சுனாமிக்கான காத்திருத்தலை பேஸ்புக்கில் நேரலை செய்தவர்

Larry-Pestrikoffஅலாஸ்காவில் உள்ள குக்கிராமத்தைச்சேர்ந்த மனிதர் ஒருவர் ஓரிரவில் இணையம் அறிந்த நட்சத்திரமாகி இருக்கிறார். அது மட்டும் அல்ல, பேஸ்புக் நேரலை வசதியை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ளும் குடிமக்கள் இதழியலுக்கான (சிட்டிசன் ஜர்னலிசம்) அருமையான உதாரணமாகவும் ஆகியிருக்கிறார். இதன் மூலம் அவர் தனக்கான இணைய அபிமானிகளையும் தேடிக்கொண்டிருக்கிறார்.

அலாஸ்கா என்பதே பூகோள ரீதியாக நமக்கு அதிகம் பரீட்சயம் இல்லாத பிரதேசம் தான். கனடாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அலாஸ்கா அமெரிக்காவின் அதிகம் அறியப்படாத மாநிலமாகும். பெரும்பாலும் பனிப்பிரதேசமான அலாஸ்கா மலைகள், காடுகள் மற்றும் அதிகம் மக்கள் தொகை இல்லாத வெட்டவெளிகள் நிறைந்தது என விக்கிபீடியா பக்கம் சொல்கிறது.

அலாஸ்கா அவ்வளவாக சர்வதேச செய்திகளில் அடிபடுவதும் இல்லை. புயல் அல்லது பூகம்பம் போன்ற பாதிப்புகளின் போது தான் செய்தி வரைபடத்திற்குள்ளேயே வரும். இப்படி தான் அண்மையில் ( ஜனவரி 23 ம் தேதி) அலாஸ்கா அருகே 7.9 ரிக்டர் அளவிலான பூகம்பம் உலுக்கியது. பூகம்பத்தை அடுத்து இப்பகுதியில் சுனாமி தாக்கலாம் என்ற எச்சரிகையும் விடுக்கப்பட்டது. அப்போது நள்ளிரவு ஒரு அணி. அலாஸ்கா, கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் பரபரப்பும், பீதியும் உண்டானது.

சுனாமி அச்சுறுத்தல் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானாலும் கள நிலவரம் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த சூழ்நிலையில் தான் அலாஸ்காவாசியான லாரி பெஸ்ட்ரிகோப் சுனாமி அச்சுறுத்தலை தனது ஐபோனில் இருந்து பேஸ்புக் மூலம் நேரலை செய்ய தீர்மானித்தார். கோடியாக் எனும் நகரம் அருகே உள்ள அவுசின்கி எனும் சிறிய கிராமத்தில் வசித்தவரான பெஸ்ட்ரிகோ, பூகம்ப அதிர்வுகளை தனது வீட்டில் உணர்ந்திருந்தார். அதன் பிறகு சுனாமி எச்சரிக்கை செய்தியை அறிந்ததும், கடலோரத்தில் துறைமுகப்பகுதியில் அமைந்திருந்த தனது வீட்டின் ஜன்னலில் ஐபோனை வைத்து கடலை படம் பிடித்து பேஸ்புக் லைவ் வசதி மூலம் காண்பிக்கத்துவங்கினார். சுனாமி செய்தியால் பலரும் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த நிலையில் பெஸ்ட்ரிகோப் தனது வீட்டில் இருந்தபடி, கடல் கொந்தளிப்பை படம் பிடித்துக்கொண்டிருந்தார்.

சுனாமி வருகைக்காக காத்திருப்பவர் போல அவர் தனது ஐபோன் காமிரா மூலம் கடலை படம் பிடித்துக்கொண்டிருந்தார். இருள் மிக்க சூழலில், துறைமுகத்தில் மின்னிய ஒரு சில விளக்குகளின் வெளிச்சம் மட்டுமே காமிரா காட்சியில் பார்க்க முடிந்தது. ஆனால் அவர் கள நிலவரத்தை நேரடியாக பதிவு செய்து கொண்டிருந்ததால் இணையத்தில் இதை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு இதுவே போதுமானதாக இருந்தது.

வெறும் காட்சியை மட்டும் படம் பிடிப்பதோடு நிற்காமல், ஒரு தேர்ந்த செய்தி தொகுப்பாளர் போல, கடல் கொந்தளிப்பு, அலைகளின் சீற்றம் போன்ற விவரங்களை அவர்  வழங்கி கொண்டிருந்தார். இந்த ஒளிபரப்பை துவக்கிய போது அவருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. தனது நண்பர்கள் சிலருடன் சுனாமி அச்சுறுத்தல் நிலவரத்தை நேரலையாக பகிர்ந்து கொள்லலாம் என்ற நோக்கத்துடன் தான் இந்த காட்சியை பகிர்ந்து கொள்ளத்துவங்கியிருந்தார்.

ஆனால் முற்றிலும் எதிர்பாராத வகையில், உலகின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் அவரது பேஸ்புக் நேரலையை பின் தொடர துவங்கியிருந்தனர். சுனாமி அச்சுறுத்தல் குறித்து நேரடியாக தெரிந்து கொள்ள அவரது இணைய ஒளிபரப்பு வழிசெய்ததே இதற்கு காரணம். இதனையடுத்து பெஸ்ட்ரிகோப் தனது ஒளிபரப்பை நிறுத்தாமல் தொடர்ந்தார். கடல் நிலவரம் பற்றிய அப்டேட்களை கூறியபடி, தனது வாழ்க்கை நிலவரம், கிரெடிட் கார்டு கடன், தக்காளி ஆலை நிலவரம் போன்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். தனது மகள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டவர், இந்த வீடியோ ஒரு சுனாமிக்காக காத்திருக்கிறது என்றும் இடையே குறிப்பிட்டார். ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது, ஆனால் இன்னமும் தண்ணீர் உள்ளே வரவில்லை என்பது போன்ற அப்டேட்களையும் அளித்தார்.

இதன் விளைவாக அவரது ஒளிபரப்பில் இணைந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை கடந்து லட்சத்தையும் தொட்டது. ஊடக நிறுவனங்களும் அவரது நேரலையை உற்று கவனித்தன. ஒரு கட்டத்தில் அவரது ஐபோனில் சார்ஜ் தீர இருந்த போது பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பதற்றமாகி, உடனே அதை சார்ஜில் போடுங்கள் என பதறியிருக்கின்றனர். அந்த அளவுக்கு அவரது நேரலை தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இறுதிவரை சுனாமி அச்சுறுத்தல் நிஜமாகவில்லை என்பது அனைவருக்கும் ஆசுவாசத்தை அளித்தாலும், இந்த பதற்றமான காத்திருத்தலை நேரலை செய்த பெஸ்ட்ரிகோபை இணைய நட்சத்திரமாக்கியது. அவரது புகழும் வைரலானது. பேஸ்புக் நேரலை வசதியை அவர் கச்சிதமாக பயன்படுத்தி சுனாமி காத்திருத்தல் பற்றிய தகவல்களை நேரடியாக பதிவு செய்த விதம் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது. பலரும் அவர் குரல்வளத்தை விஷேசமாக குறிப்பிட்டு பாராட்டின.

இதனிடையே நெவேடாவைச்சேர்ந்த இணையவாசி ஒருவர் பெஸ்ட்ரிகோப் நேரலையால் மிகவும் கவரப்பட்டு, அவருக்காக என்று ஒரு இணைய நிதி திரட்டல் பக்கத்தையும் அமைத்துவிட்டார். சுனாமி பற்றிய தகவலை பதற்றத்துடன் எதிர்பார்த்திருந்த நேரத்தில், நள்ளிரவில் களத்தில் இருந்து மொபைல் போன் மூலம் என்ன நடக்க இருக்கிறது என்பதை ஒரு ஒளிபரப்பாளர் போல வழங்கிய பெஸ்ட்ரிகோப் பாராட்டுக்குறியவர் என குறிப்பிட்டிருந்த அந்த இணையவாசி, அதற்கு நன்றிக்கடனாக, நேரலையின் போது அவர் குறிப்பிட்ட கிரெடிட் கார்டு கடனை அடைக்க உதவும் நோக்கத்துடன் நிதி அளிக்கலாமே எனும் கோரிக்கையுடன் கோபண்ட்மீ இணையதளத்தில் இதற்கான பக்கத்தை அமைத்திருந்தார். இந்த பக்கமும் வைரலாகி அவர் கேட்ட தொகையான 1,000 டாலர்களை தொட இருக்கிறது.

பெஸ்ட்ரிகோபிற்கான நிதி கோரிக்கை பக்கம்: https://www.gofundme.com/larrys-fund-kodiak-island-ak

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *