திருவிளையாடல் திரைப்படத்தின் சிவபெருமான் –புலவர் தருமி உரையாடலை இணைய யுகத்திற்கு ஏற்ப அப்டேட் செய்ய வேண்டும் எனில், பேஸ்புக்கில் செய்யக்கூடிவையும், செய்யக்கூடாதவையும் என தருமி கேட்பதாக சேர்த்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு பேஸ்புக் பயன்பாட்டில் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. புதிய நட்பை தேடிக்கொள்ளவும், நண்பர்களோடு உரையாடவும் பேஸ்புக் அருமையான வழி தான். ஆனால் பேஸ்புக்கில் பகிரும் தகவல்கள் நட்பையும், விருப்பங்களையும் (லைக்ஸ்) மட்டும் பெற்றுத்தருவதில்லை. பல நேரங்களில் வில்லங்கத்தையும் தேடித்தரலாம்.
பேஸ்புக் நட்புக்கான வலைப்பின்னல் சேவை என்றாலும், பெரும்பாலானோரால் அது ஒரு வெளியீட்டு சாதனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மனதில் உள்ள எண்ணங்களை பகிரவும், நாட்டு நடப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கவும் பேஸ்புக் சுவற்றை பயன்படுத்துவது என்பது அதன் பயனாளிகளுக்கு இயல்பாக இருக்கிறது. பலரும் ஆழமான கருத்துக்களை நீள் பதிவுகளாக வெளியிடவும் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். வலைப்பதிவு உலகில் இயங்கி வந்தவர்களில் பலர் பேஸ்புக்கிற்கு மாறிவிட்டதாகவும் தெரிகிறது.
மிகை பகிர்வு!
எதை எடுத்தாலும் பேஸ்புக்கில் வெளியிடுவது என்பது மிகை பகிர்வு பழக்கமாக மாறி இருப்பது மற்றும் கலாய்த்தால், கேலி செய்தல், சண்டையிடுதல், துவேஷம் கக்குதல், தனிமனித தாக்குதல் உள்ளிட்டவை பேஸ்புக் பயன்பாடு தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேஸ்புக்கில் நல்லவையும் உண்டு, தீயவையும் உண்டு எனும் நிலையில், அந்த சேவையை சரியாக பயன்படுத்துவது என்பது பயனாளிகளின் கைகளில் தான் இருக்கிறது.
பேஸ்புக் நிலைத்தகவல்களை எப்படி வெளியிடுவது என்பதும், மற்றவர்கள் தகவல்களுக்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுவதும் அவரவர் விருப்பமும், உரிமையும் சார்ந்தது. பேஸ்புக் சேவையை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாக விதிமுறைகளை எல்லாம் உருவாக்க முடியாது என்றாலும், பயனாளிகள் தங்கள் நலன் கருதி (மற்றவர்கள் நலனுக்காகவும் தான்) பேஸ்புக்கில் சில அடிப்படையான நெறிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது என இணைய வல்லுனர்கள் கருதுகின்றனர்.
நண்பர்கள் மட்டும்
முதல் விஷயம், சமூக வலைப்பின்னல் சேவையாக பேஸ்புக்கின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். பேஸ்புக்கை நண்பர்களின் இருப்பிடம் என நீங்கள் கருதினாலும், உங்கள் பதிவுகளை கவனித்துக்கொண்டிருப்பது நண்பர்கள் மட்டும் அல்ல; அறிமுகம் இல்லாதவர்களும் தான். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என விரியும் நட்பு வலையில் நேரடியாக அறிமுகம் இல்லாதவர்களும் இருக்கலாம். எனவே பொதுவெளியில் எதை எல்லாம் பகிர்வோமோ அவற்றை மட்டுமே பேஸ்புக் சுவற்றில் பகிர்வது சரியாக இருக்கும். புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதையே எடுத்துக்கொள்வோம். ஒருவர் தன்னுடைய திருமண ஆல்பத்தை சாலையில் சென்று கொண்டிருப்பவர்களிடம் எல்லாம் காண்பிக்க விரும்புவாரா, என்ன? ஆனால் பேஸ்புக்கில் இதற்கு நிகரான செயலை தான் பலரும் செய்கின்றனர். ஊருக்கு போன படத்தையும், வீட்டில் பிறந்த நாள் அல்லது திருமண நாள் கொண்டாடிய படத்தையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
இப்படி படத்தை பகிர்வதன் நோக்கத்தை விமர்சிப்பதோ, கேலி செய்வதே அல்ல நம் நோக்கம்; இந்த பகிர்வால் ஏற்படக்கூடிய வில்லங்களும், விபரீதங்களும் தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. எத்தனையோ படங்களை இதுவரை வெளியிட்டிருக்கிறோம், எந்த பிரச்சனையும் வந்தது இல்லையே என நீங்கள் கேட்கலாம். வராத வரை சந்தோஷம் என நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் தனிப்பட்ட படங்களை பேஸ்புக் போன்ற பொதுவெளியில் பகிர்வது எப்போதுமே ஆபத்தானது தான். எப்போது என்ன நோக்கில் அவை பயன்படுத்தப்படலாம் எனத்தெரியாது.
உதாரணத்திற்கு கேளிக்கை விருந்து நிகழ்ச்சியில் ஒருவர் உற்சாகமாக மது அருந்தும் புகைப்படத்தை தனது நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் அந்த படத்தை அலுவலக மேலதிகாரி பார்க்கும் நிலை ஏற்பட்டால் என்னாகும் யோசித்துப்பாருங்கள். அதிலும், அவர் உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி அலுவலகத்தில் விடுப்பு கோரியிருந்தால், நிலைமை மோசமாகிவிடும் அல்லாவா! அது மட்டும் அல்ல, இந்த புகைப்படம் காப்பீடு நிறுவனத்தின் பார்வையில் பட்டாலும் சிக்கலாகலாம். குடிப்பழக்கம் என்பது காப்பீடு கோரிக்கை நிராகரக்கப்படுவதற்கான காரணமாக கூட அமையலாம். நிஜ வாழ்க்கையில் இப்படி பாதிப்பு ஏற்பட்டதற்கான கதைகள் இருக்கின்றன. அது மட்டும் அல்ல, புகைப்படங்களில் உள்ளவர்கள் எல்லாம் எங்கங்கோ டேக் செய்யப்படுவதும், முகம் உணர் தொழில்நுட்பம் காரணமாக, புகைப்படங்களில் உள்ளவர்கள் அடையாளம் காணப்படும் சாத்தியத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
புகைப்படம் பகிரும் முன்!
எனவே, புகைப்படங்களை பகிரும் முன், இது அவசியமா? என ஒரு முறை கேட்டுக்கொள்ளுங்கள், புகைப்படத்தை வேறு மாற்று வழியில் நண்பர்களுடன் பகிரலாமா? என்றும் யோசித்துப்பாருங்கள். பல நேரங்களில் நண்பர்களுக்கு இமெயில் மூலம் படங்களை அனுப்பி வைப்பது சரியாக இருக்கும்.
இதே போலவே பணி நிமித்தமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ வெளியூர் பயணங்களுக்கு செல்லும் போது, எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது போல அந்த செய்தியை பகிர்வது தவிர்க்கப்பட வேண்டியது. ஏனெனில் ஒருவர் ஊரில் இல்லை என்பதை அவரது நண்பர்கள் மட்டும் அல்ல, விஷமிகள் யாரேனும் கூட தெரிந்து கொண்டு அந்த தகவலை தவறாக பயன்படுத்த முற்படலாம். பேஸ்புக்கில் வெளியூர் சென்ற தகவலை பார்த்துவிட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் எல்லாம் மேலைநாட்டில் நடந்திருக்கின்றன. பொதுவாகவே இருப்பிடத்தை காட்டும் தகவல்களை பேஸ்புக்கில் மட்டும் அல்ல, இணையத்தில் பகிராமல் இருப்பதே நல்லது. எப்படியும் இணைய நிறுவனங்களும், உளவு மென்பொருள்களும் ஓயாமல் இணையவாசிகளை பின் தொடர்ந்து அவர்கள் இணைய சுவடுகளை கண்காணித்து தகவல்களை சேகரிக்கின்றன. இதில் நம் பங்கிற்கு நாமும் இருப்பிடம் சார் தகவல்களை இணைய சுவடாக பதிவு செய்ய வேண்டுமா?
