நீங்கள் டிவிட்டர் பயனாளி என்றால், உங்கள் டைம்லைனில் உருதி மொழியில் பெயர்கள் தோன்றுவதை பார்த்து, குழப்பமும் வியப்பும் அடைந்திருக்கலாம். அதே நேரத்தில், ’உருது மொழியில் என் பெயர்’ (#MyNameInUrdu ) எனும் ஹாஷ்டேகும் முன்னிலை பெறுவதை கவனித்திருக்கலாம்.
டிவிட்டரில் அடிக்கடி வீசத்துவங்கியிருக்கும் ஹாஷ்டேக் அலைகளில் சமீபத்திய அலை தான் இது என்றாலும், இந்த ஹாஷ்டேக் உருவான விதம் ஊக்கமும், உற்சாகமும் அளிக்க கூடியது. இணையத்தின் ஆற்றலையும் உணத்துவதாக இருக்கிறது.
வெறுப்புக்கு எதிரான புதிய இயக்கமாக எழுச்சி பெற்றிருக்கும், இந்த ஷாஷ்டேக் பின்னணி கதை கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. பத்திரிகையாளரும், பெண்ணியவாதியுமான பிரபா ராஜ் என்பவர் தான் இந்த ஹாஷ்டேகின் மையமாக இருப்பவர். ஆனால், இந்த ஹாஷ்டேகை அவர் உருவாக்கவும் இல்லை, இதை பரப்புமாறு அவர் வேண்டுகோளும் வைக்கவில்லை. எல்லாம் தானாக நிகழந்திருக்கிறது.
இந்த ஹாஷ்டேகின் தாக்கம் காரணமாக தான் பலரும், தங்கள் டிவிட்டர் பெயரை உருது மொழியில் இடம்பெறச்செய்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்கம் எப்படி உண்டானது என, பிரபா ராஜ், தி வயர் இணைய இதழில் எழுதிய பத்தியில் விவரித்திருக்கிறார்.
பிரபா ராஜ் டிவிட்டரில் தீவிரமாக இயங்கி வருபவர். டீப்சீலயனஸ் (@deepsealioness) எனும் அவரது டிவிட்டர் பக்கத்தை பார்த்தாலே இதை புரிந்து கொள்ளலாம். அரசியல் பார்வை உள்ளிட்ட தனது கருத்துக்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள அவர் தயங்காதவர். தனது கருத்துக்களுக்காக டிவிட்டரில் கடும் எதிர்வினையை சந்திக்கும் அனுபவமும் அவருக்கு உண்டு.
சமூக பிரச்சனைகள் குறித்த விவாதங்களை துவக்க விரும்புகிறவராகவே பிராபவை புரிந்து கொள்ளலாம் என்றாலும், உருது மொழி தொடர்பான எந்த ஒரு விவாதத்தையும் ஆரம்பிக்கும் எண்ணம் அவருக்கு இருக்கவில்லை. உருது மொழியில் எழுதவோ, பேசவோ தெரியாது என்றாலும், அழகிய எழுத்து வடிவம் காரணமாக உருது மொழியை அவருக்கு பிடிக்கும்.
பிரபாவுக்கு உருது மொழி மீது இருக்கும் ஈர்ப்பை உணர்ந்த தோழி ஒருவர் அவரது பெயரை உருது மொழியில் எழுதி தந்திருக்கிறார். பிரபா அந்த பெயரையே தனது டிவிட்டர் கைப்பிடியில் உருது மொழியில் தனது பெயரையும் சேர்த்துக்கொண்டார். எந்தவித திட்டமிடலும், எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இதை செய்திருந்தார்.
ஆனால், அவர் சற்றும் எதிர்பாராத விதமாக, கடுமையான எதிர்வினையை இந்த செயலுக்காக அவர் சந்திக்க வேண்டியிருந்தது. புதிய டிவிட்டர் பெயர் காரணமாக பலரும் அவர் மீது தாக்குதல் நடத்தினர். மோசமான கருத்துகள், வசைகள் என பலவிதமாக இவை அமைந்திருந்தன. இந்த வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைத்தார்.
இந்த தாக்குதலும், துவேஷமும் தன் மீதல்ல, தனது பெயர் மீது தான் அவர் புரிந்து கொண்டார். இந்த வெறுப்பு எனது குறும்பதிவுகள் தொடர்பானது அல்ல, தன் மீது ஊகித்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய அடையாளம் மீது தான் என்பதை புரிந்து கொண்டதாக பிரபா குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் தொடர்ந்த நிலையில், இது பற்றி அவர் தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார்.
எனது இந்து பெயரை உருதுவில் எழுதியிருப்பதால் கடந்த சில நாட்களாக மிக மோசமான தாக்குதலை எதிர்கொண்டு வருகிறேன், நீங்கள் யார் யாராக இருந்தாலும் சரி, உங்கள் பெயர் இஸ்லாமிய பெயராக கருதப்பட்டால் மோசமான டிரால்களை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அது மட்டும் அல்ல, இந்த துவேஷ தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், டிவிட்டரில் தான் உருது பெயரை தொடர்ந்து வைத்திருப்பேன் என்று கூறினார். இதன் பிறகும் அவர் சற்றும் எதிர்பாராதது நடந்தது. அவரது குறும்பதிவை பார்த்த பலர், அவருக்கு ஆதரவு தெரிவித்ததோடு , வெறுப்பு கருத்துகளை தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் பெயரையும் உருது மொழியில் மாற்றிக்கொண்டனர்.
இதனிடையே, இன்னும் சிலர், #MyNameInUrdu எனும் ஹாஷ்டேகுடன் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்த ஹாஷ்டேகை பயன்படுத்திய பலரும், மத அடையாளம் காரணமாக தாங்கள் எதிர்கொள்ளும் கருத்துகள் குறித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். மெல்ல இதுவே ஒரு இயக்கமாக உருவெடுத்தது.
டிரால்களின் இணைய வெறுப்பை டிவிட்டர் பயனாளிகள், அன்புக்கான ஆதரவாக மாற்றினர். ஒருவரை கூட நான் பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கேட்கவில்லை, ஆனால் பலரும் தாங்களாக முன் வந்து பெயரை மாற்றிக்கொண்டு ஆதரவு தெரிவித்ததாக நாளிதழ் பேட்டி ஒன்றில் பிரபா கூறியுள்ளார். மேலும் பலர் இந்த ஆதரவு அலையில் இணைந்த நிலையில், எனக்கு பக்கபலமாக நிற்க வேண்டாம், ஆனால் இணைய வெறுப்புக்கும், வீண் பிடிவாதத்திற்கும் எதிராக இந்த ஹாஷ்டேகை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
அது போலவே பலரும், இணைய வெறுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்கள் பெயரை உருது மொழியில் மாற்றிக்கொண்டு, #MyNameInUrdu எனும் ஷாஷ்டேகையும் பயன்படுத்தினர். பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பலரும் இதை செய்தனர். அது மட்டும் அல்ல, இந்த உரையாடல் இணைய வெளியில் பரவியதை அடுத்து பாகிஸ்தானில் உள்ள டிவிட்டர் பயனாளிகள் பலர், தங்கள் பெயரை இந்தி மொழியில் மாற்றிக்கொண்டு, இணைய வெறுப்புக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
இந்தியில் பெயரை எழுதுக்கொள்வது தனக்கு வியப்பை அளித்ததாகவும் பிரபா கூறியுள்ளார். இந்த போக்கு பிரபலமாகி பாகிஸ்தானில் உள்ளவர்களும் இந்தியா மீதான அன்பை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். சாதி, மத, மொழி, பாலின பேதம் காரணமாக பரஸ்பரம் வெறுப்பை காட்டத்தேவையில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனது தாய் மொழியான தமிழிலும் பலர் இந்த ஹாஷ்டேகிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறித்தும் அவர் குறும்பதிவிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மிக அழகான விஷயம் நடந்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். டிவிட்டர் பெயரை மாற்றிக்கொள்வது வெறும் குறியீடு தான். எந்த மொழியையும் இது புகழ்பாடவில்லை. வெறுப்புக்கு எதிரான செயல் இது என்றும் அவர் தனது பத்தியில் தெரிவித்துள்ளார்.
இது நம்முடைய இயக்கம், இந்தியர்களாக நாம், வெறுப்புக்கு எதிராக ஒன்று நிற்போம் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
–
தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது