நீங்கள் ஆனந்த் மகிந்திரா போன்றவாரா? நான் நிச்சயம் ஆனந்த் மகிந்திரா ரகம் தான்! இல்லை தொழிலதிபர் என்ற முறையில் அவருடன் ஒப்பிட்டுக்கொள்ளவில்லை. அதில் அவர் வேறு லெவலில் இருக்கிறார். ஆனால் இணைய அப்பாவித்தனத்தில், தயக்கம் இல்லாமல் ஆனந்த் மகிர்ந்திராவுடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளலாம். அதாவது அவரைப்போலவே, உங்களுக்கும் ’பப்ஜி’ என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தால்!
இப்போது, ‘பப்ஜி’ என்றால் என்ன? எனும் கேள்வியை கேட்பவராக இருந்தால் நீங்களும் ஆனந்த மகிர்ந்திரா ரகம் தான். ஏனெனில் அண்மையில் அவர் டிவிட்டரில் இந்த கேள்வியை தான் வெள்ளந்தியாக கேட்டிருந்தார். அவரது கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் மிகுந்த உற்சாகத்தோடு பதில் அளித்திருந்தனர். இந்த உரையாடல் மிக சுவாரஸ்யமாக அமைந்திருந்ததால், இது வரை பப்ஜியை அறியாதவர்கள் கூட அதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
ஆனால் பப்ஜி உலகில் மூழ்கியிருக்கும் கோடிக்கணக்கான கேம் பிரியர்களுக்கு இந்த கேள்வியே வியப்பாக இருக்கலாம். ‘பப்ஜி’ கேமை தெரியாதா? என அவர்கள் நம்ப முடியாத வியப்புடன் கேட்கலாம்.
ஆம் பப்ஜி என்பது ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கேம். அதற்கு கோடிக்கணக்கில் அபிமானிகள் இருக்கின்றனர். இந்தியாவிலும் கூட ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. அபிமானிகளிடம் கேட்டால், இந்த விளையாட்டு பற்றியும் அதன் நுணுக்கங்கள் பற்றியும் எண்ணற்ற விஷயங்களை உற்சாகமாக கூறுவார்கள். அதை பார்ப்பதற்கு முன், முன்னணி தொழிலதிபர் ஆனந்த மகிந்திராவுக்கும் இந்த கேமுக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் பப்ஜி பற்றி கேட்க வேண்டும்? போன்ற கேள்விகள் எழலாம்.
ஆனந்த மகிந்திரா சாதனை தொழிலதிபர் மட்டும் அல்ல, டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தீவிரமாக இருப்பவர் என்பதும் முக்கியமாது. அவர் டிவிட்டரை பயன்படுத்தும் விதமும் விசேசமானது. வெறும் மார்க்கெட்டிங் நோக்கில் அல்லது அலுப்பூட்டக்கூடிய வகையில் நிறுவன செய்திக்குறிப்பு பாணி தகவல்களை எல்லாம் அவர் டிவிட்டரில் பகிர்வதில்லை. நெட்டிசன்களோடு உண்மையான உரையாடலை மேற்கொள்ளும் வகையில் அவர் டிவிட்டரை பயன்படுத்துகிறார். அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகும் விஷயங்கள் குறித்தும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பதுண்டு.
அதனால் தான், இணையவாசிகளுக்கு அதிலும் குறிப்பாக டிவிட்டர்வாசிகளுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அந்த ஈர்ப்பு தான், அவர்களை மகிர்ந்திராவுடன் பப்ஜி விளையாட்டை இணைத்து பேச வைத்தது. இந்த பேச்சே, ஆனந்த மகிந்திராவை சங்கடத்துடன் பப்ஜி என்றால் என கேட்க வைத்தது.
நடந்தது இது தான். பப்ஜி விளையாடப்படும் இணைய சூழலில் மகிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் இருப்பதாக செய்தி வெளியானது. சமூக ஊடக உலகில் இது உண்மையில் பெரிய செய்தி தான். ஏனெனில் பப்ஜி உலக அளவில் பிரபலமாக இருக்கும் விளையாட்டு. வழக்கமான சுட்டுத்தள்ளும் விளையாட்டு தான் என்றால், இக்கார மொபைல் தலைமுறை மத்தியில் இந்த விளையாட்டு மீது அப்படி ஒரு மோகம் இருக்கிறது. அவர்கள் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டுவதோடு இது பற்றி பேசுவதில் ஈடுபடுகின்றனர்.
அடிப்படையில் சுட்டுத்தள்ளும் விளையாட்டு என்றாலும், கேம் பிரியர்களுக்கு இது தனி உலகமாக அமைவதை அறிய முடிகிறது. இணையம் வாயிலாக, பலர் இணைந்து விளையாடக்கூடிய மல்டி பிளேயர் கேமாகவும் இது அமைகிறது. இந்த விளையாட்டில், கேம் ஆடுபவர்கள் பாராசூட்டில் குதித்து முன்னேற வேண்டும். அதன் பிறகு, ஆயுதங்களை தேடி சேகரித்து சுட்டுத்தள்ளிபடி முன்னேறி செல்ல வேண்டும். மொத்தம் நூறு பேராக துவங்கி ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு, இறுதியில் யார் ஒருவர் மட்டும் மிஞ்சுகிறார் என பார்ப்பது தான் விளையாட்டு.
இதில் தோட்டாக்கள் பாய்ந்து வரும், குண்டுகள் வீசப்படும் என்பதால் கேம் வீரர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க பல்வேறு பொருட்களுக்கு பின்னே மறைந்து கொண்டு தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் செட் பிரப்பார்டி என சொல்லப்படுகின்றன.
இந்த பொருட்களில் ஒன்றாக தான், மகிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் ஒன்று கேமில் தோன்றியிருக்கிறது. இதை டிவிட்ச் வீடியோகேம் நேரடி ஒளிபரப்பு தளத்தின் உறுப்பினரான சாக்கோடாக்கோ என்பவர் கண்டறிந்து இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த தகவல் இந்திய கேம் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. சர்வதேச கேமில் ஒரு இந்திய பிராண்ட் வாகனமா என குதூகலம் அடைந்தவர்கள் தாங்களும் அதைப்பார்த்து உறுதி செய்து கொண்டனர். பலர் இந்த காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து டிவிட்டரில் பகிர்ந்து கொண்டனர். மறக்காமல் #PUBG , #mobile போன்ற ஹாஷ்டேகையும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த தகவலை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டால் போதாது என நினைத்த சிலர், டிவிட்டரில் ஆனந்த மகிந்திராவிடம் இந்த தகவலை ஆவலுடன் பகிர்ந்து கொண்டனர். அனுராக் (@Anuuuuurag ) எனும் டிவிட்டர் பயனாளி, ”மகிந்தரா டிராக்டர் #பப்ஜி வாயிலாக சர்வதேச அளவுக்கு சென்றுள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
பிராஞ்சல் (@pranjal5674) என்பவர் டிவிட்டரில் ஆனந்த மகிந்திராவையே டேக் செய்து, ”நான் என்ன கண்டுபிடித்திருக்கிறேன் தெரியுமா? பப்ஜி கேமில் மகிந்திரா டிராகடர் இருக்கிறது’ என குறிப்பிட்டிருந்தார். என் அப்பா கூட பெருமிதத்துடன் ஒரு மகிந்திரா டிராக்டர் வைத்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ( நேரமின்மை காரணமாக நீங்கள் இந்த விளையாட்டை அறிந்திருக்க நியாயமில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.)
இதனிடையே பரான் கான் (@FarhanK96735111 ) என்பவரும் மகிந்திராவை டேக் செய்து, “ மகிந்திரா டிராக்டர் 256 டிஐ- பார்த்தது நான் மட்டும் தானா என கேட்டிருந்தார்.
அசிஷ் கார்க் (@itsashishgarg) என்பவர், ஆனந்த் மகிந்திரா அவர்களே பப்ஜி விளையாட்டு பற்றி தெரியுமா? அதில் இந்திய டிராக்டரை பார்த்த போது பெருமிதம் அடைந்தேன் என கூறியிருந்தார்.
இப்படி பலரும் பப்ஜி கேமில் மகிந்திரா டிராக்டரை பார்த்தது பற்றி உற்சாகம் கொண்ட நிலையில், ஆனந்த மகிந்திரா இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு டிவீட்டை பகிர்ந்து கொண்டார். ஆனால், மிகவும் கெத்தாக, ‘ சரி, நான் தர்ம சங்கடத்தை ஒப்புக்கொள்கிறேன். எல்லா லேட்டஸ்ட் நிகழ்வுகள் குறித்தும் தெரிந்து கொள்ள முற்படுகிறேன். ஆனால், இந்த பப்ஜி என்றால் என்ன? என்று கேட்கும் வகையில் அந்த பதிவை வெளியிட்டிருந்தார். (https://twitter.com/anandmahindra/status/1034691643826491393 )
கூடவே மறக்காமல், மகிந்திரா டிராக்டருக்கான அங்கீகாரம் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
பப்ஜி என்றால் என்ன என்று ஆன்ந்த மகிந்திரா கேட்ட கேள்வி நெட்டிசன்களை இன்னும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. சிலர் இது கூடவா தெரியாது என கலாய்த்தாலும், பலரும் சின்சியராக அவருக்கு விளக்கம் அளிக்க முற்பட்டனர்.
மயூரேஷ் பட்டேல் (@MayureshIndia ) எனும் மாணவர், ’ இது ஒரு விளையாட்டு சார். கேமில் பயன்படுத்த முடியாத பொருள் இது. தாக்குதலின் போது இதன் பதுங்கி கொள்ளலாம். குண்டுகள், தோட்டக்களில் இருந்து பதுங்கலாம். குட் ஜாப் மகிந்திரா “ என குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, விமானத்தில் இருந்து 100ம் பேர் குதித்து துப்பாக்கிகளை தேடி விளையாடும் கேம் என்றும் கூறியிருந்தார்.
இப்படி தான், ஆனந்த் மகிந்திரா மூலம், பப்ஜி பற்றி தெரியாதவர்களுக்கு கூட, பிளேயர் அன்நோன்ஸ் பேக்கிரவுண்ட் என்பதன் சுருக்கமான பப்ஜி விளையாட்டு அறிமுகமாகி இருக்கிறது.
ஆனால், இதில் உள்ள சுவாரஸ்யத்தை தான் பார்க்க வேண்டுமேத்தவிர இதை பப்ஜி கேமிற்கான பரிந்துரையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வேண்டுமானால், பப்ஜி கேமின் மோகம் பற்றிய விழிப்புணர்வாக எடுத்துக்கொள்ளலாம்.
தொழிலதிபர் ஆனந்த் மகிந்தாரவுடன் நெட்டிசன்கள் டிவிட்டரில் நடத்திய சுவாரஸ்யமான உரையாடல் மூலம் பப்ஜி எனும் விளையாட்டு அதை அறியாதவர்கள் மத்தியிலும் பிரபலமாகி இருக்கிறது.