கூகுள் முன்னணி தேடியந்திரமேத்தவிர, இணையத்தின் முதல் தேடியந்திரம் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்ககலாம். அப்படி என்றால் முதல் தேடியந்திரம் எது? ஆலன் எம்டேஜ் என்பவர் இணையத்தில் கோப்புகளை தேடித்தர உருவாக்கிய ’ஆர்ச்சி’ (Archie ) தான் இந்த தேடியந்திரமாக கருதப்படுகிறது. இதை கூகுளும் ஒப்புக்கொள்கிறது. கூகுளில் முதல் தேடியந்திரம் என தேடிப்பார்த்தால், ஆர்ச்சி தொடர்பான முடிவு முதலில் முன்வைக்கப்படுகிறது.
எல்லாம் சரி, ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் யார்? இந்த கேள்விக்கான பதிலை கூகுளில் தேடினால் அது விவரம் தெரியாமல் தவறான பதிலையே அளிக்கிறது. அதாவது கூகுள், ஆலன் எம்டேஜ் தொடர்பான பக்கங்களையே முதலில் காண்பிக்கிறது. ஆம், முதல் தேடியந்திரத்தை உருவாக்கியது ஆலன் எம்டேஜ் என்றால், ஆன்லைன் தேடலை கண்டிபிடித்ததும் அவராக தான் இருக்க வேண்டும். எனவே அவரது பெயரை காண்பிப்பதில் என்ன தவறு என கேட்கலாம்.
ஆம் தவறு தான்! ஏனெனில் இணைய வரலாற்றை தேடிப்பார்த்தால், ஆன்லைன் தேடல் என்பது ஆர்ச்சி தேடியந்திரத்திற்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது தெரிய வரும். ஆர்ச்சி மட்டும் அல்ல, இணையம் உருவாவதற்கு முன்னதாகவே ஆன்லைன் தேடல் அறிமுகமாகியது எனும் ஆச்சர்யமான தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.
1969 ல் ஆர்பாநெட் எனும் பெயரில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களின் இணைப்பு தான் பின்னாளின் இண்டெர்நெட் என அறியப்பட்ட இணையமாக உருவானது. உலகம் முழுவதும் பரந்து விரிந்த கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல் என புரிந்து கொள்ளப்படும் இணையத்தின் மீதான சேவையாக ’வலை’ என அறியப்படும் ’வைய விரிவு வலை’ (world wide web ) 1991 ல் அறிமுகமானது. அதன் பிறகு தான் கூகுள் அறிமுகமானது. பொதுவாக வலை என்பது இணையமாக கருதப்பட்டாலும் இரண்டும் வேறுவேறானது. மாபெரும் வலைப்பின்னலான இணையம் மூலம் உருவாக்கப்பட்ட மகத்தான சேவை ’வலை’. அதாவது வெப்.
ஆனால், கம்ப்யூட்டர்களின் பயன்பாடு இணையத்திற்கு முன்னரே துவங்கிவிட்டது. 1940 களிலும் 1950 களிலும் கம்ப்யூட்டர்கள் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக ராணுவ பணிகள் மற்றும் ஆய்வுத்துறையில் அதிகம் பயன்பட்டன. இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் ராணுவத்தேவையே கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதிய சேவைகளுக்கு வித்திட்டன.
இந்த பின்னணியில் தான், 1962 ல் அமெரிக்க ராணுவம் தொலைதூர தேடலில் அவசியத்தை உணர்ந்தது. அதாவது ஒரு மைய கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களில் இருந்து வேறு ஒரு கம்ப்யூட்டர் மூலம் கேள்வி கேட்டு அதற்கான பதிலை பெறும் வசதியை உருவாக்க விரும்பியது. சோவியத் யூனியனுடனான பனிப்போரின் விளைவாக இப்படி ஒரு வசதியை உருவாக்கும் தேவை உணரப்பட்டது.
கபிபோர்னியாவின் மெலேனே பார்க்கில் அமைந்திருந்த , ஸ்டான்போர்ட் ஆய்வு மைத்தில், இதற்கான பணியை ஆய்வு மாணவரான சார்லஸ் பவுர்னே (charles Bourne ) என்பவர் லியோனாட் சைட்டின் (Leonard Chaitin) எனும் சக ஆய்வாளர் உதவியுடன் மேற்கொண்டார். இதற்காக அவர்கள் காந்த பட்டையில் உருவாக்கிய தரவுகள் பட்டியல் 350 மைல் தொலைவில் அமைந்திருந்த சாண்டா மோனிகாவில் வீற்றிருந்த ராட்சத ராணுவ கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்பட்டது. அதன் பிறகு, இங்கிருந்த கம்ப்யூட்டரில் ஒரு கேள்வியை டைப் செது அனுப்பி வைத்தனர். அந்த கேள்வி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி மூலம் மைய கம்ப்யூட்டரை சென்றடைந்து அதில் தகவல்களை தேடி எடுத்து பொருத்தமான பதில், இங்குள்ள கம்ப்யூட்டர் திரையில் மின்னியது. ஏறக்குறைய இன்றைய கூகுளும் இப்படி தான் செயல்படுகிறது.
தொலைபேசி வழியே இணைக்கப்பட்டு, கம்ப்யூட்டர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டதே ஆன்லைன் உலகிற்கான மூல விதையாக அமைந்தது. ஆன்லைன் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடிந்தது,. அந்த வகையில் ஆன்லைன் மூலம் தொலைதூர தேடல் சாத்தியம் என்பதை 1963 ல் சார்லஸ் பவுர்னே மற்றும் லியோனாட் முதன் முதலில் நிகழ்த்திக்காட்டினர். இதுவே உலகின் முதல் ஆன்லைன் தேடலாக கருதப்படுகிறது. எனினும் அந்த கால கட்டத்தில் இது தேடல் என குறிப்பிடப்படாலம், ஆன்லைன் தகவல் மீட்டெடுத்தல் (Online Information Retrieval ) என்றே குறிப்பிடப்பட்டது. ஆன்லைன் தரவுகள் பட்டியலில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பது என இதை புரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான வரலாறாக இருக்கிறது அல்லவா? பரவலாக அறியப்படாத இந்த வரலாற்றை சுட்டிக்காட்டி தான் அண்மையில், ஸ்மித்சோனியன் இணையதளம், முதல் இணைய தேடல் எது எனும் கேள்வியை எழுப்பி, தேடியந்திரமான கூகுள் இதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என குறிப்பிட்டு, இந்த வரலாற்று கதையை விவரித்துள்ளது. : https://bit.ly/2MBgYps
இதை கூகுள் தேடியந்திரத்தின் போதாமையாக கொள்ளலாமா? கூகுள் என்றில்லை, போட்டித்தேடியந்திரமான பிங் மற்றும் ஐரோப்பிய தேடியந்திரமான குவாண்ட் ஆகிய தேடியந்திரங்களும், ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் யார்? எனும் கேள்விக்கு ஆலன் எம்டேஜ் என்றே பதில் அளிக்கின்றன. இதை தேடியந்திரங்களை இயக்கும் அல்கோரிதம்களின் போதாமை என்று சொல்லலாம். ஆனால் ஒன்று, இந்த கேள்விக்கு கூகுள் தவறான பதிலை அளிக்கிறது எனும் கட்டுரை வெளியான பிறகு, இதே கேள்வியை கூகுளில் தேடிப்பார்த்தால், ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் ஆலன் எம்டேஜ் தான் என்று சொல்கிறது. ஆனால், அதே பக்கத்தில் இடையே உள்ள தேடல் முடிவில், இந்த விஷம் தொடர்பான ஸ்மித்சோனியன் இணையதள கட்டுரையும் எட்டிப்பார்க்கிறது. இதை ஒருவிதத்தில் தேடியந்திர நீதி என சொல்லலாம்!
நிற்க, ஆதிகால ஆன்லைன் தேடல் வரலாறு பற்றி அறிந்து கொள்ள விரும்பினால், சார்லஸ் பவுர்னே எழுதிய ’இணைய தகவல் சேவைகளின் வரலாறு’ (A History of Online Information Services) எனும் புத்தகத்தை நாடலாம்.
=