விண்ணப்ப படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணைய காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்த தளத்தில் பல வகையான படிவங்களை காணலாம். எக்செல் கோப்புகள், வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவம், வரவு செலவு வடிவங்கள் என பல வகையான ஆவண வடிவ நகல்களை இந்த தளத்தில் காணலாம். 2,000 க்கும் மேற்பட்ட வகைகளில் 20,000 க்கும் மேற்பட்ட படிவங்கள், ஆவணங்களின் நகல்கள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
செலவு கணக்கு அறிக்கை, வாராந்திர அறிக்கை, இன்வாய்ஸ், குடும்ப பட்ஜெட் என பலவிதமான வடிவங்கள் இந்த பட்டியலில் உள்ளன. வர்த்தக தேவை முதல் வாழ்க்கை வரை எல்லா விதமான தேவைகளுக்கும் இவை கைகொடுக்கும்.
பயணர்கள் தங்களுக்கு தேவையான வகையை கிளிக் செய்து அதில் உள்ள வடிவங்களில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு தலைப்பாக கிளிக் செய்து பார்க்கலாம் அல்லது தேவையான குறிச்சொல்லை குறிப்பிட்டு தேடிப்பார்க்கலாம். குறிப்பிட்ட ஆவண நகல் வடிவத்தை தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.
இணைய முகவரி: https://www.tidyform.com/
——-\
செயலி புதிது: புதுமையான உரையாடலுக்கு உதவும் செயலி
மெசேஜிங் பரப்பில் புதிய செயலியாக எக்சேட்லி.மி செயலி அறிமுகம் ஆகியுள்ளது. ஐபோன்களுக்கான அறிமுகம் ஆகியுள்ள இந்த செயலி புதுமையான முறையில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை சாத்தியமாக்குவதாக தெரிவிக்கிறது.
மேசேஜிங் செயலிகள் பொதுவாக ஏற்கனவே அறிந்த நபர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. இந்த செயலி மாறுபட்ட வகையில், ஒத்த கருத்துள்ளவர்களி அறிந்து தொடர்பு கொள்ள வழி செய்வதாக தெரிவிக்கிறது.
இந்த செயலியில் ஒளிப்படத்தை பதிவேற்றிவிட்டு, பயனாளிகள் தங்களைப்பற்றி தெரிவித்து அதனடிப்படையில் தங்களைப்போலவே உள்ளவர்களை தேடலாம். பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடலில் ஈடுபடலாம்.
மெசேஜிங் பரப்பில் ஏற்கனவே அதிக செயலிகள் இருக்கும் நிலையில், இந்த புதுமையான செயலியால் எந்த அளவு வரவேற்பை பெற முடியும் என பார்க்கலாம்./
மேலும் தகவல்களுக்கு: http://exactly.me/