய்ட் எனும் தொழில்நுட்ப வல்லுனர், இந்த கருத்தை ஆதரித்து ஒரு பதிவை வெளியிட்டார். ; http://stoweboyd.com/post/39877198249/hash-tags-twitter-groupings
ஹாஷ்டேக் எனும் பதத்தை அதில் அவர் முதல் முறையாக பயன்படுத்தியிருந்தார். இதன் பிறகு மெல்ல இந்த குறியீடு பயன்பாட்டிற்கு வந்தது. பயனாளிகள் மத்தியில் பிரபலமாகத்துவங்கிய பிறகு டிவிட்டரும் இதற்கு அதிகாரபூர்வமாக ஆதரவு அளிக்கவே சமூக ஊடக பதிவுகள் ஹாஷ்டேக் மயமாகத்துவங்கின.
இந்த குறியீட்டிற்கான மூல எண்ணத்தை முன் வைத்த மெஸினா இப்போது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நண்பராக செயல்பட்டு வருகிறார். ஓபன் சோர்ஸ் சமூகத்தின் ஆதாரவாளராக இருக்கும் மெஸினா, ஹாஷ்டேக் எண்ணத்தை ஒரு போதும் காப்புரிமை பெறவோ அதிலிருந்து லாபம் பெறவோ நினைக்கவில்லை என அவர் கூறியிருக்கிறார். இணைய சமூகத்திற்கான தனது பரிசளிப்பாக இந்த எண்ணத்தை கருதுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஹாஷ்டேக் அறிமுகமாகி பத்தாண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
——-
தளம் புதிது; ரோபோ முதலாளிகள் வருகிறார்கள்
செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தலாம் எனும் கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. இப்போதே கூட பலதுறைகளில் ரோபோக்களின் ஆதிக்கத்தை உணரலாம். ரோபோ பெருக்கத்தால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு பெருமளவு பறிபோகலாம் எனும் அச்சமும் வலுப்பெற்று வருகிறது.
இந்த அச்சமும், கவலையும் உங்களுக்கும் இருந்தால், வருங்காலத்தில் ரோபோ மேலதிகாரி கீழ் பணியாற்றும் நிலை வருமா என்பதை சோதித்துப்பார்க்கலாம். ’வில் எ ரோபோ பி மைபாஸ்’ எனும் இணையதளம் இந்த கேள்விக்கு பதில் சொல்கிறது.
இந்த தளத்தில் ஒருவர் தான் பணியாற்றும் துறையை குறிப்பிட்டால், அந்த துறையில் ரோபோக்களின் ஆதிக்கம் மற்றும் ரோபோ சி.இ.ஒ வரும் வாய்ப்பு தொடர்பான தகவல் அளிக்கப்படுகிறது. பல்வேறு துறைகள் தொடர்பான கணிப்பை தெரிந்து கொள்ளலாம்.
உத்தேசமான கணிப்பு தான் என்றாலும் எதிர்காலம் பற்றி சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆர்டர் கியுலியன் என்பவர் இந்த இணையதளத்தை அமைத்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தொடர்பான புத்தகம் ஒன்றையும் இவர் எழுதியிருக்கிறார்.
இணையதள முகவரி: http://www.willrobotbemyboss.com/
செயலி புதிது; ஒளிப்படங்களை சீராக்க உதவும் செயலி
ஒளிப்படங்களை எடுக்க உதவும் செயலிகளைப்போலவே, ஒளிப்படங்களை திருத்தி மேம்படுத்த உதவும் செயலிகளும் அவசியம். இந்த வகையில், சிறந்த செயலிகளில் ஒன்றாக ஸ்னேன்சீட் செயலி தொழில்நுட்ப வலைத்தளங்களால் வர்ணிக்கப்படுகிறது.
ஒளிப்படங்களை சீராக்க இந்த செயலியில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. 29 வகையான டூல்கள் மற்றும் பில்டர்கள் இருக்கின்றன. ஒளிப்படங்களை கிராப் செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளலாம். 90 கோணத்தில் மாற்றி அமைக்கலாம்.
தேவையில்லாத பகுதிகள் அல்லது இடையூறுகளையும் எளிதாக நீக்கலாம். மேலும் பலவித மாற்றங்களை செய்யும் வசதி இருக்கிறது. முக்கியமாக பழைய மாற்றங்களை திரும்பி பார்த்து மீட்கும் வசதியும் இருக்கிறது. கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு தவிர ஐபோனிலும் செயல்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு: https://support.google.com/snapseed#topic=6155507