இணையம் முழுவதும் ‘கிகி’ சாலஞ்ச் நிகழ்வு பிரபலமானது எல்லாம் பழைய செய்தி. உலகம் முழுவதும் போக்குவரத்து காவல்துறைக்கு இந்த வைரல் போக்கு பெரும் தலைவலியாக மாறியிருப்பது தான், இப்போதைய புதிய செய்தி. அது மட்டும் அல்ல, உளவியல் வல்லுனர்களுக்கும் இந்த போக்கு வேலை கொடுத்து விளக்கம் அளிக்க வைத்திருக்கிறது.
இணையத்தில் புழங்குபவர்களுக்கு கிகி சாலஞ்ச் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இணையத்தில் அதிக பரீட்சயம் இல்லாதவர்கள் கூட, ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகும் செய்திகளால் இந்த போக்கு குறித்து அறிந்திருக்கலாம்.
கனடா ராப் பாடகர் ’டிரேக்’கின் ’இன் மை பீலிங்ஸ்’ பாடலுக்கு நடனமாடி அந்த காட்சியை வீடியோவில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வது தான் இந்த போக்கின் மையமாக இருக்கிறது. டிரேக் வெளியிட்ட ’ஸ்கார்பியன்’ எனும் ஆல்பத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருக்கிறது. பாடல் என்னவோ தாளம் போட்டு கேட்கும் வகையில் நன்றாக தான் இருக்கிறது.
இந்த பாடலுக்கு சாதாரணமாக நடனம் ஆடாமல், ஓடும் காரில் இருந்து கீழே குதித்து நடனமாடிவிட்டு பின்னர் மெல்ல சென்று கொண்டிருக்கும் காரில் ஏறி அமர்ந்து கொள்ள வேண்டும். இந்த காட்சியை தான் படம் பிடித்து பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். ஆச்சர்யப்படும் வகையில், பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பலரும் இதை செய்து வருகின்றனர். அதன் காரணமாகவே இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
’இன் மை பீலிங்ஸ்’ எனும் இந்த பாடலில் டிரேக், ‘கிகி நீ என்னை விரும்புகிறாயா? என பாடுகிறார். அதன் பிறகு கைகளால் இதயம் வரைந்து, வாகனம் ஓட்டுவது போல சைகை சைகிறார். அப்போது ’நீ பயணம் செய்கிறாயா? எனும் வரி வருகிறது. பாடலின் தலைப்பு மற்றும் அதில் வரும் கிகி ஆகிய இரண்டையும் ஹாஷ்டேகாக்கி இந்த வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த பகிர்வை பார்த்து ரசிப்பவர்கள் பலர் தங்கள் பங்கிற்கு இதே பாணியில் ஓடும் வாகனத்தில் இருந்து இன் மை பீலிங்ஸ் பாடலுக்கு நடனமாடி அதை பகிர்ந்து கொள்கின்றனர். இந்தியாவிலும் இந்த போக்கு பிரபலமாகி இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் துவங்கி, சின்னத்திரை பிரபலங்கள் வரை பலர் இந்த சவாலில் பங்கேற்று வீடியோ வெளியிட்டிருக்கின்றனர்.
இத்தனைக்கும் இந்த வீடியோ சவாலை முதலில் வெளியிட்டது பாடகர் டிரேக் இல்லை. இணையத்தில் தீவிரமாக இருக்கும், ஷிகி எனும் நகைச்சுவை கலைஞர், முதலில் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அவர் இதற்கு ஷிகி சாலஞ்ச் என்றே பெயரிட்டிருந்தார். அதன் பிறகு ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், பாலம் ஒன்றில் நடனமாடிய படி வீடியோவை வெளியிட்டார். வேறு பல நட்சத்திரங்களும் தங்கள் பங்கிற்கு நடனமாடி அந்த காட்சியை பகிர்ந்து கொண்டனர். அவ்வளவு தான் மெல்ல இந்த போக்கு இணையத்தில் பரவி வைரலாகி விட்டது.
தொடர்ந்து # கிகி சாலஞ்ச் , # இன்மைபீலிங்ஸ் ஆகிய ஹாஷ்டேகுகளுடன் இந்த காட்சிகள் பலரால் பகிரப்பட்டு வருகின்றன.
இதனிடையே தெலுங்கானாவைச்சேர்ந்த இரண்டு விவசாயிகள் வயல்வெளியில் கிகி சாலஞ்ச் சவாலில் ஈடுபட்டு தங்கள் பங்கிற்கு பிரபலமாகி உள்ளனர். வயலில் ஏர் உழும் இயந்திரத்தில் இருந்து குதித்து சகதியில் அவர்கள் ஆடிப்பாடுவது இந்தியத்தன்மையோடு அமைந்திருப்பதால் இந்த வீடியோவும் சமூக ஊடகத்தில் வைரலாகி இருக்கிறது. இதில் பங்கேற்றவரில் ஒருவர் ஏற்கனவே லைப் இன் விலேஜ் யூடியூப் சேனல் மூலம் கிராமத்து வாழ்க்கையை படம் பிடித்து வருகிறார். எனவே, கிகி சாலஞ்சில் பங்கேற்றது அவர்களை புகழ் பெற வைத்திருப்பதோடு, கிராமத்து வாழ்க்கை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர்கள் நோக்கத்திற்கும் உதவியிருக்கிறது.
ஆனால், ’கிகி’ சாலஞ்சின் எல்லா வீடியோக்களும் இப்படி அமைவதில்லை. ஒரு சிலர் ஓடும் காரில் இருந்து கீழே குதித்து நடனமாடும் போது விபத்துக்குள்ளாகி இருக்கின்றனர். இந்தியாவிலும் கூட சிலர் இவ்வாறு விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளனர். இந்த விஷயம் தான் போக்குவரத்து காவல் துறையினருக்கு தலைவலியாக அமைந்திருக்கிறது. இணையப்புகழுக்கு ஆசைப்பட்டு அப்பாவிகள் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து நடனமாடி வீடியோவை பதிவு செய்யும் முயற்சி ஆபத்தானது என அவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு நகரங்களைச்சேர்ந்த போக்குவரத்து காவல்துறையினர், கிகி சாலஞ்ச் வேண்டாம் எனும் கோரிக்கையை சமூக ஊடகங்களில் வைத்திருக்கின்றனர். நடனமாடும் சவால் எதற்கு அதற்கு பதில் புகைப்பிடிப்பதையோ, குடிப்பதையோ கைவிடலாமே எனும் பாசிட்டிவ் செய்தியையும் வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்காவிலும் போக்குவரத்து காவல் துறையினர் இந்த போக்கு குறித்து எச்சரித்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த வைரல் போக்கின் மையமான பாடலை பாடிய டிரேக், இது தொடர்பான அதிகார்பூர்வ வீடியோவை வெளியிட்டிருக்கிறார். நல்ல வேளையாக அவர் காரில் இருந்தெல்லாம் நடனமாடவில்லை. ஆனால் வரைல் புகழுக்கு அவர் தனியே நன்றி தெரிவித்திருக்கிறார்.
போக்குவரத்து காவல்துறையினர், ஓடும் காரில் இருந்து குதித்து நடனமாடுவது ஆபத்தான செயல் என எச்சரித்து வரும் நிலையில், உளவியல் வல்லுனர்கள் இந்த நிகழ்வுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர். அமெரிக்க பேராசிரியரான டமோன் செண்டோலா, ‘ ஆபத்தான பழக்கங்களை மேற்கொள்ள உணர்வு ரீதியான தூண்டுதல் காரணமாக அமைந்து, கூட்டத்தின் தன்மையால் அதிகமாகிறது’ என்று கூறியுள்ளார். இது குறித்து வயர்டு இதழில் கருத்து தெரிவித்துள்ளவர், ” ஆன்லைனில் இது, பதிவுகளுக்கான பின்னூட்டங்களை பார்க்கும் போது தூண்டப்படும் உணர்வு ரீதியான உற்சாகமாக மாறுகிறது. இது மற்றவர்களுக்கும் உற்சாகம் அளித்து அவர்களையும் பங்கேற்க வைக்கிறது” என்று கூறியுள்ளார்.
” துவக்கத்தில் ஒரு குழுவினர் மத்தியில் மேற்கொள்ளப்படும் செயல், மற்றவர்களின் அங்கீகாரத்தை பெற்று மேலும் பலர் பங்கேற்கும் போது, உற்சாகம் அதிகமாகி வலைப்பின்னல் முழுவதும் பரவும் வரை இது தொடர்கிறது’ என்கிறார் அவர்.
இது போன்ற மடத்தனமான சவால்கள் மட்டும் அல்ல, அரபு வசந்தம் போன்ற இணையத்தில் வெடித்த அரசியல் போராட்டங்களிலும் இதே விதமாக தான் பரவின என அவர் கூறுகிறார். மெல்பர்ன் பேராசிரியரான ஏஞ்சலா டோபெலே, அடிப்படையில் மக்கள் தாங்கள் இருப்பை உணர விரும்புவதே இது போன்ற போக்கிற்கு காரணம் என விளக்கம் அளிக்கிறார். ‘நமக்கு தொடர்பு, சகாக்களின் ஏற்பு மற்றும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. பிரபலமான குழு அல்லது போக்கில் அங்கம் வகிக்க விரும்புகிறோம். நாம் அதில் அங்கம் வகிப்பதில் சுறுசுறுப்பாக இருப்பதால் விளைவுகள் பற்றி யோசிப்பதில்லை’ என்கிறார் அவர்.
டியூக் பல்கலைக்கழக உளவியல் உதவி பேராசிரியரான சாரா கெய்தர், ஒவ்வொரு லைக் அல்லது பகிர்வு நமது சுயம் மற்றும் நம்மைச்சுற்றியுள்ள சமூக உலகத்திலான நம் இருப்பை உணர்த்துகிறது’ என்று விளக்கம் தருகிறார். எல்லாம் சரி தான், இந்த உணர்வை நல்ல விதத்தில் பயன்படுத்தலாமே! சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் பிரபலமான ஐஸ் பக்கெட் சாலஞ்ச் போன்ற நல்ல விதமான இணைய சவால்களை ஏற்றுக்கொள்ளலாமே!
–