இணையத்தின் கதை 1969 ல் துவங்குகிறது என்பதும், அர்பாநெட் எனும் ஆய்வு திட்டமே அதன் துவக்க புள்ளி என்பதும் பரவலாக அறியப்பட்டதே. மேலும் இணையம் ராணுவ ஆய்வு திட்டமாக உருவானதும், அதற்கு அமெரிக்கா, சோவியன் யூனியன் இடையிலான பனிப்போர் முக்கிய காரணம் என பிரபலமாக சொல்லப்படுவதும், பலரும் அறிந்ததே. அணு ஆயுத போர் மூண்டு, எந்த பகுதி தாக்கப்பட்டாலும் மற்ற பகுதி பாதிக்காமல் இயங்க கூடிய ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது இணையத்திற்கான முக்கிய ஊக்கமாக அமைந்தது என்பதும் இணைய வரலாற்றில் அதிகம் குறிப்பிடப்படும் விஷயமாக இருக்கிறது. ( இதில் மாறுபடுபவர்களும் இருக்கின்றனர்).
ஆனால் இணையத்திற்கான கருத்தாக்கம், இவற்றுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அங்கும் இங்கும் கீற்றுகளாக உதயமாக துவங்கிவிட்டது. இணையம் என்பதற்கான தெளிவான ஸ்தூல வடிவம் யார் மனதிலும் இல்லை என்றாலும், அதை நோக்கிய பாதைக்கான வழிகாட்டுதலை கொண்டிருக்கும் முக்கிய சிந்தனைகளை கம்ப்யூட்டர் மேதைகள் பலர் முன் வைத்திருக்கின்றனர்.
இந்த சிந்தனைகள் அவை முன் வைக்கப்பட்ட காலத்தில், இவை எல்லாம் எப்படி சாத்தியம் என வியக்க கூடியதாகவும், அறிவியல் புனைகதை சங்கதிகளோ என மயங்க வைப்பதாகவும் இருந்திருக்கின்றன. மேதைகளின் தீர்கதரிசனமும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் இணையம் படிப்படியாக உருவாக வழி செய்தது.
இணையம் உருவான கதையை சுருக்கமாக பார்ப்பதற்கு முன், இணையத்தின் பூர்வகதையை, அதன் கருத்தாக்க அடித்தளத்தை பார்க்கலாம்.
இணையம் என்பதை அடிப்படையில் கம்ப்யூடர்களின் வலைப்பின்னல் என புரிந்து கொள்ளலாம். ஒரு கம்ப்யூட்டர், வலைப்பின்னலில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டருடன் பேசிக்கொள்வதன் மூலம் தகவல் பரிமாற்றமும், இணையம் சார்ந்த இன்னம் பிற சேவைகளும் சாத்தியமாகின்றன.
ஆனால், இணையத்தை உருவாக்கலாம் என்று எந்த ஒரு தனிநபரும் திட்டமிட்டு இதற்கான பணியில் ஈடுபடவில்லை. வெவ்வேறு காலகட்டத்தில் பலரும் ,தொழில்நுட்ப தொலை நோக்குடன் தங்கள் துறையில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்படி பல்வேறு புள்ளிகளில் ஒன்றிணைந்த கருத்தாங்களும், சிந்தனை வடிவங்களுமே இணையம் எனும் வலைப்பின்னலாக பரினமித்தது.
சொல்லப்போனால், இணையத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்கள் உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, பல விஞ்ஞானிகள் உலகலாவிய வலைப்பின்னலை எதிர்பார்த்தனர். மின்சார கண்டுபிடிப்பில் எடிசனின் போட்டியாளராக திகழ்ந்த நிக்கோலோ டெஸ்லா, உலகலாவிய வயர்லெஸ் அமைப்பை கற்பனை செய்தார். அறிவியல் புனைகதை எழுத்தாளரான எச்.ஜி.வெல்ஸ், ’உலக மூளை’ என்பதை கற்பனை செய்து எழுதினார். ’ மொத்த மனித நினைவுத்திறனும், ஒவ்வொரு மனிதரும் அணுகும் வகையில் உருவாக்கப்படலாம், குறுகிய காலத்தில் இது உருவாக்கப்படவும் செய்யும்…” என 1936 ல் அவர் எழுதினார்.
