கேட்ஜெட்டில் இருந்து விடுதலை அளிக்கும் புதுமை கேட்ஜெட்கள்!

irlglassesசரி வாருங்கள், நாம் கேட்ஜெட்டில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழிகள் பற்று சிந்திக்கலாம். இதற்காக என்று அறிமுகமாகியிருக்கும் புதுமையான கேட்ஜெட்டில் இருந்தே இதை துவக்கலாம். இது என்ன முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதே என நினைத்தால், உங்கள் எண்ணம் மிகச்சரி தான். இது நம் காலத்து முரண். கேட்ஜெட்களும், தொழில்நுட்பங்களும் எல்லாமுமாக இருக்கும் முரண். அதனால் தான் கேட்ஜெட்களில் இருந்து விடுபட நினைத்தாலும் நமக்கு கேட்ஜெட் தேவைப்படுகிறது.

நம் வாழ்க்கையில் கேட்ஜெட்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கியிருப்பதை நீங்கள் விவாதம் இன்றி ஒப்புக்கொள்வீர்கள். ஸ்மார்ட்போன் இல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. அந்த ஸ்மார்ட்போனில் ஒரு மூளையில் இருந்து எட்டிப்பார்க்கும் நோட்டிபிகேஷன்கள் தான் நம்மை இயக்கி கொண்டிருப்பதாக கூட சொல்லலாம். எப்போதும் அதில் நாம் முக்கியமான ஒன்றை எதிர்பார்த்து கொண்டே இருக்கிறோம்.

ஸ்மார்ட்போன் தவிர, ஸ்மார்ட் பட்டை ( உடல் தகுதி கண்காணிப்பு சாதனம்), ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் ஸ்பீக்கர் என இன்னும் பல ஸ்மார்ட் சாதனங்களுக்கு நாம் பழகி வருகிறோம். இவைத்தவிர ஸ்மார்ட் ஹோம் சாதனங்களும் இருக்கின்றன. செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது செய் பட்டியலை ( டு டூ லிஸ்ட்) தயாரிக்க வேண்டும் என்றால் கூட, அலெக்சா போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இருக்கின்றன என விளம்பரம் செய்து ஸ்மார்ட் வலை விரிக்கின்றனர்.

ஆக, நாம் சாதனங்களால், அதாவது கேட்ஜெட்களால் சூழப்பட்டிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படி கேட்ஜெட்களிலும், அவற்றின் திரைகளிலும் மூழ்கி இருப்பதால் ஏற்படும் நிஜ வாழ்க்கை இழப்புகள் பற்றி கரிசன இலக்கியங்கள் உருவாகத்துவங்கியிருக்கின்றன. கேட்ஜெட் மோகம் மற்றும் சமூக ஊடக பழக்கத்தால், இரத்தமும் சதையுமான நட்புகளையும், உறவுகளையும் மறந்துவிட்டு இணைய உலக சந்திப்புகளிலும், உரையாடல்களிலும் மூழ்கி கிடக்கிறோம். நேர் சந்திப்பு உரையாடல் மற்றும் புன்சிரிப்பு பரிமாற்றங்களைவிட, பேஸ்புக் விருப்பங்களும், வாட்ஸ் அப் செல்பீகளும் ஏற்புடையாக இருக்கின்றன. இவற்றின் மூலம் நாம் பெறுவது என்ன? இழப்பது என்ன? என்பது பற்றி ஆழமாக யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

கேட்ஜெட்களால் உண்டாகியிருக்கும் இந்த நிலைக்கு, கேட்ஜெட்களே தீர்வாக ஆக முடியுமா? ஆம், என்று நம்புகிறவர்கள் இருக்கின்றனர். இதற்கான கேட்ஜெட்களையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்த வகை கேட்ஜெட்களுக்கான சமீபத்திய உதாரணத்தை பார்க்கலாமா? தொழில்முனைவோரும் பொறியாளருமான ஸ்காட் ப்ளு மற்றும் இணய கலைஞருமான இவான் கேஷ் இணைந்து, ஐ.ஆர்.எல் கிளாஸ் எனும் பெயரில் இதை உருவாக்கியுள்ளனர்.

