என்னுடைய வலைப்பதிவுக்கு அதிக வாசகர்களை பெறுவது எப்படி? வலைப்பதிவு செய்ய விரும்பும் எவருக்கும் முதலில் எழக்கூடிய கேள்விகளில் ஒன்றாக இது இருக்கும். ஆரம்ப வலைப்பதிவாளர்கள் என்றில்லை, அனுபவசாலிகளும் கூட கேட்க கூடிய கேள்வி தான் இது.
இந்த கேள்விக்கு நுணுக்கமான பதில்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் செயல்படுத்த வேண்டும் எனில் அடிப்படையாக ஒன்றை செய்தாக வேண்டும். அது தொடர்ந்து வலைப்பதிவு செய்வது தான்.
ஆர்வம் காரணமாக வலைப்பதிவு செய்யத்துவங்கும் பலரும், ஆரம்ப வேகத்திற்கு பிறகு தொடர்ந்து பதிவிட முடியாமல் தடுமாறுவதுண்டு. தொடர்ந்து வலைப்பதிவு செய்துவிட்டு, திடிரென பாதியில் வலைப்பதிவை மறந்து போனவர்களும் உண்டு. சிலர், தோன்றும் போதெல்லாம் பதிவு செய்யும் சோம்பல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இப்படி எல்லாம் செய்யாமல் தொடர்ந்து சீராக பதிவுகளை வெளியிடுவது தான், வெற்றிகரமாக வலைப்பதிவு செய்வதற்கான அடிப்படை அம்சங்களில் ஒன்று. இதை எப்படி செய்வது என்பதற்கு வலைப்பதிவு பாடங்கள் எல்லாம் இருக்கின்றன. எனினும் இந்த பதிவு அந்த பாடங்கள் பற்றியது அல்ல: மாறாக, வலைப்பதிவாளர்கள் இந்த சரியாக செய்ய ஊக்கமளிக்கும் வகையில் அறிமுகமாகியுள்ள ஒரு இணையதளம் பற்றிய பதிவு இது.
அக்கவுண்டபிள் பிலாகிங் (accountableblogging.com ) எனும் அந்த தளம் வலைப்பதிவாளர்கள் தாங்கள் சீராக வலைப்பதிவு செய்கிறோமா என சுய கண்காணிப்பு செய்து கொள்ள வழி செய்கிறது.
வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவு முகவரியை இந்த தளத்தில் சமர்பித்தால் போதும், அவர்கள் வாரம் எத்தனை முறை பதிவிடுகின்றனர், பதிவுகளுக்கான இடைவெளி என்ன போன்ற தகவல்களை அளிக்கிறது. வலைப்பதிவுக்கான, இமெயில் சந்தா வசதியை கொண்டு இந்த தகவல்களை திரட்டித்தருகிறது. அப்படியே சராசரியாக எத்தனை பதிவுகளை வெளியிடுகிறீர்கள் போன்ற புள்ளி விவரத்தையும் அளிக்கிறது.
இந்த புள்ளி விவரங்களை பார்க்கும் போது, வலைப்பதிவின் சீரான தன்மையை புரிந்து கொள்ளலாம். இதுவே ஊக்கம் அளிக்கும் வகையில் அமையலாம். இடையே தொய்வு ஏற்பட்டாலும் கண்டறிந்து திருத்திக்கொள்ளலாம்.
வலைப்பதிவில் ஆர்வம் கொண்டவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து வலைப்பதிவு செய்ய நிர்பந்திக்கும் வசதியையும் இந்த தளம் அளிக்கிறது.
இணையதள முகவரி: https://accountableblogging.com/