எழுதுவதில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ’ரைட்டிங் ஸ்பார்க்ஸ்’ இணையதளம் அமைந்துள்ளது. எழுத்து துறைக்கு புதியவர்களுக்கு தேவையான ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை அளிக்கும் வகையில் இந்த இணையதளம் அமைந்துள்ளது.
எழுத்தார்வம் மிக்க மாணவர்கள் இந்த தளத்தில் உள்ள, மாணவர்களுக்கான எழுது பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, கதை, செய்தி,கவிதை மற்றும் கருத்து ஆகிய நான்கு வாய்ப்புகள் தோன்றும். அவற்றில் எது தேவையோ அதை கிளிக் செய்து எழுத துவங்கலாம். செய்தி எனில் அதற்கான பகுதி தோன்றுகிறது. அதில் தலைப்பை டைப் செய்துவிட்டு, செய்தியை எழுத துவங்கலாம். அருகிலேயே செய்தியை உருவாக்குவதற்கான குறிப்புகளையும் எழுதிக்கொள்ளலாம். இதே போலவே கவிதை மற்றும் கதைகளையும் எழுதிப்பழகலாம்.
இதன் இடைமுகமே அழகாக இருப்பதால் கூடுதல் உற்சாகத்தோடு பயன்படுத்தலாம். இதே போலவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு, எழுதுவதில் வழிகாட்டுவதற்கான பகுதியும் இருக்கிறது. அதில் மாணவர்களுக்கு தூண்டுதலாக அமையக்கூடிய அறிமுக வாசகங்களை காணலாம்.
நைட்ஜூடீச்சர் எனும் இணைய நிறுவனத்தின் சார்பாக உருவாக்கப்பட்ட இந்த சேவையில் கூடுதலாக பல அம்சங்கள் உள்ளன. பிரத்யேகமாக பள்ளிகளுக்கு என்று உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையை முழுமையாக பயன்படுத்த உறுப்பினராக வேண்டும் என்றாலும் இதன் அடிப்படை சேவையை எல்லோரும் பயன்படுத்திப்பார்க்கலாம்.
இணைய முகவரி: https://writingsparks.com/
செயலி புதிது: பயண பிரியர்களுக்கான செயலி
பயணங்களுக்கான கையேடுகளை வழங்குவதில் புகழ்பெற்ற லோன்லிபிளானட் நிறுவனம், சுற்றுலா பிரியர்களை கவரும் வகையில் டிரிப்ஸ் எனும் பெயரிலான செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் பயணாளிகள் தங்கள் பயண அனுபவங்களை ஒளிப்படங்களாக பகிர்ந்து கொள்ளலாம்.
இதே போல சக பயணிகள் பகிர்ந்து கொள்ளும் ஒளிப்படங்களையும் பார்த்து ரசிக்கலாம். அவை புதிய இடங்களை கண்டறிவதற்கான எளிய வழியாகவும் அமையும். ஏற்கனவே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் இது போன்ற வசதி இருந்தாலும், சுற்றுலா பிரியர்களுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும்.
பயணங்களை திட்டமிடவும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒளிப்படங்களை பொதுவிலும் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது நண்பர்கள் வட்டத்தில் மட்டும் பகிரலாம். தனிப்பட்ட அனுபவங்களோடு, நிறுவனத்தின் வல்லுனர்கள் தகவல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு: http://www.lonelyplanet.com/trips