காதலுக்கு கைகொடுக்கும் செயலிகள்!

datingஸ்மார்ட்போன் உலகில் காதல், டிண்டர் மயமாகி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். டிண்டருக்கு (Tinder ) என தனி மொழியும் இருக்கிறது. இந்த செயலியில் ஒருவரை வலப்பக்கம் ஸ்வைப் செய்தால் பிடிச்சிருக்கு என சொல்வதாக அர்த்தம். அதே இடப்பக்கம் ஸ்வைப் செய்தால், பிடிக்கவில்லை என உணர்த்துவதாக பொருள் கொள்ளலாம். பரஸ்பரம் இருவர் வலப்பக்கம் ஸ்வைப் செய்தால், சேட்டிங் செய்து டேட்டிங் பாதையில் முன்னேறலாம்.

புதுயுக செயலிகள் டிண்டர் தனக்கென தனியிடம் பிடித்துக்கொள்ள, டிண்டருக்கு போட்டியாகவும் பலவித செயலிகள் உருவாகியிருக்கின்றன. எல்லாம் சரி, டேட்டிங் எனப்படும் காதல் பரிசோதனை கொஞ்சம் ரிஸ்கும் நிறைந்தது. டேட்டிங் அனுபவம் மோசமாகி காதலே கசந்து போகலாம். இது போன்ற சூழல்களில் என்ன செய்வது?

இந்த கேள்விக்கு, உற்சாகமாக பதில் அளிக்கும் வகையில் ’பாட்டேட்டிங் ஆப்’ (http://boddatingapp.com/ ) உருவாகி இருக்கிறது. அது என்ன பாட் என கேட்டால், மோசமான ஆன்லைன் டேட்டிங் அனுபவத்தை குறிக்கும் ஆங்கில வார்த்தைகளின் (பேட் ஆன்லைன் டேட்) சுருக்கம் தான் இது.

ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் டேட்டிங்கில் ஈடுபடும் போது, அந்த அனுபவம் கசப்பான அனுபவமாகி மாறும் சூழல்நிலையில், கைகொடுத்து கரை சேர்க்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படையில், இதை டேட்டிங்கிற்கான மாற்று திட்டம் ( பிளான் பி) என்கிறது இந்த செயலி.

பிளான் பி என்பது எம்பிஏ பட்டதாரிகள் உலகில் பிரபலமாக இருக்கும் கருத்தாக்கம். எந்த திட்டத்தை வகுத்தாலும், அது சொதப்பினால் என்ன செய்வது எனும் முன்யோசனையோடு மாற்று திட்டமான பிளான் பியை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்பது இதன் அடிப்படை.

இந்த கருத்தாக்கத்தை தான், மேலே சொன்ன செயலி டேட்டிங் உலகிற்கு கொண்டு வந்திருக்கிறது. டேட்டிங்கில் ஈடுபட்டிருக்கும் போது, கசக்கத்துவங்கினால், சோக கீதம் பாடி புலம்பிக்கொண்டிருக்காமல், இந்த செயலி வாயிலாகவே, புதிய டேட்டிங் ஜோடியை முயன்று பார்க்கலாம். இது தான் பிளான் பி. செயலியால் இப்படி பரிந்துரைக்கப்படுபவரும், தன் பங்கிற்கு மோசமான டேட்டிங் அனுபவத்திற்கு உள்ளாகி, புதிய ஜோடி தேடுபவராக இருப்பார் என்பதால் இது ஒர்க் அவுட்டாக வாய்ப்பு அதிகம். அவரை தொடர்பு கொண்டு உரையாடி, டேட்டிங்கிற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம். இது தான் பாட் செயலியின் சிறப்பம்சம்.

மோசமான டேட்டிங்கை எதிர்கொள்ளும் போதே, அந்த வாய்ப்பையே அடுத்த டேட்டிங்கிற்கான வாய்ப்பாக மாற்றிக்கொண்டு காதிலில் வெல்லுங்கள் என்கிறது இந்த செயலி. டேட்டிங் செயலிகளில் இன்னொரு புதுமை என இதை வர்ணிக்கலாம். இதே போல டேட் எஸ்கேப் (Date Escape) எனும் செயலி, மோசமான டேட்டிங்கில் சிக்கி கொள்ளும் போது அதில் இருந்து தப்பிச்செல்வதற்கான வழியை செயலி வழியே யோசனையான அனுப்பி வைத்து மீட்டெடுக்கிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், சாம்சங் நிறுவனமும் புதுமையான டேட்டிங் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. நிறுவனம் நவீன அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் பிரிட்ஜை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பிரிட்ஜ் மூலம் டேட்டிங் செய்யும் வகையில் அதன் செயலி அமைந்துள்ளது. அதெப்படி பிரிட்ஜ் மூலம் டேட்டிங் சாத்தியம் என கேட்கலாம். பிரிட்ஜுக்குள் இருக்கும் பொருட்கள் கொண்டு இந்த டேட்டிங் உத்தி செயல்படுகிறது.

நள்ளிரவு நேரத்தில் பசியோடு பிரிட்ஜை திறந்து பார்க்கும் போது, அதில் உள்ள பொருட்கள் பசியை போக்க முழுமையாக இல்லாத சூழலில், அந்த பொருட்களை படம் எடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும். இதே போல படத்தை பகிர்ந்து கொள்ளும் சக பிரிட்ஜ் நபர்களோடு, அவர்களின் பொருட்கள் பரஸ்பர் ஒத்துப்போவதன் அடிப்படையில் டேட்டிங் அனுபவம் பரிந்துரைப்பட்டும். விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் பிர்ட்ஜுக்கானது என்றாலும், தனியேவும் இந்த செயலியை இணையம் மூலம் பயன்படுத்தலாம்: https://www.refrigerdating.com/signup

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *