தமிழில் உள்ளட்டகத்தை உருவாக்குபவர்களும், வலைப்பதிவு செய்பவர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அறிவிப்பை கூகுள் அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆட்சென்ஸ் விளம்பர சேவையின் ஆதரவு பெற்ற மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adsense.googleblog.com/2018/02/AdSense-now-supports-Tamil.html இந்த செய்தி தமிழ் இணைய உலகில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக வலைப்பதிவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியும், நிம்மதி பெருமூச்சும் வெளிப்பட்டிருக்கிறது. ஏனெனில் இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் வருவாய் ஈட்டுவதற்கான வழியாக இது அமைந்திருப்பது தான்.
இணைய உலகில் புழங்குபவர்களுக்கு கூகுளின் ஆட்சென்ஸ் விளம்பர திட்டம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். 2003 ம் ஆண்டு கூகுள் இந்த சேவையை அறிமுகம் செய்தது. ஆட்சென்ஸ் மூலம் கூகுள் இணையதளங்களிலும், வலைப்பதிவுகளிலும் பொருத்தமான விளம்பரங்களை இடம்பெறச்செய்கிறது. விளம்பரங்களை இடம்பெறச்செய்வதற்கான கட்டணத்தை வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கூகுள் வசூலிக்கிறது. இந்த திட்டத்தின் சகோதர சேவை ஒன்றும் இருக்கிறது. கூகுள் ஆட்வேர்ட் என்று அதற்கு பெயர். வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களுக்கு பொருத்தமான கீவேர்ட்களை வாங்கி அதற்கேற்ப விளம்பரம் செய்ய இந்த சேவை வழி செய்கிறது. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை தான்.
ஆட்சென்ஸ் திட்டம் இணைய உலகின் வெற்றிகரமான விளம்பர வருவாய் திட்டங்களில் ஒன்று என பாராட்டப்படுகிறது. கூகுள் மாபெரும் இணைய சாம்ப்ராஜ்யமான உருவெடுத்ததில், ஆட்சென்ஸ் சேவைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஏனெனில், கூகுளுக்கு வருவாயை அள்ளித்தரும் பிரதான வழிகளில் ஒன்றாக இது இருப்பது தான்.
ஒரு தேடியந்திரமாக கூகுள் முன்னிலை பெற்ற காலத்தில், வருவாய்க்கான வழி என்பது சிக்கலாகவே இருந்தது. அப்போது பயன்பாட்டில் இருந்த விளம்பர திட்டங்கள் அத்தனை வெற்றிகரமாக இல்லை. பயனாளிகளைப்பொருத்தவரை விளம்பரங்கள் இடைஞ்சலாகவும், கவனச்சிதறலாகவும் பார்க்கப்பட்டன. எனவே பேனர் விளம்பரம், எட்டிப்பார்க்கும் பாப் அப் விளம்பரம் போன்றவை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. இதற்கு மாறாக தேடல் முடிவுகளில் விளம்பரத்தை இடைச்சொறுகலாக வைத்தால் அது சேவையின் தரத்தை பாதிப்பதாக கருதப்பட்டது. அநேகமாக எல்லா இணைய நிறுவனங்களுமே இந்த சிக்கலை எதிர்கொண்டன.
கூகுள் தான், இந்த சிக்கலுக்கு ஆட்சென்ஸ் மூலம் தீர்வு கண்டது. ஆட்சென்ஸ் மூலம் கூகுள் விளம்பரத்தை மட்டும் வெளியிடவில்லை, அதை மிகவும் பொருத்தமாக வெளியிட்டது. அதாவது இணையவாசிகள் வாசித்துக்கொண்டிருக்கும் இணைய பக்கத்தின் உள்ளடக்கத்தின் தன்மைக்கேற்ற விளம்பரங்களை அது தோன்றச்செய்தது. உதாரணத்திற்கு ஒருவர் புத்தகம் தொடர்பான பக்கத்தை படித்துக்கொண்டிருந்தால் அருகே புத்தக விற்பனை அல்லது விமர்சன தளத்தின் விளம்பரம் தோன்றும். இதன் பயனாக இணையவாசிகள் அந்த விளம்பரத்தை கிளிக் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். அது மட்டும் அல்ல, அந்த விளம்பரம் அவர்கள் கண்களை உறுத்துவதற்கான வாய்ப்பும் குறைவு. இதை இலக்கு சார்ந்த விளம்பரம் என புரிந்து கொள்ளலாம். கூகுள் இணையவாசிகள் அதிகம் நாடும் தேடியந்திரமாக இருப்பதால், விளம்பரங்களை நோக்கி கைகாட்டி விடும் வசதி அதற்கு இருக்கிறது. அது மட்டும் அல்ல, விளம்பரங்களுக்கான கட்டணத்தை அவை கிளிக் செய்யப்படும் தன்மைக்கேற்பவே வசூலிப்பதால் வர்த்தக நிறுவனங்களுக்கும் இது ஏற்புடையதாக இருக்கிறது.
இவை எல்லாம் சேர்ந்து தான் ஆட்சென்ஸ் சேவையை வெற்றிகரமாக ஆக்கி கூகுளுக்கு வருவாயை அள்ளித்தரச்செய்கிறது. எல்லாம் சரி, இதில் வலைப்பதிவாளர்களுக்கு என்ன லாபம் என கேட்கலாம். ஆட்சென்ஸ் ஒரு கூட்டு வருவாய் திட்டம் என்பது தான் விஷயம். விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயின் ஒரு பகுதியை கூகுள் இணையதள மற்றும் வலைப்பதிவு உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. விளம்பரங்கள் கிளிக் செய்யப்படும் அளவிற்கு ஏற்ப வருவாய் அமையும். ஆயிரம் கிளிக்களுக்கு இத்தனை டாலர் என கூகுள் நிர்ணயித்திருக்கிறது.
ஆக, இணையதளம் வைத்திருப்பவர்கள் ஆட்சென்ஸ் சேவையில் இணைவது மூலம் எளிதாக வருவாய் ஈட்டலாம். அவர்கள் விளம்பர உத்தி பற்றி கவலைப்பட வேண்டாம். தரமான உள்ளட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினாலும் போதும், ஆட்சென்ஸ் விளம்பரம் மூலம் வருவாய் தேடி வரும். சிறிய இணையதள உரிமையாளர்களுக்கும், வலைப்பதிவாளர்களுக்கும் ஆட்சென்ஸ் வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். உண்மையில், ஆட்சென்ஸ் மூலம் கணிசமாக சம்பாதிப்பவர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர்.
இணையம் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழிகள் பற்றி பட்டியல் போடப்படும் போதெல்லாம் அதில் ஆட்சென்ஸ் இடம்பெற்றிருப்பதை பார்க்கலாம். சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை உருவாக்கி இணையவாசிகளை கவர முடிந்தால் போதும், ஆட்சென்ஸ் மூலம் வருவாய் ஈட்டிவிடலாம் என்பதே பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. இந்தியாவிலே கூட ஆட்சென்ஸ் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இணையம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் இந்தியர்கள் என பட்டியல் போட்டி காட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆட்சென்ஸ் மூலம் அள்ளிக்குவித்தவர்கள் தான். பார்வையாளர்களை ஈர்க்க கூடிய இணையதளம் அல்லது வலைப்பதிவை வெற்றிகரமாக நடத்திவந்தால் போதும், அதில் ஆட்சென்ஸ் விளம்பரங்களை இடம்பெறச்செய்வதன் மூலம் வருவாய் ஈட்டலாம். உரிய தொகையை காசோலையாக கூகுள் அனுப்பி வைத்துவிடும்.
ஆனால், தமிழ் மொழியில் வலைப்பதிவு செய்பவர்கள் இதன் பலனை அறுவடை செய்ய முடிந்ததில்லை. அதற்கு காரணம் ஆட்சென்ஸ் சேவை ஆதரவு தமிழுக்கு கிடைக்காமல் இருந்தது தான். ஆட்சென்ஸ் விளம்பரங்கள் தேவை எனில் அதன் பிரிமியம் திட்டத்தின் கீழ் இணைய வேண்டும். இதில் பங்கேற்கும் இணையதளங்கள் மாதம் இத்தனை லட்சம் பார்வையாளர்களை பெற்றிருக்க வேண்டும் எனும் நிபந்தனையும் உண்டு. ஆர்வம் காரணமாக வலைப்பதிவு செய்து வருபவர்களுக்கு இது சாத்தியமில்லை.
இந்நிலையில், கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டிருப்பதை அறிவித்துள்ளது. ஆட்சென்ஸ் இணையதளத்திற்கு சென்று அதில் உள்ள வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் வலைப்பதிவாளர்கள், மற்றும் இணையதள உரிமையாளர்கள் இதில் பங்கேற்கலாம். நிச்சயம் இது தமிழில் வலைப்பதிவு செய்பவர்களுக்கும், உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கும் நல்ல செய்தி தான். அவர்கள் தொடர்ந்து இயங்க இந்த வருவாய் ஒரு ஊக்கமாக அமையும். மேலும் பல திறமையான புதியவர்கள் தமிழில் பயனுள்ள தளங்களை உருவாக்கவும் இது வழிவகுக்கும். இணையத்தில் வருவாய் ஈட்ட ஆங்கிலம் மட்டுமே வழி எனும் நிலையை இது மாற்றும். மேலும் ஆட்சென்சிற்காக, ஆங்கிலத்திலும் உள்ளடக்கத்தை இடைச்சொறுகலாக சேர்க்கும் குறுக்கு வழிகளிலும் ஈடுபட வேண்டிய அவசியம் இருக்காது.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் நூற்றுக்கணக்கான வலைப்பதிவுகள் இயங்கி வந்தன. இவற்றில் பெரும்பாலனவை இப்போது கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. இதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும், வலைப்பதிவு மூலம் வருவாய் ஈட்டுவதற்கான வழி இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணம். ஆட்சென்ஸ் போன்ற ஒரு ஆதரவு இருந்திருந்தால் திறமையான பல பதிவர்கள் இன்றும் ஆர்வத்துடன் வலைப்பதிவை தொடர்ந்திருக்கலாம். இப்போது இந்த குறையை சரி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஒன்று, ஆட்சென்ஸ் ஆதரவு சாத்தியமாகி இருப்பதாலேயே பணம் கொட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இது, வருவாய் ஈட்டுவதற்கான ஒரு வழி மட்டுமே. மற்றபடி இதன் மூலம் வருவாய் கிடைப்பது என்பது பல்வேறு அம்சங்களை பொறுத்தே அமையும். முதலில், விளம்பர வருவாய் கிளிக் விகிதம் படி செயல்படுவதால், அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருகை இருந்தாலே வருமானம் வரும். இதில் கவனம் செலுத்தினால், வருவாய்க்காக உள்ளட்டகத்தை மாற்ற வேண்டியிருக்கலாம். அதோடு, இந்த திட்டத்தில் இணைய கூகுள் விதிக்கும் நிபந்தைகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டும். தளத்தின் உள்ளடக்கமும் அதற்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும்.
இணையதளத்தில் இடம்பெறும் விளம்பரங்களை எந்தவிதத்திலும் உரிமையாளர்களால் கட்டுப்படுத்த முடியாது. இவற்றை கூகுளே தீர்மானிக்கும். அட்சென்ஸ் சேவையில் இணையும் வழிமுறை எளிதானது என்றாலும், இதற்கான நடைமுறை பல நேரங்களில் சிக்கலை உண்டாக்கலாம். சிறிய பிழை என்றாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். அதன் பிறகு தொடர் மின்னஞ்சல்கள் அனுப்பி மல்லுக்கட்ட வேண்டும். இவைத்தவிர, ஆட்சென்ஸ் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதற்காகவே உருவாக்கப்படும் இரண்டாந்தரமான இணையதளங்கள் அதிக அளவில் முளைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
ஆனால் இவற்றை எல்லாம் மீறி இந்த வாய்ப்பு வரவேற்க கூடியதாகவே அமைகிறது. இணையத்தில் தமிழ் மொழிக்கு இருக்கும் முக்கியத்துவத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமாகவும் இதை கருதலாம். இந்திய பிராந்திய மொழிகளில் தமிழுக்கே இந்த வாய்ப்பு முதலில் கிடைத்துள்ளது. தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கும் இந்த வாய்ப்பு தேவை என கோரிக்கை எழுந்துள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்பது பலரது ஆதங்கம். இருந்தாலும், இணையத்தில் அடுத்த கட்ட வளர்ச்சி உள்ளூர் மொழிகள் சார்ந்தே அமையும் என கூறப்படும் காலகட்டத்தில் இது சாத்தியமாகி இருப்பது பொருத்தமானதே என்று தோன்றுகிறது. நடைமுறையில் இது என்னவிதமான பலன்களை அளிக்கிறது என்பதை அறிய ஆர்வத்துடன் காத்திருக்கலாம்.
வால்; தமிழில் ஆட் சென்ஸ் சேவை வாய்ப்பு பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்கள் இணையதளத்தை இந்த திட்டத்தில் ஆர்வத்துடன் சமர்பித்த சிலர், அது ஏற்கப்படுவதற்கு பதில், நிராகரிக்கப்பட்டு அதற்கான காரணமாக, இன்னமும் உங்கள் மொழி அட்சென்ஸ் ஆங்கீகாரப்பட்டியலில் இடம்பெறவில்லை எனும் பதிலை பெற்று ஏமாற்றமடைந்துள்ளனர். ஆட்சென்ஸ் அறிவிப்பு செயலாக்கம் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் இதற்கு காரணமாக இருக்கலாம். வரும் நாட்களில் இது சரி செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கலாம்.
-தமிழ் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையின் முழு வடிவம்