கெடு வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை முடிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது டைமர் இணையதளம். இந்த தளத்தின் உள்ள நேரம் காட்டும் கருவியில் நமக்கான நேரத்தை அமைத்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படலாம். பெரும்பாலும் சமையலறையில் பயன்படுத்துப்படுவது போன்ற டைமர் சாதனம் இந்த தளத்தில் உள்ளது. இதில் உள்ள பச்சை நிற அம்புக்குறி மூலம் நேரத்தை குறிப்பிட்டு கெடு வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு அந்த நேரம் குறைந்து கொண்டே வரும். அதை கெடுவாக வைத்துக்கொண்டு வேலைகளை செய்து முடிக்கலாம். சமையல் வேலை துவங்கிம் உடற்பயிற்சி செய்வது, பாடல் கேட்பது என பலவற்றுக்கு இதை பயன்படுத்தலாம். சிக்கலான கூடுதல் அம்சங்கள் எல்லாம் இல்லாத மிகவும் எளிமையான இணையதளம். கவனச்சிதறலை குறைத்துக்கொண்டும், செயல்திறனை அதிகமாக்கி கொள்ள விரும்புகிறவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இணைய முகவரி: http://timerrr.com/
—
செயலி புதிது:
ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்ள ஸ்மார்ட்போன் செயலிகள் அநேகம் இருக்கின்றன. இவற்றில் மிகவும் எளிமையானதாகவும் பயன்படுத்த ஏற்றதாகவும் இருக்கிறது 4 கார்ட்ஸ் செயலி.
இந்த செயலி மூலம் ஒவ்வொரு வார்த்தையாக கற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு வார்த்தைக்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு தினமும் நான்கு வார்த்தைகளுக்கான அட்டைகள் மூலம் புதிய சொற்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
வார்த்தைகளுக்கான பொருளுடன் அவற்றுக்கான உச்சரிப்பையும் அறியலாம்.
தொடர்ச்சியாக பயன்படுத்தினால் புதுப்புது வார்த்தைகளாக அறிந்து கொள்ளலாம். ஆங்கில வார்த்தைகளை பயனாளிகள் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட பலமொழிகளில் பயன்படுத்தலாம்.
தினமும் விநாடிவினாவை எதிர்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் இந்த செயலியை பயன்படுத்தலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போனில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://4cards.in
சைபர்சிம்மன்