2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறுமா? எனும் கேள்வி ஒரு புறம் இருக்க, கட்சி தேர்தலுக்கான தயாரிப்பை துவக்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியும் தீவிர்மாகியுள்ளது. இதற்காக என்று காங்கிரஸ் சார்பில் பிரத்யேக இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை அறிவதற்காக இந்த தளம் (https://manifesto.inc.in/ ) அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தங்கள் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளலாம்.
ஆங்கிலம் தவிர, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் இந்த தளம் செயல்பட்டு வருகிறது. இது தவிர வாஸ்ட் அப் கணக்கும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது வெறும் சம்பிரதாய முயற்சியா என்று தெரியவில்லை. ஆனால், தேர்தல் அறிக்கை தயாரிப்பில் வாக்களர்கள் கருத்து முக்கியம் என்று நினைத்திருப்பதும் இணைய யுகத்தில் அதற்கான சாதனங்களை பயன்படுத்த முயன்றிருப்பதும் நல்ல விஷயம்.
இணையம் பிரதானமாக உரையாடலுக்கான வெளியாக இருக்கிறது. அதன் ஆற்றலை, தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துக்களை அறிய காங்கிரஸ் திட்டமிட்டிருப்பது வரவேற்க தக்கது தான்.
வாக்காளர்களும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.
வாக்காளர்கள் கருத்து தேர்தல் அறிக்கையில் எந்த அளவு பிரதிபலிக்கிறது என பார்க்கலாம். இது ஒரு துவக்கம் தான், தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உண்டானால், தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படுவதை வாக்காளர்கள் கண்காணிக்கவும் இது போன்ற இணையதளம் அமைக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஆலோசனை இணையதளம்: https://manifesto.inc.in/
–