ஸ்முல் செயலியை எல்லோரும் கரோக்கி செயலி என குறிப்பிடுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்றாலும், இது ஸ்முலுக்கான சரியான அறிமுகம் இல்லை- முழமையான அறிமுகமும் இல்லை. இசைப்பிரியர்களுக்காக ஸ்முல் உருவாக்கி வரும் பரந்து விரிந்த இசைப்பரப்பில் கரோக்கி செயலி ஒரு அங்கம் அவ்வளவு தான். மற்றபடி ஸ்முலில் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.
ஸ்முல் நிறுவனத்திற்கான விக்கிபீடியா பக்கம் சமூக இசை செயலிகளை உருவாக்குவதில் விஷேச கவனம் செலுத்தி வரும் அமெரிக்க நிறுவனம் என்றே ஸ்முலை குறிப்பிடுகிறது. இசை மூலம் உலகை இணைக்கும் முயற்சியாக ஸ்முல் இணையதளத்தின் அறிமுக வாசகம் தெரிவிக்கிறது.
ஆம், ஸ்முல் சாதாரண இசை சார்ந்த செயலி அல்ல; இசை மூலம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் இணைக்க உதவும் சமூக வலைப்பின்னலாக அது உருவாகி வலுப்பெற்று வருகிறது. அதனால் தான், போர்ப்ஸ் பத்திரிகை கட்டுரை, சந்தேகத்திற்கு இடமில்லாமல் உலகின் சக்தி வாய்ந்த சமூக ஊடகங்களில் ஒன்றாக ஸ்முல் உருவாகி இருப்பதாக குறிப்பிடுகிறது. சும்மாயில்லை, உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேர் இதன் சேவையில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
’’இசை என்பது கேட்டு ரசிப்பதற்கானது மட்டும் அல்ல, என ஸ்முல் நிறுவனம் கருதுகிறது. இசை என்பது உருவாக்குவது, பகிர்வது, கண்டறிவது, பங்கேற்பது மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது என்று ஸ்முல் நம்புகிறது’ என மற்றொரு கட்டுரை ஸ்முலை வர்ணிக்கிறது.
’உங்களை இசைமயமாக்கும் இயந்திரம்’ என இன்னொரு பத்திரிகை கட்டுரை வர்ணிக்கிறது. ஸ்முல் சேவையில் மூழ்கி திளைத்திருக்கும் இசை பிரியர்களுக்கு இந்த வர்ணனை ஜாலம் எல்லாம் தேவையே இல்லை. ஏனெனில் இவற்றை எல்லாம் நடைமுறையில் அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் தான் ஸ்முலின் அபிமானிகளாக இருக்கின்றனர்.
யூடியூப்பை போல ஸ்முல் இசையை ஜனநாயகமயமாக்கி இருப்பதாக பாராட்டப்படுகிறது. ரசிகர்கள் வெற்று தாளம் போட்டி, கைத்தட்டி இசையை கேட்டு மகிழந்தவர்களாக இருந்த காலம் மாறி, அவர்களும் இசையை உருவாக்கி, தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு, இசைமயமான உரையாடலையும், நட்பையும் வளர்த்துக்கொள்ள ஸ்முல் தனது செயலிகள் வாயிலாக வழி செய்திருப்பதாக கருதப்படுகிறது. இன்னும் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் எனில், ஸ்முலை இசைப்பிரியர்களுக்கான பேஸ்புக் எனலாம். அல்லது இசைக்கான இன்ஸ்டாகிராம் என புரிந்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் எப்படி சாதாரண மக்கள் கூட புகைப்படங்களை எடுத்து அவற்றை பில்டர்கள் மூலம் மெருகேற்றி மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனரோ அதே போல ஸ்மூல் செயலிகள் மூலம் சாதாரண ரசிகர்கள் இசையை உருவாக்கி பகிர்ந்து கொண்டு நட்பு வளர்த்துக்கொள்கின்றனர்.
இந்த வகை ஸ்முல் செயலிகளில் ’சிங்! கரோக்கி’ மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. இப்போது செய்திகளிலும் அடிபடத்துவங்கியிருக்கும் இந்த செயலி கரோக்கி முறையில் பாட வழி செய்கிறது. ஒரு பாடலின் பின்னணி இசை மட்டும் ஒலிக்க, அதில் பாடியவர் குரலுக்கு பதிலாக ரசிகர்கள் தங்கள் குரலில் பாடிக்கொள்ளும் வசதியே கரோக்கி என குறிப்பிடப்படுகிறது. ஜப்பானில் கரோக்கி இசை மிகவும் பிரபலம். அங்கு கரோக்கி பாட உதவும் பார்கள் எல்லாம் இருக்கிறது. நமக்காக ஆர்க்கெஸ்ட்ரா ஒன்று இசை அமைக்க நடுவே நாம் மைக் பிடித்து பாட முடிந்தால் எப்படி இருக்கும்! இந்த அனந்த அனுபவத்தை தான் கரோக்கி இசை வழங்குகிறது.
இணையத்தில் இதை சாத்தியமாக்கும் இணையதளங்களும், செயலிகளும் அநேகம் இருக்கின்றன. இந்த இடத்தில் ஸ்முல் செயலி வருகிறது. ஸ்முலின் கரோக்கி செயலி, பிரபலமான மெட்டுகளுக்கு ரசிகர்கள் பாட வழி செய்வதோடு, அந்த ஒலிப்பதிவை பலவிதங்களில் பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த பகிர்வுகள் விதவிதமான உரையாடலாகவும் மலந்து நட்பு வலை விரியச்செய்கிறது.
இவையே ஸ்முலை இசை சமூக ஊடகம் என சொல்ல வைக்கிறது. ஸ்முலின் இந்த தன்மையை புரிந்து கொள்ள அதன் பூர்வ கதையையும், முக்கியமாக அதன் நிறுவனர்களாக இசை பிரம்மாக்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு கரோக்கி ஸ்முலின் முதல் செயலி அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
2008 ல், ஸ்முல் ஒரு இசை ஸ்டார்ட் அப் நிறுவனமாக அமெரிக்காவில் உருவானது. ஆப்பிளின் ஐபோன் அறிமுகமான அடுத்த ஆண்டில் தான் ஸ்முல் அறிமுகமான ஆண்டு என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் ஸ்முல் உருவானதில் ஐபோனுக்கு முக்கிய பங்கிருக்கிறது. ஐபோன் இல்லாமல் ஸ்முல் இல்லை. அதோடு புதுயுக போனாக ஐபோன் பிரபலமாகி பெரும் வரவேற்பை பெறுவதற்கு காரணமாக அமைந்த ஆரம்ப கால அருமையான செயலிகளில் ஸ்மூலும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஜி வாங் என்பவரும், அவரது மாணவருமான ஜெப் ஸ்மித் என்பவரும் இணைந்து தான் ஸ்முல் நிறுவனத்தை துவக்கினர். வாங்கை இசை திறனும், தொழில்நுட்ப அறிவும் இணைந்த கில்லாடி என்று தான் சொல்ல வேண்டும். இசையையும், தொழில்நுட்பத்தையும் இணைந்து பல ஜாலங்களை செய்யலாம் என்று அறிந்திருந்த வாங், இசை சார்ந்த புரோகிராம்களை உருவாக்குவதற்காக என்றே சங்க் எனும் கம்ப்யூட்டர் மொழியையும் உருவாக்கி இருந்தார். அதோடு லேப்டால் கம்ப்யூட்டர்களில் உள்ள ஆக்சலரேட்டர் எனும் கருவியை கொண்டு ஒலிக்குறிப்புகளை உண்டாக்கும் லேப்டாப் ஆர்க்கெஸ்ட்ராவையும் உருவாக்கி இருந்தார்.
ஒருமுறை வாங் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அங்கு பிஎச்டி மாணவராக இருந்த ஜெப் ஸ்மித், அதைக்கேட்டு அசந்து போய்விட்டார். அந்த தாக்கத்தோடு, வாங் எண்ணங்களை வர்த்தக நோக்கிலான செயலி மூலம் மக்களிடம் கொண்டு செல்லலாம் என்று கூறினார். இதன் பயனாக வாங்கை இணை நிறுவனராகவும், ஸ்மித் சி.இ.ஓ. வாகவும் கொண்டு ஸ்முல் நிறுவனம் துவங்கியது. இசை உருவாக்கத்தை மையமாக கொண்ட புதுமையான சமூக வலைப்பின்னல் சேவையை உருவாக்க வேண்டும் என்பது தான் ஸ்மித்தின் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தை கூறி நிறுவனத்திற்கான முதல் கட்ட நிதியையும் எப்படியோ திரட்டி பணிகளையும் துவக்கிவிட்டார்.
அவர்கள் உருவாக்கிய முதல் செயலி நோக்கியா போனுக்காக இருந்தது. ஆனால் அதற்குள் ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்தது. ஒரு கையடக்க கம்ப்யூட்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஐபோன் அற்புதமாக இருக்கவே அதற்கேற்ற செயலியை வாங் மற்றும் ஸ்மித் உருவாக்கத்துவங்கினர். இப்படி அறிமுகமானது தான் சோனிக்லைட்டர் செயலி. இதற்குள் ஆப்பிள் நிறுவனமும் செயலிகளுக்கான ஐஸ்டோர் கடையையும் திறந்துவிடவே சோனிக்லைட்டர் அறிமுகமாகி அட்டகாசமான வரவேற்பை பெற்றது.
சோனிக்லைட்டரை விளையாட்டான செயலி என்று தான் சொல்ல வேண்டும். போனுக்குள் ஒரு லைட்டர் இருந்து அதை அப்படியே ஏற்றி ஜோதியாக ஒளிரச்செய்தால் எப்படி இருக்கும். போனில் லைட்டர் ஒளி எரிவது போன்ற தோற்றம் சுவாரஸ்யமாக இருந்தது என்றால், போனை பக்கவாட்டில் அசைதால் லைட்டர் ஒளியும் அதற்கேற்ப வளைந்து கொடுத்தது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. அது மட்டும் அல்ல, இந்த லைட்டர் ஒளியை ஐபோன் திரை மீது ஊதி அணைக்கவும் செய்யலாம். அப்போது திரையில் இருந்து புகை வருவது போன்ற தோற்றமும் உண்டாகும். இந்த சாக்சங்களால் வியக்க வைத்த சோனிக்லைட்டர் செயலி லட்சக்கணக்கில் தரவிறக்கம் செய்யப்பட்டு பிரபலமானது. இந்த லைட்டர் தோற்றத்தை ஐபோன் பயனாளிகள் உலகின் எந்த மூளையில் உள்ள சக ஐபோன் பயனாளிகளுடனும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இந்த பகிர்வுத்தன்மையே சோனிக்லைட்டர் செயலியை மேலும் சுவாரஸ்யமாக்கி அதன் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியது.
ஐபோன் அற்புதத்தை உணர்த்திய வெற்றிகரமான செயலிகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது. சோனிக்லைட்டரின் வெற்றியை அடுத்து மேலும் அசத்தலான ஆக்கரினா செயலியை ஸ்முல் அறிமுகம் செய்தது. ( ஆக்கரினா என்பது ஒரு பழங்கால இசைக்கருவி)
ஆக்கரினா, ஐபோனையே ஒரு இசைக்கருவியாக மாற்றும் செயலியாக அமைந்தது. ஐபோனை வாயருகே வைத்துக்கொண்டு அதன் மீது ஊதினால், குழலில் இருந்து ஒலி வருவது போல இந்த செயலி உருவாக்கப்பட்டிருந்தது. அது மட்டும் அல்ல, திரையில் உள்ள நான்கு துளைகளின் மீது விரல்களை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தால் ஒலியின் தாள லயத்தை மாற்றலாம். கொஞ்சம் பழகிவிட்டால், இந்த இசை செயலியை இயக்குவதில் தேர்ச்சி பெற்று இனிமையான இசையை உருவாக்குவதும் கூட சாத்தியம் தான்.
ஆக்கரினா செயலி அறிமுகமான போது, ஐபோனை ஒரு இசைக்கருவியாக மாற்றும் தன்மைக்காக அமோக வரவேற்பை பெற்றது. கையில் இருக்கும் போனை இசைக்கருவியாக மாற்றுவதே ஒரு புதுமை தான். இன்று ஸ்மார்ட்போன் சார்ந்த கித்தார் உள்ளிட்ட இசைக்கருவி செயலிகளுக்கு எல்லாம் முன்னோடியாக அமைந்த ஆரம்ப கால ஐபோன் இசை செயலிகளில் ஆக்கரினாவும் ஒன்று. ஆனால் ஆக்கரினா செயலி மற்ற செயலிகள் போல முன் தீர்மானிக்கப்பட்ட ஒலிக்கோவைகளை வழங்காமல், பயனாளிகளின் ஊதும் போது வரும் காற்றின் போக்கிற்கு ஏற்ப தனித்தன்மை வாய்ந்த ஒலியை உருவாக்கி தரக்கூடியதாக இருந்தது. அந்த அளவுக்கு மைக்ரோபோனின் உணரும் தன்மையை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால், இசைப்பது என்பது இதன் ஒரு பகுதி தான். இந்த இசையை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும் என்பது தான் ஆக்கரினாவின் இன்னொரு தனிச்சிறப்பாக அமைந்தது. ஆம், ஆக்கரினா பயனாளிகள் தங்களைப்போலவே மற்ற பயனாளிகள் உருவாக்கும் ஒலிக்கோவைகளை கேட்டு மகிழலாம். செயலியில் உள்ள பூமி உருண்டை பகுதியில், இப்போது உலகில் எந்த மூளையில் எல்லாம் பயனாளிகள் ஆக்கரினாவை இசைத்துக்கொண்டிருக்கின்றர் என்பதை பார்த்து, அங்கி கிளிக் செய்து கேட்டு மகிழலாம். அதே போல தாங்கள் உருவாக்கும் இசையையும் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் இசையை சேமித்தும் வைக்கலாம். இதற்கான பக்கத்தை ஆக்கரினா வலைமனையிலேயே உருவாக்கி கொள்ளலாம். இமெயில் மற்றும் பேஸ்புக் வாயிலாக நட்பு வட்டத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த சமூகத்தன்மையே ஆக்கரினா செயலியை இசைப்பிரியர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.
உண்மையில், ஐபோனின் கையடக்க கணிணி ஆற்றல் மற்றும் இணையத்தின் வலைப்பின்னல் தன்மை இரண்டையும் அழகாக பயன்படுத்திக்கொண்ட இசை செயலியாக ஆக்கரினா அமைந்தது.
இந்த செயலியின் வெற்றிக்கு பிறகு ஸ்முல் மேலும் பல செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. எல்லாமே சமூக பகிர்வு தன்மையை கொண்டவை. இவற்றில் ஒன்று தான் கரோக்கி செயலி. கரோக்கி செயலியில் இளம் பாடகர்கள் மற்றும் இசை ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் குரலில் மெட்டுக்கு ஏற்ப பாடி பதிவு செய்து கொள்ளலாம். குரல் வளத்தை விட்டுத்தள்ளுங்கள், இசை சூழலில் தன்னை மறந்து பாடுவதே ஒரு பரசவமான அனுபவம் தான். இந்த அனுபவத்தை பெறுவதோடு, இப்படி பாடியதை பதிவு செய்து நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். ஸ்முல் பயனாளிகளோடும் பகிர்ந்து கொள்ளலாம். விரும்பினால் ஒரு பாடலை மற்றவர்களோடு சேர்ந்தும் பாடலாம். இது நல்ல இசை பயிற்சியாகவும் அமையும். யூடியூப்பில் போய் பார்த்தல் இப்படி இணைந்து பாடப்பட்ட பாடல்களின் வீடியோக்களை பார்க்கலாம். பாடும் திறனை மெருகேற்றிக்கொள்வதற்கான அம்சமும் இந்த செயலியிலேயே இருக்கிறது.
பிரபலமான பாடகர்களுடன் ரசிகர்கள் ஒரு பாடலை டூயட்டாக சேர்ந்து பாடிய அனுபவத்தையும் ஸ்முல் வழங்கியிருக்கிறது. இதில் ஒரு சில ரசிகர்கள் லட்சக்கணக்கானோரை கவர்ந்து இணைய நட்சத்திரமாகவும் உருவாகி இருக்கின்றனர். 2011 ல் ஜப்பானின் சக்திவாய்ந்த பூகம்பம் உலுக்கிய போது, உலகம் முழுவதும் உள்ளவர்கள் ஸ்முலில் ஒன்றிணைந்து என் தோள் மீது சாய்ந்து கொள்ளுங்கள் என பொருள்படும் லீன் ஆன் மீ பாடலை பாடி நெகிழ வைத்தனர்.
இசைப்பிரியர்கள் இசை மூலம் தங்களுக்குள் தொடர்பு கொள்வதையும், இசையால் பேசிக்கொள்வதையும் ஸ்முல் சாத்தியமாக்குகிறது. இசையை கேட்டு ரசிப்பது மட்டும் ரசிகர்களின் வேலை அல்ல, அவர்கள் இசையை உருவாக்கலாம், பகிர்ந்து கொள்ளலாம், புதிய இசையை கண்டறிலாம் என்கிறது ஸ்முல். அதுவே அதன் பலமாக இருக்கிறது.
இணைப்புகள்:
- ஸ்முல் ஆக்கரீனா பற்றி அறிய: https://www.smule.com/ocarina/original
- ஸ்முல் பற்றிய போர்ப்ஸ் கட்டுரை; https://www.forbes.com/sites/mnewlands/2016/09/20/smule-has-changed-the-music-industry-completely-heres-how/#5e20381b41c0
- ஸ்முல் சி.இ.ஒ பேட்டி- http://techblogwriter.co.uk/107-jeff-smith-smule-founder-ceo-talks-rise-social-music-apps/
- ஸ்முல் தொடர்பான நியூயார்க் டைம்ஸ் கட்டுரை- http://www.nytimes.com/2011/11/27/magazine/smule.html?mcubz=1
=
நன்றி. யுவர் ஸ்டோரி தமிழ் இணைய இதழில் எழுதியது