இருப்பிடம் சார் தகவல்களை தவிர்ப்பது போலவே, தொலைபேசி எண் அல்லது இல்ல முகவரியையும் டைம்லைனில் பகிரக்கூடாது. தொலைபேசி எண் போன்றவை தேவை எனில், இன்பாக்ஸ் வழியே தனியே செய்தி அனுப்பிக்கொள்ளலாம்.
நம்மைப்பற்றிய தகவல்களை பகிர்வதில் கவனமாக இருப்பது போலவே நண்பர்கள், உறவினர்கள் தொடர்பான தகவல்களை பகிர்வதிலும் கவனம் தேவை. அவர்கள் பொதுவெளியில் பகிர விரும்பாத தகவல்களை நாம் வெளியிடாமல் இருப்பதே சரியானது.
துவேஷம் வேண்டாம்
பொதுவாக மற்றவர்கள் மீது துவேஷம் கொண்ட கருத்துகள், மிரட்டல், சீண்டல் கருத்துக்களை வெளியிடாமல் இருக்க வேண்டும். எதிர் கருத்தை கூறினாலும், கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத கேலி, கிண்டலை தவிர்த்தல் நல்லது.
ஒரே விஷயம் தொடர்பாக பதிவுகளை வெளியிடுவதும் ஏற்றதல்ல. இது நண்பர்களை வெறுப்புக்குள்ளாக்கும். உங்கள் ஆர்வம் சார்ந்த கருத்துகள் நிறைய இருந்தால் அதற்கென தனியே ஒரு பேஸ்புக் பக்கம் துவங்கி பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
அதே போல், அறிமுகம் இல்லாதவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டாம். முதலில் அவர்களைப்பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பிறகு முடிவு செய்யுங்கள். நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை பெருமையாக கருத வேண்டாம். அர்த்தமுள்ள உரையாடல் சாத்தியமாக வேண்டும் என்பதே முக்கியம்.
பேஸ்புக்கில் எட்டிப்பார்க்கும் சுவாரஸ்யமான விளையாட்டுகள் மற்றும் செயலிகளை பயன்படுத்தும் முன், அவை உங்களைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க கூடியவை என்பதை மனதில் கொள்ளுங்கள். 20 வருடம் கழித்து நீங்கள் எப்படி தோற்றம் அளிப்பீர்கள் அல்லது நீங்கள் எந்த பிரபலம் போல இருக்கிறீர்கள் என உணர்த்தும் செயலிகள் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் அந்த செயலிகளை பயன்படுத்தும் போது உங்கள் முழு டைம்லைனையும் அவற்றின் வசம் ஒப்படைக்கு நிலை இருக்கலாம் என்பதை பலரும் கவனிப்பதில்லை.
மேலும் பணியிடத்து சிக்கல்கள் குறித்து புலம்புவதும் தேவையில்லாத வம்பை விலை கொடுத்து வாங்குவது போன்றது தான்.
இவைத்தவிர, பேஸ்புக்கின் பிரைவசி செட்டிங் வசதி பற்றியும் அறிந்திருக்க வேண்டும். நிலைத்தகவல்கள் பொது வெளியில் பகிரப்பட வேண்டியவையா அல்லது நண்பர்கள் வட்டத்தில் மட்டும் தெரிய வேண்டியவையா என்பதை தீர்மானிக்கும் வசதி செட்டிங் பகுதியில் இருக்கிறது. தனிப்பட்ட பகிர்வு எனில் அவற்றை நண்பர்கள் வட்டத்தில் மட்டுமே பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும். பேஸ்புக் வழங்கும் பிரைவஸி அமைப்புகள் பற்றி தெரிந்து கொள்வதோடு, பொறுமையாக நேரம் எடுத்துக்கொண்டு பேஸ்புக்கின் பிரைவசி கொள்கை பற்றியும் கூட படித்துப்பார்ப்பது பல விஷயங்களை புரிய வைக்கும்.
–
நன்றி; புதிய தலைமுறை இதழில் நிறைவடைந்த எண்டெர்.நெட் தொடருக்கான எழுதியது.