அதற்கு முன்னர், 1910 ம் ஆண்டில் பெல்ஜியத்தை சேர்ந்த பால் ஆட்லெட் (Paul Otlet) என்பவர், ஹென்ரி லா பவுண்டென் (Henri La Fontaine) என்பவருடன் இணைந்து உலக அறிவுக்கான மைய களஞ்சியம் போன்ற ஒரு கருத்தாக்கததை முன்வைத்தார். இதற்காக இவர்கள் முண்டேனியம் (Mundaneum ) எனும் கருத்தாக்கத்தை உருவாக்கினர். தகவல்களை வகைப்படுத்துவதற்கான உலகலாவிய முறையாக இது அமைந்தது. 15 மில்லியன் இண்டெக்ஸ் கார்டுகள், ஒரு லட்சம் கோப்புகள் மற்றும் லட்சக்கணக்கான புகைப்படங்களை இது கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டது. 1934 ல் ஆட்லெட், இந்த கருத்தாக்கத்தை மேலும் மேம்படுத்தி, கதிராக்க நூலகம் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தார். உலகம் முழுவதும் உள்ள மக்கள், மைய இயந்திர கூட்டு மூளையிடம் தொலைபேசி மூலம் தகவல் கேட்டு, அதை தொலைக்காட்சி சிக்னல் வடிவில் பெறும் வகையில் இது அமைந்திருந்தது.
இதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே, 1728 ல் எப்ரியம் சேம்பர்ஸ் (Ephraim Chambers,)எனும் லண்டன் வரைபட வல்லுனர், சைக்லோபீடியா எனும் யோசனையை குறிப்பிடிருந்தார். கலைக்களஞ்சியத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது இதன் அடிப்படையாக இருந்தது.
இணைய வடிவம் அல்லது செயல்பாட்டின் அடிப்படை கீற்றுகளை இந்த எண்ணங்களில் பார்க்கலாம். எனினும் இவற்றில் இருந்து தான் இணையம் உருவானது என கூற முடியாது. அந்த பெருமை அமெரிக்கரான வானெவர் புஷ் (Vannevar Bush) உருவாக்க விரும்பிய மெமிக்ஸ் எனும் இயந்திரத்திற்கே உரியதாகிறது. 1945 ல் தி அட்லாண்டிக் இதழில், இப்படி நாம் யோசிக்ககூடிய வகையில் எனும் பொருள்படும் வகையில் வானெவர் புஷ் எழுதிய ’ஆஸ் வி மே திங்க்’ எனும் நீளமான கட்டுரையில் தான் இந்த இயந்திரம் பற்றி குறிப்பிட்டிருந்தார். இணையத்திற்கான முன் சிந்தனைகள் பலவும் இந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.
இந்த கட்டுரை வெளியான 24 ஆண்டுகளுக்குப்பிறகு தான், இணையம் உருவாக்கப்பட்டது என்றாலும், இணையத்திற்கான கருத்தாக்க துவக்கப்புள்ளியாக இந்த கட்டுரையே பெரும்பாலும் கருதப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இணைய முன்னோடிகள் பலருக்கும் ஊக்கம் அளித்த வழிகாட்டி ஆவணமாகவும் இது போற்றப்படுகிறது. அது மட்டும் அல்ல, இணையத்தின் ஆரம்ப விதையான அர்பாநெட் எனும் வலைப்பின்னல் உருவாக காரணமாக இருந்த அமெரிக்க ராணுவம்- பல்கலைக்கழகங்களிடையேயான கூட்டு ஏற்பட காரணமாக இருந்தவரும் இவர் தான்.
மெமிக்ஸை அவர், ஒரு நினைவு நீட்டிப்பு சாதனமாக கற்பனை செய்திருந்தார். தொடர்புடைய இணைப்புகள் மூலம் மைய தகவல் சேமிப்பில் இருந்து உடனடியாக தகவல்களை பெறக்கூடியதாக இதை அவர் உருவகப்படுத்தியிருந்தார். ’ மனித மூளை தொடர்புபடுத்திக்கொள்வதன் மூலம் இயங்குகிறது. தன் வசம் ஒன்று இருக்கும் போது, எண்ணங்கள் வாயிலாக பரிந்துரைக்கப்படும் அடுத்த ஒன்றை அது உடனடியாக பற்றிக்கொள்கிறது’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மெமிக்ஸ் என்பது ஒரு சாதனம். அதில் அனைத்து தனிநபர்களும் தங்கள் புத்தகங்கள், ஆவணங்கள், தகவல் தொடர்புகளை சேமித்து வைத்துக்கொள்ளலாம். தேவையான போது அணுக கூடிய வகையில் அசாதாரண வேகமும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்டிருக்கும் வகையில் இது இயந்திரமயமாக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் மெமிக்ஸ் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
அது ஒரு மேஜை, தொலைவில் இருந்து இயக்கலாம், அதில் தகவல்கள் தோன்றும் திரைகள் இருக்கும், கீபோர்டு, பட்டன்கள் மற்றும் விசைகளும் இருக்கும் என்று அவர் மெமிக்சை வர்ணிக்கிறார்.
புஷ் உருவகம் செய்த வகையிலான விஷயங்கள், இணையம் உருவான பின், வலை அறிமுகமான பிறகே சாத்தியமானது.
—
https://tamil.thehindu.com/society/lifestyle/article26641176.ece