வீட்டில் சேரும் குப்பைகளை விட உங்கள் இமெயில் முகவரி பெட்டியில் அதிக குப்பைகள் குவிந்து கொண்டிருக்கலாம். இதை நீங்கள் அறியாமலே கூட இருக்கலாம் அல்லது அறிந்தும் என்ன செய்வது எனத்தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கலாம். ஸ்பேம் எனப்படும் அழையா விருந்தாளியாக வரும் குப்பை மெயில்களால் தான் இப்படி பிரச்சனையாக அமைகின்றன.
இது இமெயிலின் ஆதிகாலத்தில் இருந்து இருக்கும் பிரச்சனை தான் என்றாலும், இன்னமும் முழுத்தீர்வு கிடைத்தபாடில்லை. வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான எளிய வழியாக இமெயில் இருப்பதால், பல நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் விளம்பர வலை விரிக்கும் மெயிலை அனுப்பி வைக்கின்றன. முன்பின் தெரியாத நிறுவனங்களும், மோசடி பேர்வழிகளும் கூட இவ்வாறு செய்வதுண்டு.
அறிமுகம் இல்லாத மெயில்கள் அல்லது வேண்டாத இமெயில்கள் இன்பாக்சில் எட்டிப்பார்க்கும் போது, இவர்களுக்கு எல்லாம் நம் இமெயில் முகவரி எப்படி கிடைத்தது எனும் கேள்வியும் மனதில் எழும். பலவிதங்களில் நிறுவனங்கள் இமெயில் முகவரியை அறுவடை செய்கின்றன. செய்திமடல் சேவையில் நீங்கள் உறுப்பினராக சேர்ந்திருக்கலாம். அல்லது நிறுவன மெயில்களுக்கு பதில் அளிக்கும் போது உங்கள் முகவரியை சமர்பித்திருக்கலாம். உங்களை அறியாமல் பொதுவெளியில் இமெயில் முகவரியை வெளியிட்டிருக்கலாம்.
இப்படி பலவழிகளில் இமெயில் முகவரிகள் சேகரிக்கப்படுகின்றன. இவை தவிர ஹேக்கர்கள் எனப்படும் தாக்காளர்களை கைவரிசை காட்டி முகவரிகளை களவாடிச்சென்றிருக்கலாம். மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் உங்கள் இமெயில் முகவரியை விற்பனை செய்திருக்கலாம். ஆம், இமெயில் முகவரியை அறுவடை செய்து வர்த்தக நிறுவனங்களிடம் விற்பனை செய்வதையே வர்த்தகமாக மேற்கொள்ளும் நிறுவனங்களும் இருக்கின்றன. சொல்லப்போனால் இணையத்தில் இமெயில் முகவரிக்கு வலைவீசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. வலையில் சிக்கும் மெயில்கள் கொத்து கொத்தாக விற்பனை செய்யப்படுகின்றன.
ஸ்பேம் மெயில்கள் உங்கள் முகவரி பெட்டியில் குவிய இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இந்த பின்னணியில், இமெயில் முகவரி விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய உதவுவதற்கான இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. ’ஹேவ் ஐ பீன் சோல்ட்’ (https://haveibeensold.app/ ) என்பது தான் அந்த தளத்தின் முகவரி.
இணையத்தில் பாஸ்வேர்டு திருட்டு அதிகம் நடப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். தாக்காளர்கள் எப்படி எல்லாமோ கைவரிசை காட்டி பாஸ்வேர்ட்களை களவாடுகின்றனர். இப்படி களவாடப்பட்ட பாஸ்வேர்டு குவியலில் உங்கள் பாஸ்வேர்டு இருக்கிறதா என கண்டறிய வழி செய்யும் வகையில் ஹேவ் ஐ பீன் பாண்டு’ எனும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில் ஒருவர் தனது பாஸ்வேர்டை சமர்பித்தால், களவாடப்பட்ட பாஸ்வேர்டு பட்டியல்களில் அது இருக்கிறதா என பார்த்து சொல்கிறது.
இதே பாணியில் தான் ’ஹேவ் ஐ பீன் சோல்ட்’ தளமும் செயல்படுகிறது. இந்த விவரத்தை வெளிப்படையாகவும் முகப்பு பக்கத்திலேயே குறிப்பிடவும் செய்துள்ளது. இந்த தளத்தில் இமெயில் முகவரியை சமர்பித்தால், அந்த முகவரி விற்பனை செய்யப்பட்டிருகிறதா என்பதை சரி பார்த்து சொல்கிறது. அதாவது வர்த்தக நோக்கில் விற்பனை செய்யப்பட்ட இமெயில் பட்டியல்களில் சமர்பிக்கப்பட்ட முகவரி இருக்கிறதா என தேடிப்பார்த்து தகவல் அளிக்கிறது.
இமெயில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள் இந்த சேவை மூலம் தங்கள் இமெயில் முகவரி விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால், ஒன்று இப்போதைக்கு இந்த தளத்தின் வசம் பெரிய அளவில் தரவுகள் பட்டியல் இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
தங்களிடம் சமர்பிக்கப்படும் இமெயில் முகவரி அல்லது வேறு எந்த விவரங்களையும் சேகரிப்பதில்லை என இந்த தளம் உறுதி அளிக்கிறது. இமெயில் முகவரியை சோதித்து பார்த்த பிறகு அந்த முகவரியை நீக்கி விடுவதற்கான வாய்ப்பையும் இந்த தளம் அளிக்கிறது. இந்த தளத்தின் மீது நம்பிக்கை வைத்து, இமெயில் முகவரியை சமர்பித்து, எதிர்காலத்தில் அந்த முகவரி விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து எச்சரிக்கும் மெயிலையும் பெற ஒப்புக்கொள்ளும் வசதி அளிக்கப்படுகிறது.
பயனாளிகளின் தரவுகளை பாதுகாப்பதற்கான ஜி.டி.பி.ஆர் சட்டம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த சட்டத்தை மீறி நடக்கும் நிறுவனங்களை கண்டறிந்து புகார் செய்யவும் இந்த தளம் பயன்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பேம் மெயில்களில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகளையும் இந்த தளம் பட்டியலிட்டுள்ளது. மாநாடுகள் போன்வற்றுக்கு செல்லும் போது, நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை பெறுவதற்காக என்று தனி இமெயில் முகவரியை சமர்பிப்பது உள்ளிட்ட வழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.