’லிங்க்டுஇன்’ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பயனாளிகள் எண்ணிக்கை அல்லது வருவாயை அளவுகோளாக வைத்து இதை சொல்லவில்லை. ’லிங்க்டுஇன்’ சேவை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வரும் புதிய அம்சங்களும், வசதியுமே அதன் வளர்ச்சியை உணர்த்துகிறது. அந்த சேவை துடிப்பாக இருப்பதையும் உணர்த்துகிறது.
லின்க்டுஇன்’ சமூக வலைப்பின்னல் வகை சேவைகளில் ஒன்று என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புரிதலுக்கு பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் என்று கூறலாம் என்றாலும், லிங்க்டுஇன், வழக்கமான சமூக வலைப்பின்னல் சேவை அல்ல: அது முற்றிலும் தொழில்முறையிலானது. தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வழி செய்வதும், அதைவிட முக்கியமாக வேலைவாய்ப்புக்கான தேடலில் கைகொடுப்பதும் லிங்க்டுஇன் சேவை ஸ்பெஷனாதாக மாற்றுகிறது.
சமூக வலைப்பின்னல் பரப்பில் பேஸ்புக்கிற்கு முன்னதாக துவங்கப்பட்ட சேவையான லிங்க்டுஇன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. லிங்க்டுஇன்னால் மைக்ரோசாப்டிற்கு என்ன பயன்? என்ற கேள்வி அப்போது கேட்கப்பட்டதோடு, இந்த கையகப்படுத்தலுக்கு பின் லிங்க்டுஇன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுப்பபட்டது.
ஆனால், இடைப்பட்ட காலத்தில் லின்க்டுஇன் சேவை தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து பயனாளிகளை கவர்ந்திழுத்தபடி இருக்கிறது. அண்மைக்காலங்களில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அம்சங்களில் அதன் முகப்பு பக்க மாற்றம் முக்கியமானதாக அமைகிறது. வெறும் அல்கோர்தமை மட்டும் நம்பாமல், மனித எடிட்டர்கள் துணையோடு உள்ளடக்கம் தீர்மானிக்கப்படும் வகையில் இந்த முகப்பு பக்கம் அமைந்திருப்பதால், நிலைத்தகவல்கள் குறைந்து, செய்திகள் அதிகரித்துள்ளன. விளம்பரங்களும் இதில் கலந்திருந்தாலும், மொதத்தில் பயனுள்ளதாகவே இருப்பதை உணரலாம்.
இதே போல அதிகம் பேசப்படும் விஷயங்களை டிரெட்ண்டிங் தலைப்புகளாக பின் தொடரும் வசதியும் அறிமுகமானது. காலெண்ட்ர் சார்ந்த அரட்டை மென்பொருள் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் பேஸ்புக் வழங்கும் வசதிகளை ஒத்திருப்பவை.
இவைத்தவிர, உறுப்பினர்கள் பகுதியில் தகவல்கள் இடம்பெறும் விதத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர் பக்கத்தில் மேல் பகுதியேலேயே அனைத்து முக்கிய விவரங்களும் இடம்பெற வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் அறிமுக பகுதியில், இடம்பெறும் சுருக்கத்திலும் அதிக தகவல்களை பதிவிட வழி செய்யப்பட்டுள்ளது. அதிக இணைப்புகளையும் சேர்க்கலாம்.
மிக மிக அண்மையில், குடோஸ் எனும் வசதியும் அறிமுகமாகியுள்ளது. உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வசதியாகும் இது. குடோஸ் வசதியை தேர்வு செய்துவிட்டு, சிறந்த குழு ஊழியர் அல்லது சிறந்த வழிகாட்டு என்பது போன்ற வார்த்தைகளில் பாராட்டு தெரிவிக்கலாம். ஐபோனுக்கான செயலி வடிவில் அறிமுகமாகியுள்ள இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போலவே, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, தொடர்புடைய நிறுவனத்திற்கான பயண தொலைவு எவ்வளவு என தெரிந்து கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் சரி, லிங்க்டுஇன் சேவையை இன்னும் சிறப்பாக பயன்படுத்த விரும்புகிறீர்களா? இதற்கு வல்லுனர்கள் எளிதான வழிகளை பட்டியலிடுகின்றனர்.
முதல் விஷயம், அறிமுகம் பகுதியில் உங்கள் புகைப்படத்தை இடம்பெறச்செய்யுங்கள். அந்த படம் தொழில்முறையிலான தன்மையில் இருப்பது அவசியம். சுயபட பாணியிலானவை மற்றும் பார்ட்டியில் எடுக்கப்பட்ட படங்களை எல்லாம் தவிர்க்கவும். புகைப்படத்தை அப்டேட் செய்வதுவுடன், தற்போதைய இருப்பிடம், கல்வித்தகுதி, திறன்கள் தொடர்பான தகவல்களையும் அப்டேட் செய்யவும். வர்த்தக நிறுவனங்கள் எளிதாக உங்களை கண்டுகொள்ள இவை உதவும். புகைப்படம் மட்டும் அல்லாமல், பின்னணி பொருத்தமான புகைப்படம் கொண்டதாக மாற்றலாம்.
அதே போல நீங்கள் வேலை வாய்ப்பு தேடும் நபர் எனில், உங்களுக்கான உறுப்பினர் பகுதியில் அதை தெரிவிக்கவும். ஓபன் கேண்டிடேட் என தெரிவிப்பதன் மூலம் இதை எளிதாக செய்யலாம். மேலும், உங்கள் பக்கம் எளிதாக இணைய தேடலில் கண்டறியப்படும் வகையில், பயணர் முகவரியில், உங்கள் பெயர் கொண்டு மாற்றம் செய்து கொள்ளலாம். எடிட் பப்ளிக் பிரபைல் பகுதியில் சென்று, யூ.ஆர்.எல் வாய்ப்பை தேர்வு செய்து இதற்கான மாற்றத்தை மேற்கொள்ளலாம்.
உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் தங்களை வந்தடையும் வகையில் வேலைவாய்ப்பு அலெர்ட் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். முகப்பு பக்கத்தில் மேலே உள்ள சூட்கேஸ் போன்ற ஐகானை கிளிக் செய்தால் இந்த வசதியை அணுகலாம். வேலை கிடைக்கும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கான பரிந்துரையை கோரலாம். ஆஸ்க் பார் ஏ ரெபரல் மூலம் இதற்கான கோரிகையை விடுக்கலாம். இதற்காக ஏற்கனவே எழுதப்பட்ட கோரிக்கை இருந்தாலும் சுயமாக எழுதுவது இன்னும் நல்லது. லின்க்டுஇன் குழுக்களில் இணைந்து விவாதத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பதும் உங்களை அடையாளம் காட்ட உதவும்.
தொடர்ந்து ஆர்வம் உள்ள நிலைத்தகவல்களை வெளியிடுவதும் உதவியாக இருக்கும். எழுத்து திறமை இருந்தால், கட்டுரைகள் எழுதும் வசதியை பயன்படுத்தி நீளமான பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம். இவை எல்லாம் வேலைவாய்ப்பு நாடுபவர்களுக்கானது. ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் தொழில்முறை தொடர்புகளை உருவாக்கி கொள்ளவும், புதிய வாய்ப்புகளை கண்டறியவும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
லின்க்டுஇன் பயன்பாடு தொடர்பான விரிவான வழிகாட்டி கட்டுரை: https://hackernoon.com/everything-you-need-to-know-about-the-new-linkedin-60c1161a117f
தளம் புதிது: புதிர்களை உருவாக்கித்தரும் தளம்
ண்ணற்ற வழிகள் கொண்டதாக ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பாதியில் முடியும் வகையில் அமைந்திருக்கும் புதிர் விளையாட்டு உங்களுக்கு பிடித்தமானதா? சிக்கலாக காட்சி அளிக்கும் இந்த புதிரில் சரியான வழியை கண்டுபிடிப்பது தான் சவால். இது போன்ற புதிர்களை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். மேஸ் ஜெனரேட்டர் தளம் (http://www.mazegenerator.net/) இதற்காக வழி செய்கிறது. எந்த வகையான (சதுரமா? செவ்வகமா?) வடிவில் புதிர் தேவை என்பதில் துவங்கி, நீளம் எவ்வளவு இருக்க வேண்டும், அகலம் எவ்வளவு இருக்க வேண்டும், உள்புற அளவு என்ன என்பது உள்ளிட்ட பல அம்சங்களை குறிப்பிட்டு இந்த புதிர்களை உருவாக்கி கொள்ளலாம்.
புதிர் எந்த அளவு சிக்கலானதாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். உங்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக மாதிரி புதிர்களையும் பார்க்கலாம். புதிர்களை எப்படி உருவாக்குவது என்பதற்கான வழிகாட்டி பகுதியும் இருக்கிறது. புதிர் விளையாட்டை பிடிஎப் கோப்பாக அச்சிட்டுக்கொள்ளலாம்.
வீடியோ புதிது: இரத்தத்தில் எத்தனை நிறங்கள்!
இரத்ததின் நிறம் சிவப்பு என்று தெரியும். ஆனால் இது மனித குலத்திற்கானது. இரத்தத்தில் இருக்கும் பிராண வாயுவே இதற்கு காரணம்.ஆனால் மற்ற விலங்கினங்களில் இரத்த்தின் நிறம் மாறுபடுகின்றன. குறிப்பிட்ட பல்லி வகைகளில் இரத்தம் பச்சை நிறமாக உள்ளன. இரத்த ஓட்டத்துடன் வெளியேறும் கழிவுகளே இதற்கு காரணம். இவை இரத்த தொற்றையும் தடுக்க பயன்படுகின்றன. இன்னும் சில உயிரினங்கள் நீல நிற இரத்தம் பெற்றுள்ளன. இப்படி விலங்கினங்கள் இரத்த நிறங்கள் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும், அன்னா ரோத்ஸில்ட் உருவாக்கியுள்ள யூடியூப் வீடியோ அழகாக விளக்குகிறது. விலங்கினத்தில் இரத்தம் வானவில் வண்ணத்தில் அமைந்திருக்கிறது எனும் வர்ணனையோடு, இதற்கான விளக்கத்தை அளிக்கிறார் அன்னா.
வீடியோவுக்கான இணைப்பு; https://youtu.be/eE2712d2v4M
தகவல் புதிது; பயர்பாக்ஸ் பிரவுசரில் புதிய வசதி
பயர்பாக்ஸ் பிரவுசரில் சைடுபார் எனும் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். மேல் பகுதி வலப்பக்க மூளையில் உள்ள புத்தகம் போன்ற ஐகானை கிளிக் செய்தால் இடப்பக்கத்தில் அதற்கான மெனுவை பெறலாம். இதே போல இப்போதும் சைடுவியூ எனும் வசதியை பயர்பாக்ஸ் முன்னோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இணையதளங்களை அருகருகே பார்க்கலாம். அதாவது யூடியூப் வீடியோ பார்த்தபடி ஷாப்பிங் செய்யலாம், அல்லது டிவிட்டர் பதிவுகளை பார்த்த படி, வேறு ஒரு தளத்தை பார்க்கலாம். சைடுபார் பகுதியை இதற்கான இணைப்புகளை அணுகலாம். பயர்பாக்ஸ் சோதனை வசதிகளின் கீழ் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதை தனியே தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இது தவிர இன்னும் பல சோதனையான வசதிகளையும் பயர்பாக்சின் டெஸ்ட் பைலட் பக்கத்தில் அணுகலாம்.
இணைய முகவரி: https://testpilot.firefox.com/experiments/side-view
f