ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களு, இலக்கணம் முதல் பேச்சு மொழி பயிற்சி வரை பலவற்றை கற்றுத்தர உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன. அந்த வரிசையில் மிக எளிமையான இணையதளமாக அறிமுகமாகி இருக்கிறது டூபியூப்பிள்சே. இந்த தளத்தில் ஆங்கில மொழி பயன்பாடு தொடர்பான பாடங்களோ, பயிற்சியோ கிடையாது. இதில் ஒரே ஒரு தேடல் கட்டம் மட்டும் இருக்கிறது. அதில் ஆங்கில மொழி சொல்ல அல்லது சொற்றடரை டைப் செய்து அவற்றின் பயன்பாட்டை பார்க்கலாம். அதாவது ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் அந்த சொல் அல்லது சொற்றடரை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு தேடலுக்கும் பொருத்தமான வாக்கியங்கள் தேடல் முடிவில் பட்டியலிடப்படுகின்றன. பெரும்பாலானவை ரெட்டிட் விவாத தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன. ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்படும் விதம் தொடர்பான வழிகாட்டுதலை பெற இந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்கலாம்.
இணையதள முகவரி: https://dopeoplesay.com/
-=
செயலி புதிது; உங்கள் தரவுகளை பாதுகாக்க!
மாறுபட்ட தேடியந்திரமான டக்டக்கோவை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையவாசிகள் தேடலில் ஈடுபடும் போது அவர்கள் என்ன தேடுகின்றனர் என்பது போன்ற தனிப்பட்ட தகவல்களை சேகரிக்காமல் இருப்பதை இந்த தேடியந்திரத்தின் தனித்தன்மையாக சொல்லப்படுகிறது. விளம்பர நோக்கில் இணையவாசிகளின் தேடல் சுவடுகளை பின் தொடராமல் தனியுரிமையை பாதுகாப்பதை முக்கிய அம்சமாக முன்வைத்து முன்னணி மாற்று தேடியந்திரமாக உருவான டக்டக்கோ இப்போது, இணையத்தில் உலாவும் போதும் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க உதவும் செயலியை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. டக்டக்கோவின் இந்த செயலியை செல்போனில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தினால், இணையதளங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் இணையவாசிகளை பின் தொடர்வதை தவிர்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட தன்மை கொண்ட தேடல் வசதியை அளித்தது போலவே இப்போது, இணையத்தில் உலாவும் போது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வழி செய்வதாக டக்டக்கோ தெரிவித்துள்ளது. ஐபோன், ஆண்ட்ராய்டு போன் மற்றும் கூகுள் கிரோம் நீட்டிப்பாகவும் பயன்படுத்தலாம்.
மேலும் தகவல்களுக்கு: https://duckduckgo.com/app
வீடியோ புதிது; கிராபிக்சை மேம்படுத்தும் வழி
ஒளிப்படங்களின் தரத்தை மேம்படுத்த போட்டோஷாப் மென்பொருள் கொண்டு பல நுணுக்கங்களை பயன்படுத்தலாம். இதே போலவே, கிராபிஸ் சித்திரங்கள் விஷயத்திலும் போட்டோஷாப் நுணுக்கத்தை பயன்படுத்தலாம் என வழிகாட்டுகிறது பிகிசிம்பர்பக்ட் (PiXimperfect ) யூடியூப் சேனல். அதிகபட்சம் இரண்டு வண்ணங்கள் மட்டும் கொண்ட கிராபிக்ஸ் ஆக்கங்களை எப்படி மேம்படுத்துகிறது என வீடியோ மூலம் இந்த தளம் விளக்கம் அளிக்கிறது. இரண்டுக்கு மேல் வண்ணங்கள் இருந்தால் அதற்கான மாற்று வழியையும் பரிந்துரைக்கிறது.
வீடியோவைக்காண: https://youtu.be/eZXT2mMr-IU