இணையவாசிகள் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் நாமும் பங்களிப்பு செய்யலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புதிய கட்டுரையை எழுதி சமர்பிப்பதில் துவங்கி, ஏற்கனவே உள்ள கட்டுரையில் தகவல்களை சேர்ப்பது அல்லது திருத்துவதன் மூலம் உங்கள் பங்களிப்பை செலுத்தலாம். ஆங்கிலம் தவிர, தமிழிலும் பங்களிக்கலாம்.
ஆனால், விக்கியின் செயல்முறையை புரிந்து கொண்டு பங்களிப்பதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால் அல்லது விக்கிபீடியாவில் பங்களிக்க இன்னும் ஊக்கம் தேவைப்பட்டால், இப்போது அதற்கான மிக எளிய வழியை விக்கிமீடியா ( விக்கிபீடியாவின் தாய் அமைப்பு) உருவாக்கித்தந்துள்ளது. உங்கள் பகுதியை சுற்றியுள்ள இடங்களின் புகைப்படங்களை எடுத்து சமர்பிக்க விக்கிமீடியா அழைப்பு விடுத்துள்ளது.
விக்கிபீடியாவில் லட்சக்கணக்கான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்டுரைகள் புகைப்படங்களையும் கொண்டிருக்கின்றன. இவைத்தவிர, விக்கிபீடியா, எவரும் பகிரக்கூடிய கிரியேட்டிவ் காமென்ஸ் உரிமை கொண்ட புகைப்படங்களையும் கொண்டுள்ளது. ஆனால், உலகில் உள்ள எல்லா இடங்களுக்குமான புகைப்படங்கள் இருப்பதாக கூற முடியாது. பல இடங்களுக்கான படங்கள் இன்னமும் சேர்க்கப்படாமல் இருக்கின்றன.
இந்த குறையை போக்குவதற்காக, பயனாளிகள் புகைப்படங்களை சமர்பிக்க விக்கிமீடியா அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள விக்கிஷீட்மீ (WikiShootMe ) தளத்தில் வாயிலாக பயனாளிகள் புகைப்படங்களை எடுத்து சமர்பிக்கலாம்.
புகைப்படங்களை சமர்பிப்பது மிகவும் எளிதானது. விக்கிஷுட்மீ தளத்தில் நுழைந்ததும், உங்கள் இருப்படத்தை உணர்வதற்கான அனுமதி கோரப்படும். அதற்கு ஒப்புக்கொண்டதும், உலக வரைபடம் திரையில் தோன்றும். அந்த படம், உங்கள் இருப்பிடம் சார்ந்த பகுதியை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கும்.
வரைப்படத்தில் பார்த்தால், சிவப்பு, நீலம், மஞ்சள் உள்ளிட்ட வண்ணங்களில் பலவித அளவுகளில், வட்டங்கள் தோன்றுவதை பார்க்கலாம். அந்த வட்டங்கள் அனைத்தும், குறிப்பிட்ட பகுதிக்கான விக்கிதரவுகளின் புகைப்பட விவரங்களை உணர்த்துகின்றன. சிவப்பு வட்டம் எனில் குறிப்பிட்ட அந்த இடத்திற்கான புகைப்படம் விக்கிபீடியா வசம் இல்லை, தேவை என பொருள். பச்சை வட்டம் எனில் அந்த இடத்திற்கான படம் இருப்பதாக பொருள். சிறிய நீல நிற வட்டம் எனில், அந்த இடத்திற்கான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை உள்ள படம் இருப்பதாக பொருள். மஞ்சள் வட்டங்கள் எனில், உள்ளூர் மொழியில் விக்கிபீடியா கட்டுரையை குறிக்கும்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் பகுதி அருகாமையில் உள்ள சிவப்பு வட்டங்களை கிளிக் செய்து பார்த்து அந்த இடத்திற்கான புகைப்படத்தை எடுத்து சமர்பிப்பது தான். குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு புகைப்படம் இருந்தால் போதும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப்படம் இல்லாத இடங்களுக்கான படத்தை பதிவேற்றுவது எப்படி என்பதற்கான் வழிகாட்டி குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகருக்கான விவரங்களை பார்க்கும் போது, நன்மங்கலம் பாதுகாப்பு காடு, வேங்கைவாசல், கொறுக்குப்பேட்டை, தண்டையார் பேட்டை ரெயில் நிலையங்கள், தீவுத்திடல், எழும்பூர் கலைக்குடம் உள்ளிட்ட பல இடங்கள் புகைப்படம் இல்லாமல் இருப்பது சிவப்பு வட்டங்களால் உணர்த்தப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதே போல், உங்கள் பகுதி அருகாமையில் உள்ள புகைப்படம் இல்லா இடத்தை அறிந்து அந்த இடத்திற்கான புகைப்படத்தை எடுத்து சமர்பிக்கலாம்.
பச்சை வட்ட இடங்களை கிளிக் செய்து பார்த்தால், எந்த இடங்களுக்கு எல்லாம் படங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். இருப்பிடம் சார்ந்த பகுதி தவிர, வேறு எந்த பகுதியை வேண்டுமானாலும் உங்கள் விருப்பம் போல தேர்வு செய்து பார்க்கும் வசதியுள் அளிக்கப்பட்டுள்ளது.
ஆக, நீங்கள் பங்களிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்திற்கான புகைப்படத்தை எடுத்து சமர்பித்து நீங்களும் விக்கி பங்கேற்பாளராக மாறலாம்.
வரைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்ட இடங்கள் தவிர புதிதாக சேர்க்கப்பட வேண்டிய இடங்கள் இருப்பதாக உங்களுக்கு தோன்றினாலும் அதற்கான பரிந்துரையை சமர்பிக்கலாம். இது தொடர்பான விவரங்கள் வழிகாட்டுதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன. : https://meta.wikimedia.org/wiki/WikiShootMe
விக்கிபீடியாவுக்கு இதுவரை பங்களிப்பு செய்திராதவர்கள், அதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கான நல்லதொரு வாய்ப்பாக இது அமைகிறது. இதன் மூலம் விக்கி பங்களிப்பு கலாச்சாரத்தை அறிந்து கொள்ளலாம். தன்னார்வ முயற்சி என்றாலும் இதன் பின்னே இருக்கும் மாபெரும் விக்கியாளர்கள் சமூகத்தை அறிந்து கொள்வதற்கான வழியாகவும் இது அமையும். விக்கிபீடியாவை நீங்கள் நோக்கும் விதத்தை மாற்றி அமைப்பதாகவும் இது அமையலாம்.