மென்பொருள் வல்லுனர் ஒருவர் ’விண்டோஸ் 95’ இயங்குதளத்தை செயலி வடிவில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய விண்டோஸ் இயங்குதளத்திலும், ’மேக் ஓஎஸ்’ மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் இந்த செயலியை பயன்படுத்தி விண்டோஸ் 95 அனுபவத்தை மீண்டும் பெறலாம். புதியவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கலாம், கொஞ்சம் வயதானவர்களை இது டிஜிட்டல் மலரும் நினைவுகளில் மூழ்க வைக்கலாம். எப்படி பார்த்தாலும், இது முக்கியமான ஒரு மீட்டெடுத்தல் தான்.
விண்டோஸ் 95 ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் உலகில் பிரபலமாக இருந்த மென்பொருள். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கோடிகளை அள்ளிக்கொடுத்ததில் இந்த மென்பொருளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் காலம் மாறிவிட்டது. கம்ப்யூட்டர் உலகம், 95 ல் வெகு தொலைவு முன்னேறி வந்துவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனமே கூட, விண்டோஸ் 95 ல் இருந்து விண்டோஸ் 10 க்கு வந்துவிட்டது. விண்டோஸ் 95 கைவிடப்பட்டு, மறக்கப்பட்டுவிட்டது என்று கூட சொல்லலாம்.
அப்படி இருக்க, ஒருவர் மெனக்கெட்டு இந்த மென்பொருளுக்கு செயலி வடிவில் ஏன் உயிர் கொடுக்க வேண்டும். இதனால் என்ன பலன்? யாருக்கு என்ன லாபம்? இப்படி பல கேள்விகள் கேட்கலாம். முதல் விஷயம், ஒரு பழைய மென்பொருளை செயலி வடிவில் மறு உருவாக்கம் செய்வது என்பது தொழில்நுட்ப சாகசம் என்றே சொல்ல வேண்டும். அதை தான் பெலிக்ஸ் ரைசன்பர்க் (felixrieseberg.com) செய்திருக்கிறார். அவர் தான் இந்த செயலியை உருவாக்கி இருக்கிறார்.
ரைசன்பர்க்கை தொழில்நுட்ப கில்லாடியாக அறிய முடிகிறது. தொழில்முறை மேசேஜிங் சேவையான ஸ்லேக் நிறுவனத்தில் பணியாற்றும் ரைசன்பர்க், மென்பொருள் கட்டமைப்பான எல்க்ட்ரான் உள்ளிட்டவற்றிலும் முக்கிய பங்காற்றி வருகிறார். இவற்றின் பயன்பாட்டை விளக்குவதற்காகவும், தனது கோடிங் வல்லமை வெளிப்படுத்துவதற்காகவும், அவர் இந்த செயலியை உருவாக்கியிருப்பதாக கருதலாம். அல்லது உண்மையிலேயே அவருக்கு விண்டோஸ் 95 இயங்குதளம் மீது காதல் இருக்கலாம். எனவே அந்த இயங்குதளத்தை மறு உருவாக்கம் செய்திருக்கலாம்.
ஆனால் அவரது நோக்கத்தை மீறி, இந்த செய்தி இணைய உலகின் கவனத்தை ஈர்த்த், விண்டோஸ் 95 தொடர்பான நினைவலை சார்ந்த விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், விண்டோஸ் 95, கம்ப்யூட்டர் உலகில் மைல்கற்களில் ஒன்றாக இருப்பது தான். இந்த இயங்குதளம் அறிமுகமான காலமும் சரி, அறிமுகமான போது இதனால் செய்ய முடிந்த விஷயங்களும் புறக்கணிக்க முடியாதவை.
1995 என்பது இணைய காலவரிசையில் முக்கியமான ஆண்டு. பின்னாளில் மின்வணிக ஜாம்பவானாக உருவான அமேசான்.காம் மற்றும் கூகுளுக்கு முன்னர் கோலோச்சிய தேடியந்திரங்களில் ஒன்றான அல்டாவிஸ்டா அறிமுகமானது இந்த ஆண்டில் தான். இணையத்தின் வலைவாசலாக கோலோச்சத்துவங்கிய யாஹு.காம் மற்றும் இணைய ஏலத்தை துவக்கி வைத்த இபே.காம் அறிமுகமானதும் இதே ஆண்டில் தான். ஆக, இணையம் வெகுஜனமயமாகத்துவங்கிய இதே காலத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 95 இயங்குதளத்தை அறிமுகம் செய்தது.
தொழில்நுட்ப நோக்கில் பார்த்தால், பழைய சிக்கலான எம்.எஸ் டாஸ் இயங்குதளத்தில் இருந்து புத்தம் புதிய விண்டோஸ் இயங்குதளத்திற்கான மாற்றமாக இதை கருதலாம். இன்னொரு விதத்தில் நோக்கினால், வெகுமக்கள் பலரும் கம்ப்யூட்டர் மற்றும் இணையத்தை நோக்கி வரத்துவங்கிய காலத்தில் அவர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற எளிமையோடு அறிமுகமான இயங்குதளம் என விண்டோசை குறிப்பிடலாம்.
ஒரு விதத்தில் கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்கி, பரவலாக்கியதில் விண்டோஸ் இயங்குதளத்தின் பங்கு கணிசமானது. இதில் இடம்பெற்றிருந்த, மென்பொருள் அம்சங்களை எளிதாக அணுகுவதற்கான ஸ்டார்ட் மெனு உள்ளிட்ட அம்சங்கள் அந்த கால இணையவாசிகளுக்கு கம்ப்யூட்டர் உலகிற்குள் கைபிடித்து அழைத்துச்சென்றது போல இருந்ததாக சொல்லலாம். இதில் இருந்த டாஸ்க் பார் வசதி, டெஸ்க்டாப் அம்சம், இண்டெர்நெட் எக்ஸ்பிளோரர் பிரவுசர் ஆகியவற்றை இன்று நாம் சாதாரணமாக கருதலாம் என்றாலும், அந்த காலகட்டத்தில் இவை மேஜை கம்ப்யூட்டருக்கான முக்கிய கருவிகளாக அமைந்தன.
இந்த மென்பொருள் சிடி வடிவில் அறிமுகமானதோடு, அப்போதே காலாவதியாக துவங்கி விட்டிருந்த ’பிளாப்பி டிஸ்க்’ வடிவிலும் வெளியானது. இந்த இயங்குதளத்தை அடக்க 13 ’பிளாப்பி டிஸ்க்’ தேவைப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றை எல்லாம் மீறி அறிமுகமான சில வாரங்களில் இந்த மென்பொருள் லட்சக்கணக்கில் விற்பனையானது. தொடர்ந்து விற்பனையில் சக்கை போடு போட்டது. 1990 களில் கம்ப்யூட்டர் மற்றும் இணையம் பழகியவர்கள் எல்லோருக்கும், நல்லதொரு டிஜிட்டல் நண்பனாக விண்டோஸ் 95 அமைந்திருந்தது.
இதெல்லாம் பழைய புராணம் தான். ஆனால் டிஜிட்டல் உலகின் மறக்க முடியாத பக்கங்கள் என்கின்றனர். நிச்சயமாக, விண்டோஸ் 95 இல்லாமல், விண்டோஸ் என்.டிக்கும், ஸ்மார்ட்போன் உலகிற்கும் நாம் தாவி வந்திருக்க முடியாது. ஆனால் இது போன்ற மென்பொருட்கள் டிஜிட்டல் புழுதி படிந்து மறக்கப்பட அனுமதிக்கப்படுவது வேதனையானது என்கின்றனர். இவை டிஜிட்டல் பாரம்பரியத்தின் அங்கம் என்பதால் இவற்றை பேணி காப்பது நம் கடமை என்கின்றனர் வல்லுனர்கள்.
அது மட்டும் அல்ல, புதுப்புது மென்பொருள்கள் அறிமுகமாகி கொண்டிருக்கும் நிலையில் பழைய மென்பொருட்களை எல்லாம் மறப்பது வரலாற்று சுவடுகளை அழித்துவிடும் என்பதோடு, அந்த கால மென்பொருட்கள் சார்ந்த தகவல்கள் மற்றும் பயன்பாடுகளையும் தொடர முடியாமல் போய்விடும் என்கின்றனர். எனவே தான், டிஜிட்டல் மைல்கற்களை தகுந்த முறையில் நாம் பாதுகாத்தாக வேண்டும்.
இந்த பின்னணியில் தான், ரைசன்பர்க் , விண்டோஸ் 95 இயங்குதளத்தை செயலி வடிவில் உருவாக்கி அளித்திருக்கிறார். இந்த செயலியை இயக்குவதன் மூலம், விண்டோஸ் 95 இயங்குதளத்தில் செயல்பட்ட பெரும்பாலான சேவைகளை அதே பாணியில் பயன்படுத்திப்பார்க்கலாம். ஒரு விதத்தில் இது காப்புரிமை மீறிய செயல் என்றாலும், நோக்கம் வில்லங்கமில்லாதது என்பதால் கைதட்டி வரவேற்கலாம்.
தேடியந்திரம் புதிது; வண்ணங்களை தேடலாம் வாங்க!
சில நேரங்களில் வண்ணங்களையும், வண்ண சேர்க்கைகளையும் தேடும் தேவை ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்காக புதியதொரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது. பிக்யூலர் (https://picular.co/ ) எனும் இந்த தேடிந்திரத்தில், வண்ணங்களை தேடலாம். வழக்கமான தேடியந்திரம் போலவே இதிலும் கீவேர்ட்களை சமர்பித்து தேடலாம் என்றாலும் வழக்கமான தேடல் முடிவுகளுக்கு பதிலாக வண்ண கட்டங்கள் வந்து நிற்கின்றன. மிக எளிமையான வடிவமைப்பில், சிக்கனமாக அமைந்திருக்கும் இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துவது எளிதானது. கூகுள் இமேஜ் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வண்ணங்களை அதிகம் பயன்படுத்தும் வடிவமைப்பாளர்கள் போன்ற பிரிவினருக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
செயலி புதிது; இந்தியாவில் ராக்கெட் பிரவுசர்
பயர்பாக்ஸ் பிரவுசரை நிர்வகிக்கும் மொசில்லா அமைப்பு அதன் லேசு ரக மொபைல் பிரவுசரான பயர்பாக்ஸ் ராக்கெட் பிரவுசரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இணையத்தை பயன்படுத்தும் போது டேட்டாவை மிச்சமாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த பிரவுசர், கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமான பிரவுசரில் உள்ள அதிகம் பயன்படுத்தப்படப்படாத அம்சங்கள் நீக்கப்பட்ட பிரவுசராக இது அமைகிறது. இதன் காரணமாக, மெதுவான இணைப்பு கொண்ட இணைசேவையிலும் இது பக்கங்களை வேகமாக தரவிறக்கம் செய்யக்கூடியது.
பயர்பாக்ஸ் பிரவுசர் 32 எம்பி அளவிலானது என்றால், இந்த லேசு ரக பிரவுசர் 2.62 எம்பி மட்டுமே அளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரவுசர், இணைய பக்கங்களை முழுவதும் சேமித்து வைத்து பின்னர் அணுக உதவும் டர்போ மோடு வசதியையும் கொண்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு: https://support.mozilla.org/en-US/products/firefox-rocket/get-started
தகவல் புதிது: மீயூசியம் உருவாக்கிய மீம்கள்
இணையம் எங்கும் நிறைந்திருக்கும் மீம்களை கேலிக்கும், கிண்டலுக்கும் தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை, விழிப்புணர்வு நோக்கிலும் பயன்படுத்தலாம். அதனால் தான், அண்மையில் மியூசியம் காப்பாளர்கள், விதவிதமான மீம்களை உருவாக்கி கலக்கி இருக்கின்றனர். கடந்த 22 ம் தேதி மியூசியம் மீம் தினமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மீயூசியம் காப்பாளர்கள், மியூசியத்தில் இருக்கும் காட்சிப்பொருட்கள் தொடர்பான மீம்களை உருவாக்கி, #MusMeme எனும் ஹாஷ்டேகுடன் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டனர். அந்த கால கலைப்பொருட்கள் மற்றும் மியூசமில் பார்க்க கூடிய பொருட்கள் அருகே இக்கால மீம்கள் பாணியில் வாசகங்களை எழுதி பகிர்ந்து கொண்ட இந்த படைப்புகளுக்கு டிவிட்டரில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த மீம்கள், ரசிக்கத்தக்கவையாக இருந்ததோடு, அருங்காட்சியகங்கள் மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. பலரை உள்ளூர் மியூசியம் நோக்கி படையெடுக்க வைத்திருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.