இணைய நாணயமான பிட்காயின் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. இடையே அதன் மதிப்பு உச்சத்தை தொட்டது தான் முக்கிய காரணம். அதன் பிறகு பிட்காயின் மதிப்பு ஏறி இறங்கி கொண்டிருந்தாலும் பலருக்கும் இந்த நாணயம் பற்றி மேலும் அறியும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், பிட்காயின் மட்டும் இணைய நாணயம் அல்ல: அது போலவே நூற்றுக்கணக்கான கிரிப்டோ நாணயங்கள் இருக்கின்றன. இந்த நாணயங்கள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் எனில், ஏ கிரிப்டோ எ டே இணையதளத்தை நாடலாம். இந்த தளம் தினம் ஒரு கிரிப்டோ நாணயம் பற்றி தகவல் தருகிறது. அந்த நாணயத்தின் பெயர், தனித்தன்மை, செயல்படுவிதம், அதன் ஆதார தொழில்நுட்பம் உள்ளிட்ட தகவல்களை விரிவாக வழங்குகிறது. உதாரணத்திற்கு ஆரகன் எனும் கிரிப்டோ நாணயம் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த தகவல்களை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இணைய முகவரி: https://acryptoaday.com/
செயலி புதிது: புதுமையான முகவரி சுருக்க சேவை
சமூக ஊடகங்களில் இணையதள முகவரிகளை பகிர்ந்து கொள்வதை எளிதாக்க, முகவரிகளை சுருக்கித்தரும் சேவையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவையை வழங்கும் பல்வேறு இணையதளங்களும் இருக்கின்றன. இந்த வரிசையில் ஆட்டோ ஷார்ட்னர் எனும் செயலி அறிமுகமாகியிருக்கிறது.
முகவரிகளை சுருக்காமல் சுருக்கி கொள்ளலாம் என்கிறது இந்த செயலி. அதாவது, இந்த செயலியை பயன்படுத்தும் போது, இணையதள முகவரிகளை சுருக்குவதற்கான என்று சமர்பிக்க வேண்டிய அவசியமே இல்லை என்கிறது. மாறாக இணைய முகவரிகளை காபி செய்தால் மட்டும் போதும், அதை பகிர்ந்து கொள்ளும் போது அது தானாக சுருக்கப்பட்டுவிடும் என்கிறது.
மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=fergaral.autoshorten&ref=producthunt