கற்றலில் உதவும் வீடியோக்கள்

classhookஇணையத்தில் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டும் அல்ல, பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் கல்வி வீடியோக்களும் அநேகம் இருப்பது தெரிந்த விஷயம் தான். இத்தகைய கல்வி சார்ந்த வீடியோக்களை தேடித்தரும் இணையதளங்களும் இருக்கின்றன.
கிளாஸ்ஹுக் தளமும், கல்வி சார்ந்த வீடியோக்களை தேடித்தருகிறது என்றாலும், முற்றிலும் புதுமையான முறையில் இதை நிறைவேற்றுகிறது. இந்த தளம், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும் திரைப்பட கிளிப்களை அடையாளம் காட்டுகிறது.
திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சியில், கணிதம், அறிவியல் மற்றும் உலக நடப்புகள் சார்ந்த உரையாடல்கள் இடம்பெறுவது உண்டல்லவா? இத்தகைய உரையாடல் கொண்ட வீடியோக்களை இந்த தளம் பட்டியலிடுகிறது. ( ஆனால் ஹாலிவுட் படங்கள் தான் இடம்பெற்றுள்ளன)
இந்த காட்சிகளை கொண்டு ஆசிரியர்கள் வகுப்பில் மாணவர்களுக்கு தொடர்புள்ள பாடத்தை நடத்தினால் அவர்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும் என இந்த தளம் கருதுகிறது. அதனால் தான் கற்றலுக்கு உதவக்கூடிய கிளிப்களை தேடித்தருகிறது. வகுப்புகளுக்கு ஏற்பவும் தேடலாம்.
அறிவியல், கணிதம், மொழி என எந்த தலைப்பு சார்ந்த வீடியோக்கள் தேவை என தேடிப்பார்க்கலாம். அல்லது இதில் பட்டியலிப்பட்டுள்ள கிளிப்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம். தேவையான தலைப்புகளை டைப் செய்தும் தேடிப்பார்க்கலாம்.
ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆர்வம் உள்ளவர்கள் முற்றிலும் தகவல் நோக்கில் வீடியோ கிளிப்களை பார்த்து ரசிக்கவும் இந்த தளத்தை அணுகலாம்.
இணைய முகவரி: https://www.classhook.com/

செயலி புதிது; இன்ஸ்டாகிராம் பயண வழிகாட்டி
ஒளிப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமை பல விதங்களில் பயன்படுத்தலாம். உணவுப்பிரியர்கள் அதில் பகிரப்படும் ரெஸ்டாராண்ட் சார்ர்ந்த படங்கள் மூலம் புதிய உணவை சுவைக்க ஏற்ற இடங்களை அடையாளம் காணலாம். அதே போல பேஷன் பிரியர்கள் புதிய ஆடை அலங்காரங்களை ஒளிப்படங்களாக காணலாம். யோகா பிரியர்கள் ஒளிப்படங்களை பார்த்து யோகா கற்றுக்கொள்ளலாம். இதே போலவே சுற்றுலா பிரியர்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் பயணம் சார்ந்த படங்கள் மூலம் புதிய இடங்களை தெரிந்து கொள்ளலாம்.
– இப்படி பயணம் சார்ந்த படங்களை பார்ப்பதற்காக என்றே தனியே ஷெர்பா எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோனுக்கான இந்த செயலி மூலம், இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் சுற்றுலா சார்ந்த படங்களை பின் தொடரலாம்.
– உலக நகரங்கள் சார்ந்த ஒளிப்படங்களை வரிசையாக காணலாம். உலக வரைப்படம் மீதான இடங்களை கிளிக் செய்தும் ஒளிப்படங்களை காணலாம்.
– பயணங்களுக்கான புதிய சுவாரஸ்யமான இடங்களை அறிமுகம் செய்து கொள்ள இந்த செயலி உதவும்.
– மேலும் தகவல்களுக்கு: https://sherpa.guide

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

1 Comments on “கற்றலில் உதவும் வீடியோக்கள்

  1. nandhitha

    வணக்கம்
    மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை
    என்றும் மாற அன்புடன்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *