இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல இணயதளங்களும், செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கை ஆர்வலர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைக்கும் வகையில் மேலும் இரண்டு இணையதளங்கள் இந்த வரிசையில் சேர்ந்துள்ளன. முதல் இணையதளமான ‘நோ யுவர் பிஷ்’ தளம் இந்தியாவில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றால், இரண்டாவது தளமான ’பிராக் ஐடி’ ஆஸ்திரேலியாவில் தவளைகள் நலன் காக்க உருவக்கப்பட்டுள்ளது. இரண்டுமே, இயற்கை நலன் காக்க இணையத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான அழகான உதாரணமாக விளங்குபவை.
முதலில் ’நோ யுவர் பிஷ்’ இணையதளம் பற்றி பார்க்கலாம். இந்த தளம் கடல் உணவை பொறுப்பான முறையில் சுவைக்க வேண்டும் என வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக என்றே மீன் நாட்காட்டியையும் உருவாக்கியுள்ளனர். இந்த நாட்காட்டியை பார்த்து, எந்த காலத்தில் எந்த வகை மீனை சாப்பிடலாம், எந்த வகை மீனை தவிர்க்கலாம் என தெரிந்து கொள்ளலாம். மீன் வளம் குறையாமல் பாதுகாக்க இத்தகைய கட்டுப்பாடு அவசியம் எனும் அடிப்படையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இருபக்கமும் நீண்ட கடற்கரையை கொண்டுள்ள நம் நாடு அள்ள அள்ள குறையாக மீன் வளத்தையும் கொண்டிருக்கிறது தான். ஆனால் அதற்காக எந்தவித வரைமுறையும் இல்லாமல் மீன் வளத்தை சூறையாடிக்கொண்டிருந்தால் காலப்போக்கில் மீன் வளம் குறைந்துவிடும் அபாயம் இருக்கவே செய்கிறது. அதிலும் சில குறிப்பிட்ட மீன் இனங்களே அழிந்தே போய்விடலாம் என எச்சரிக்கப்படுகிறது. இந்த நிலையை தவிர்ப்பதற்காக தான், மீன்கள் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கப்படும் வழக்கம் அமலில் இருக்கிறது.
இந்த கட்டுப்பாடு மட்டும் போதாது, சுய கட்டுப்பாடும் அவசியம் என வலியுறுத்தும் வகையில் மயுரேஷ் கங்கல் உள்ளிட்ட மீன் வள ஆர்வலர்கள் மேலே சொன்ன இணையதளத்தை அமைத்துள்ளனர். கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மீன் உணவை சுவைக்க வழி செய்வதற்கான தன்னார்வ முயற்சி இந்த தளம் என இவர்கள் குறிப்பிடுகின்றனர். மீன் வளம் தொடர்பான தகவல்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் முன்வைத்தால் மக்கள் தாங்களாகவே முன்வந்து சரியான முடிவை எடுப்பார்கள் என்பதும் இவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
அதாவது, மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலத்தை அறிந்து கொண்டு, அந்த காலத்தில் குறிப்பிட்ட மீன்களை சாப்பிடாமல் பொதுமக்களே தவிர்க்க வேண்டும் என இவர்கள் விரும்புகின்றனர். இதற்கான தகவல்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் மீன்வள நாட்காடியாகவும் உருவாக்கி தந்துள்ளனர். இந்த நாட்காட்டியில் எந்த எந்த மாதங்களில் எந்த வகை மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல் எந்த வகை மீன்களை எந்த மாதங்களில் சாப்பிடலாம் என்றும் உணர்த்தப்பட்டுள்ளது.
பல ஆண்டு ஆய்வுகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்களை இப்படி எளிதான முறையில் தொகுத்தளித்திருக்கின்றனர். இந்த நாட்காட்டியை பார்த்து மீன் உணவு பிரியர்களே, மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்காத வகையில் தங்கள் தேர்வுகளை அமைத்துக்கொண்டால் மீன் வளத்தை காக்கும் செயலாக அது அமையும் அல்லவா? அந்த எண்ணத்தில் தான் இந்த தளத்தை அமைத்துள்ளனர். மீன் உணவுப்பிரியர்கள் மட்டும் அல்லாமல் கடலோரப்பகுதியில் உள்ள உணவு விடுதிகளிலும் இந்த நாட்காட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். குஜராத் முதல் கேரளா வரையான கடற்கரைப்பகுதியில் பயன்படுத்தும் வகையில் இந்த நாட்காட்டி அமைந்துள்ளது. மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்தால் நன்றாக இருக்கும் அல்லவா! http://knowyourfish.org.in/our-calendar/
இதே போல ஆஸ்திரேலியாவில் தவளைகள் நலன் காப்பதற்கான விழிப்புணர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நாடு தழுவிய அளவில் தவளை கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா பரந்து விரிந்த பெரிய நாடு என்பதால் ஆய்வாளர்கள் மட்டுமே இதை செய்து முடிப்பது சாத்தியம் இல்லை. அதனால் இதில் பொதுமக்கள் பங்களைப்பை கோரியுள்ளனர். தவளையை கண்டால் தகவல் தெரிவிப்பதற்காக என்று ஒரு பிரத்யேக செயலியையும் உருவாக்கி தந்துள்ளனர்.
இந்த திட்டத்தில் குடிமக்கள் விஞ்ஞானியாக பங்கேற்க ஆர்வம் கொண்டவர்கள் தவளையை கண்டுணரும் திட்டத்தின் செயலியை தங்கள் போனில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தவளைகளை தேடி புறப்பட வேண்டும். தங்கள் பகுதியில் தவளையை காணும் போது அதன் ஒலியை மட்டும் பதிவு செய்து இந்த செயலி மூலம் சமர்பித்தால் போதுமானது. விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் குழு, இந்த ஒலிப்பதிவுகளை கேட்டு அது எந்த வகை தவளைக்கு உரியது என கண்டறியும். இதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் வாழும் தவளைகளின் எண்ணிக்கையையும் கண்டறிய முடியும்.
ஆஸ்திரேலியாவில் மொத்தம் 240 வகைக்கு மேல் வகைப்பட்ட தவளைகள் வாழ்கின்றன. இவற்றில் பல அழியும் நிலையை நோக்கி தள்ளப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் தவளை கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம், எந்த வகையான தவளைகள் ஆபத்தில் இருக்கின்றன என்பதை எளிதாக அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
தவளைகள் சுற்றுசூழல் நோக்கில் முக்கியமான விலங்காக அமைகின்றன. ஏனெனில் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களினால் முதலில் பாதிக்கப்படும் விலங்குகளில் ஒன்றாக தவளைகள் இருக்கின்றன. எனவே தவளைகள் நலனை கண்காணிப்பதன் மூலம் சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில் தவளைகளை காப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கு ஆர்வம் அளிக்கும் வகையில் தவளைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் வாழும் முறை உள்ளிட்ட தகவல்களும் இந்த திட்டத்திற்கான இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் தகவல்களுக்கு: https://www.frogid.net.au/
தளம் புதிது; டிவிட்டர் பதிவுகளை நீக்க உதவும் தளம்
சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும் சில தகவல்கள் பயனாளிகளுக்கு பாதகமாக அமையலாம். இப்படி பழைய சமூக ஊடக பகிர்வுகளால் வேலையை இழப்பு உள்ளிட்ட பாதிப்புக்கு பலர் இலக்காகி இருக்கின்றனர். எனவே சமூக ஊடகங்களில் கொஞ்சம் பின்னோக்கி பார்த்து தேவையில்லாத தகவல்களை நீக்கி விடுவது நல்லது தான். ஆனால் இது அத்தனை எளிதானது அல்ல. பெரும்பாலான சமூக ஊடக சேவைகள் பழைய பதிவுகளை நீக்க எளிதான வழியை அளிப்பதில்லை. உதாரணத்திற்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் பழைய பதிவுகளை எல்லாம் ஒருவர் நீக்க நினைத்தாலும் அது எளிதாக இருக்காது. கணக்கை முடக்கி வைப்பது அல்லது ஒட்டுமொத்தமாக வெளியேறுவது போன்ற வழிகளை தேர்வு செய்தால், குறும்பதிவு செய்வதை தொடர முடியாமல் போகலாம்.
இந்த இடத்தில் தான் டிவீட்டெலிட் இணையதளம் கைகொடுக்கிறது. இந்த தளம் பழைய குறும்பதிவுகளை எளிதாக நீக்க வழி செய்கிறது. இந்த சேவையின் மூலம் 3,200 வரையான குறும்பதிவுகளை ஒரே நேரத்தில் நீக்கி விடலாம். அது மட்டும் அல்ல, எதிர்காலத்தில் பகிரும் குறும்பதிவுகளையும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் தானாக நீக்கப்படவும் இதன் மூலமே வழி செய்யலாம்.
இணைய முகவரி: https://www.tweetdelete.net/
—
செயலி புதிது; ஹாஷ்டேக் வழிகாட்டி
சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் போது அவற்றுடன் பொருத்தமான ஹாஷ்டேகை இணைப்பதும் முக்கியம். அப்போது தான் அவற்றின் மையகருத்திற்கு ஏற்ப மற்றவர்களால் எளிதாக அடையாளம் காண முடியும். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக ஊடகங்களிலும் ஹாஷ்டேக் பயன்பாடு பிரபலமாக இருக்கிறது. ஆனால் ஒன்று செய்திகள், தகவல்களை விட ஒளிப்படங்களுக்கான ஹாஷ்டேகை தேர்வு செய்வது கொஞ்சம் சிக்கலானதாக இருக்கலாம். இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருக்கும் ஹாஷ்டேகாக மட்டும் இருந்தால் போதாது, படத்திற்கு பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும். இந்த வகையில் ஒளிபட கலைஞர்களுக்கு உதவுவதற்காக என்றே போட்டர்லூ,காம் சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த செயலியிடம் ஒளிப்படத்தை சமர்பித்தால் அதற்கு பொருத்தமான ஹாஷ்டேக் மற்றும் குறிச்சொற்களை பரிந்துரைக்கிறது. இந்த பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு: https://app.photerloo.com/InstagramHashtagKeywordingApp/
—
வீடியோ புதிது; தலைவலி அறிவோம்
தலைவலியால் பாதிக்கப்பட்ட அனுபவம் எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால் தலைவலியில் பல வகை இருக்கின்றன. சிலருக்கு ஒத்த தலைவலி வரலாம். சிலருக்கு பனிச்சுமையால் தலைவலி உண்டாகலாம். எனவே இவற்றுக்கான நிவாரணமும் மாறுபடும். இப்படி தலைவலியில் உள்ள வகைகள் மற்றும் அவற்றுக்கான நிவாரணத்தை ஒரு வீடியோ மூலம் அறிந்து கொள்ள விரும்பினால், உங்களுக்காக என்றே குட்லைப் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளது. பலவகையான தலைவலிக்கான எளிய விளக்கத்தை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வீடியோவை காண: http://designtaxi.com/news/396889/Watch-Different-Types-Of-Headaches-And-How-To-Cure-Them/
நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது;
தமிழில் இதுவரை எழுதியவற்றை படிக்க:http://tamil.thehindu.com/…/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0…/