கூகிங் கிளாஸ் எனப்படும் குளிர் கண்ணாடி ரகத்தைச்சேர்ந்த இதை மாயக்கண்ணாடி என்று வர்ணிக்கலாம். ஏனெனில் இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால் எந்த திரையும் கண்ணில் தெரியாது. அதாவது, இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தால், டிவி திரையோ, நவீன விளம்பர பலகையோ கண்ணில் தெரியாது. நவீன திரைகளில் இருந்து வெளிப்படும் எல்.இ.டி மற்றும் எல்.சி.டி ஒளி அலைவரிசைகளை தடுக்கும் வகையில் இந்த கண்ணாடி உருவாக்கப்பட்டுள்லதால் இதை அணிந்து கொண்டிருக்கும் போது டிவி படம் கண்ணில் தெரியாது. (எல்.இ.டி திரைகள் இல்லை என்பதால் ஸ்மார்ட்போனில் இவை செயல்படாது).

cashவீட்டிலும் வெளியிலும் நம்மைச்சுற்றி திரைகளின் ஆதிக்கம் இருப்பதால், இந்த கண்ணாடி அவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும். டிவி திரைகளை மறையச்செய்யும் கண்ணாடி என்பது நிஜ வாழ்க்கையில் சாத்தியமான அறிவியல் புனைகதை சங்கதி போல இருக்கிறதா? இதை தான் ஐ.ஆர்.எல் கிளாசும் நோக்கமாக கொண்டிருக்கிறது. அதாவது, திரைகளில் இருந்து விடுபட்டு நிஜ வாக்கையில் நம்மை லயிக்கச்செய்வது. அதனால் தான் இதற்கு ’இன் ரியல் லைப்’ ( ஐ.ஆர்.எல்) கிளாஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ணாடியை உருவாக்கும் ஐடியா ஸ்காட் ப்ளூமிற்கு, நவீன திரைகளில் இருந்து வெளியாகும் ஒளியை தடுக்கும் ஒரு வகை பிலிம் பற்றிய வயர்டு இதழ் கட்டுரையை படித்த போது உண்டானதாக அதே இதழுக்கான பேட்டியில் கூறியிருக்கிறார். அதன் பிறகு, இந்த எண்ணத்தை இணைய கலைஞரான இவான் கேஷிடம் கொண்டு சென்றிருக்கிறார். இணையம் சார்ட்ந்த புதுமை மற்றும் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வரும் கேஷுக்கும் இந்த ஐடியா பிடித்திருக்கவே இதற்கு ஐ.ஆர்.எல் கிளாசாக வடிவம் கொடுத்திருக்கின்றனர். இருவரும், இதை இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகம் செய்து கேட்டதை விட அதிக நிதி திரட்டியிருக்கின்றனர்.

நிஜ வாழ்க்கையில் இந்த கண்ணாடி எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை. கிடப்பில் போடப்பட்ட கூகுள் கிளாஸ் அல்லது இதுவரை அதிக வரவேற்பை பெறாத ஸ்னேப் நிறுவனத்தின் படமெடுக்கும் கண்ணாடி பட்டியலில் இதுவும் சேர்ந்துவிடுமா என்பதும் தெரியவில்லை. ஆனால், நவீன திரைகளை மறையச்செய்யும் கண்ணாடி என்ற முறையில் கருத்தாக்க அளவில் இதை வரவேற்று கொண்டாடலாம் என்று தோன்றுகிறது.

இந்த எண்ணத்தை தான் பிரபல இணைய இதழான வாக்சும் வெளிப்படுத்தியுள்ளது. அந்த இதழில், கெய்ட்லின் டிபானே என்பவர் எழுதியுள்ள கட்டுரையில், மேலும் கேட்ஜெட்களே நம்மை கேட்ஜெட்களில் இருந்து விடுவிக்கும் என கூறியுள்ளார். ஐ.ஆர்.எல் கிளாஸ் தவிர அண்மையில் அறிமுகமான சின்னஞ்சிறிய ஸ்மார்ட்போனான பாம் போனையும் அவர் மேற்கொள் காட்டி தனது கருத்தை விவரித்திருக்கிறார்.

பாம் நிறுவனம், ஒரு வகையில் ஸ்மார்ட்போனுக்கான முன்னோடி என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பாம், ஸ்மார்ட்போனை முதலில் அறிமுகம் செய்ததாக இதற்கு பொருள் இல்லை. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது போல,  பல ஆண்டுகளுக்கு முன் பாம் நிறுவனம் அறிமுகம் செய்த பி.டி.ஏ எனப்படும் கையடக்க கம்ப்யூட்டர்களில் இருந்து ஸ்மார்ட்போன் வந்ததாக வைத்துக்கொள்ளலாம். இந்த வரலாற்றில் ஆப்பிளின் நியூட்டனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் விட்டுவிட்டு இப்போது பாமின் புதிய போனுக்கு வருவோம்.

ce405d2a7ca0ee5a67d35579c32aa83c_originalபாம் நிறுவனம் இடைப்பட்ட காலத்தில் வேறு நிறுவனத்திற்கு கைமாறி இழுத்து மூடப்பட்டு விட்டது. அதன் பிராண்ட் பெயரை வைத்திருக்கும் நிறுவனம் இப்போது, பாம் பெயரில் ஸ்மார்போனை அறிமுகம் செய்துள்ளது. இன்னொரு ஸ்மார்ட்போனா? என கேட்க தோன்றினாலும், இந்த போனில் என்ன சிறப்பம்சம் என்றால், இது அளவில் சிறியதாக உள்ளங்கையில் அடங்கி விடுவது போல இருக்கிறது. மேலும் இதில் அடிப்படையான வசதிகள் தவிர, கவனச்சிதறலுக்கு வழி வகுக்கும் கூடுதல் அம்சங்கள் எதுவும் கிடையாது. எனவே இந்த போன், ஏற்கனவே உள்ள பெரிய ஸ்மார்ட்போனுக்கு, துணை போனாக இருக்குமாம். கவனச்சிதறல் வேண்டாம், ஆனால் ஸ்மார்ட்போன் தேவை எனும் போது இந்த சிறிய ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாமாம். அதிலும் வார இறுதி நாட்களில் இந்த போனை வைத்துக்கொண்டால், விடுமுறை மனநிலை பாழாகாமல் இருக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தா? என்று தெரியவில்லை. ஆனால் ஸ்மார்ட்போனில் இருந்து விடுபட, இன்னொரு ஸ்மார்ட்போன் என்பது கொஞ்சம் புதுசாக இருக்கிறது அல்லவா? ஆக, கெட்ஜெட்டில் இருந்து விடுபட நமக்கு கேட்ஜெட் தேவைப்படுகிறது அல்லது, அப்படி நினைக்க வைக்க முயற்சிக்கின்றனர். எப்படி இருந்தாலும், கேட்ஜெட்களில் இருந்து சுதந்திரம் பெறுவோம். கேட்ஜெட்களுக்கு ஜே போடுவோம்!

பி.கு; கேட்ஜெட்களில் இருந்து விடுதலை பற்றி பேசும் போது, நோபோன் பற்றி குறிப்பிடாமல் இருப்பது கெட்ஜெட் குற்றமாகிவிடும். ஸ்மார்ட்போன் போன்ற தோற்றத்தில் ஆனால் போனின் எந்த அம்சமும் இல்லாமல் அறிமுகமானது நோபோன். ஸ்மார்ட்போன் அடிமைப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமா? நோபோனை வாங்குங்கள் என முதலில் நையாண்டியாகவே அறிமுகம் செய்தாலும், அடுத்த கட்டத்தில் இந்த போனல்லாத போன் நிஜ கேட்ஜெட்டாகவே அறிமுகமானது. நோபோன் பற்றி அறிய:https://www.thenophone.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *