ரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்!

d6fcf1addf86b3ff2115ef19a99d3a9fஇஸ்ரோ எத்தனையோ பெருமைகளுக்கு உரியது தான். இந்தியர்களை தலை நிமிர செய்யும் வகையில் பல சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தியிருக்கிறது- நிகழ்த்தி வருகிறது. எனவே, நிச்சயமாக இல்லாத சாதனையை சொல்லி இஸ்ரோவை பெருமை படுத்த வேண்டிய அவசியம் இல்லை தான். ஆம், அதெற்கென்ன தேவை என்று நீங்களும் கூட ஆமோதிக்கலாம்.

ஆனால், ரேடியோ கார்டன் இணையதளம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் உலா வரும் தகவலை பார்த்தால், இஸ்ரோ பெயருக்கு ஏன் இப்படி களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்று தான் கேட்கத்தோன்றுகிறது.

விஷயம் இது தான். ரேடியோ கார்டன் என்றொரு இணையதளம் இருக்கிறது. அருமையான இணையதளம் தான். உலகில் உள்ள வானொலி நிலைய நிகழ்ச்சிகளை எல்லாம் அந்த தளத்தின் மூலம் அணுகலாம். அந்த தளத்தின் இடைமுகம் தான் இன்னும் அற்புதமானது. அதன் முகப்பு பக்கத்தில் கிளிக் செய்தால் பூமி உருண்டை தோன்றுகிறது. அந்த பூமி உருண்டையில் பச்சை புள்ளிகளாக தோன்றும் இடங்களை கிளிக் செய்தால், அந்த இடத்தில் ஒருந்து ஒலிபரப்பாகும் வானொலியை கேட்டு ரசிக்கலாம்.

நாம் கிளிக் செய்வதற்கு முன்னரே, நம்முடைய இருப்பிட நகரத்தை அடையாளம் கண்டு, அங்குள்ள வானொலி தானாக கேட்கத்துவங்குகிறது. இது தவிர அருகாமையில் உள்ள வானொலிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். புதுவிதமான இசையை கேட்க விரும்பினால், உலகின் மற்ற பகுதிகளில் உள்ள பச்சை புள்ளிகளை கிளிக் செய்து அங்குள்ள பாடல் அல்லது இசையை கேட்டு மகிழலாம். வானொலி பிரியர்களுக்கு சரியான வேட்டைக்களம் என்று தான் இந்த தளத்தை சொல்ல வேண்டும்.

இந்த தளத்தை பயன்படுத்தி பார்த்தால் தான் அதன் மகத்துவம் புரியும். எல்லாம் சரி, இந்த தளத்திற்கும் இஸ்ரோவுக்கும் என்ன தொடர்பு? அது தான் விஷயமே. வாட்ஸ் அப்பில் உலா வந்த செய்தி ஒன்று, ‘இஸ்ரோ மீண்டும் பெருமை கொள்ளச்செய்கிறது” என துவங்கும் அந்த செய்தி, கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்தால், பூமி உருண்டை மீதான பச்சை புள்ளியை கிளிக் செய்தால், அங்குள்ள வானொலியை நேரலையாக கேட்டு ரசிக்கலாம். அற்புதம் என தெரிவிக்கிறது.

31f2e531aa1460566ec1f783506c822eஅற்புதம் தான். ஆனால், இஸ்ரோவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் விஷயம். இஸ்ரோ செலுத்திய எந்த செயற்கைகோளும் இதில் பயன்படுத்தப்படவில்லை. உண்மையில் இந்த தளம் நெதர்லாந்தைச்சேர்ந்த வானொலி மற்றும் சர்ச் டிஜிட்டல் எனும் அமைப்பு இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். சமூக நோக்கிலான திட்டமாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இணையதளத்தை அறிமுகம் செய்வதும், பரிந்துரைப்பதும் நல்லது தான். ஆனால் அதற்கு ஏன் இஸ்ரோவை இழுக்க வேண்டும் தெரியவில்லை. இத்தனைக்கும், இந்த வாட்ஸ் அப் பகிர்வை குறிப்பிட்டு, இஸ்ரோவுக்கும் ரேடியோகாரடனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தும் செய்தி நியூ இந்தியன் எஸ்க்பிரஸ் நாளிதழில் கடந்த ஆண்டே வெளியாகி இருக்கிறது. குவோரா கேள்வி பதில் தளத்தில், ரேடியோ கார்டன் தளத்திற்கும் இஸ்ரோவின் 104 செயற்கைகோள்களுக்கும் என்ன தொடர்பு எனும் கேள்வி கேட்கப்பட்டு தெளிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.; https://www.quora.com/Is-Radio-Garden-connected-to-ISRO%E2%80%99s-104-satellites

இவ்வளவு ஏன், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் யூடியூப் வீடியோவும் இருக்கிறது. பார்க்க: (https://youtu.be/PgW1_QAo1xo  ) அப்படி இருந்தும் இந்த செய்தியை இன்னமும் வாட்ஸ் அப்பிலும், அவ்வப்போது பேஸ்புக் டைம்லைனிலும் பார்க்க முடிகிறது.

வாட்ஸ் அப்பில் பிழை தகவல்களும் பொய் செய்திகளும் பரவாமல் தடுப்பது நம் கையிலும் தான் இருக்கிறது என உணர்த்தவே இந்த பதிவு.

உலக வானொலியை கேட்டு ரசிக்க: http://radio.garden

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *