பிளாரன்ஸ் நைட்டிங்கேலை தெரியுமா? என்று கேட்பது பொருத்தமாக இருக்காது. ஆனால், நைட்டிங்கேல் யார்? என கேட்பது ’பிக்டேட்டா’ யுகத்தில் சரியாகவே இருக்கும். ஏன்? என பார்க்கலாம்…
நைட்டிங்கேல் நர்சிங் துறையின் முன்னோடி என்பதும், நோயாளிகள் மீது அவர் காட்டிய பரிவு, மனிதநேயத்திற்காக அவர் இன்றளவும் கொண்டாடப்படுவதும் பொதுவாக பலரும் அறிந்ததே. மருத்துவமனையில் அவர் பணியாற்றிய காலங்களில் இரவில் கையில் விளக்குடன் சுற்றி வந்து நோயாளிகள் நலனில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். இதற்காகவே அவர் கையில் விளக்கு ஏத்திய பெண்மணி ( லேடி வித் தி லாம்ப் ) என போற்றப்படுகிறார்.
நைட்டிங்கேல் பற்றி இன்னும் விரிவாக அறிய வேண்டும் எனில், அவரது பெயரை கூகுளில் தேடினால் போதுமானது தான். ஆனால், நைட்டிங்கேல் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததும், 16 வயதில் அவர் தனது குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி நர்சாக சேவை ஆற்றத்துவங்கியதும், பின்னர் கிரைமியா போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்றதும், அங்கு இரவு பகலாக சேவையாற்றி எண்ணற்ற ராணுவ வீரர்கள் உயிரை காப்பாற்றியதும் பற்றி நைட்டிங்கேல் தொடர்பான கட்டுரைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவல்கள் எல்லாம், நைட்டிங்கேல் மீது வியப்பையும் மதிப்பையும் ஏற்படுத்துபவை என்றாலும் கூட, இப்போது திரும்பி பார்க்கும் போது அவர் மீது இன்னும் கூடுதலாக வியப்பை ஏற்படுத்தும் தகவல் எது தெரியுமா? இப்போது பெரிதாக பேசப்படும் பிக்டேட்டாவை அவர் அந்த காலத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார் என்பது தான். உண்மையில் தரவுகளை ( டேட்டா) அவர் ஆயுதமாக கையில் எடுத்து அதிகாரத்தில் உள்ளவர்களுடம் மல்லு கட்டி எண்ணற்ற மனித உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்.
பலரும் அறியாத, நைட்டிங்கேலின் இந்த முகம் பற்றி பிபிசியில் ஓரு வீடியோவை பார்க்க நேர்ந்தது. நைட்டிங்கேல்- நர்ஸ் மற்றும் தரவுகளின் முன்னோடி எனும் அந்த வீடியோவின் தலைப்பே வியக்க வைத்தது. கொஞ்சம் பொறுமையாக அந்த வீடியோவை பார்த்த போது, அந்த மனித நேய நாயகி எப்படி, புள்ளிவிவரங்களிலும் சூரப்புலியாக இருந்திருக்கிறார் என்பதும், அந்த விவரங்களை எப்படி சிறப்பான பயன்படுத்தியிருக்கிறார் என்பதும், தெரிந்து கொள்ள முடிந்தது.
தொடர்ந்து நைட்டிங்கேல் பற்றி பிக்டேட்டாவுடன் தேடு என கூகுளுக்கு கட்டளையிட்ட போது, அவர டேட்டா முன்னோடியாக கொண்டாடும் பல கட்டுரைகள் இன்னும் வியப்பை அளித்தன.
அந்த கட்டுரைகளின் சாரம்சம் இது தான்: கிரைமியா போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, 1856 ல் அவர் பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உதவி செய்யும் நர்ஸ்கள் குழுவுக்கு தலைமை தாங்கி துருக்கி சென்றார். துருக்கி மருத்துவனையில் நிலைமை மிக மோசமாக இருந்தது. போரில் காயமடைந்த ராணுவ வீரர்கள் பெரும்பாலானோர் பலியாகி கொண்டிருந்தனர். ஆனால், போரில் ஏற்பட்ட காயத்தால் பலியானவர்களை விட மருத்துவமனையில் இருந்த மோசமான நிலையால் பலியானவர்களே அதிகமாக இருந்தனர். இதைப்பார்த்து நைட்டிங்கேல் கலங்கினார். உயிர் பிழைத்திருக்க கூடிய பலரும் மருத்துமனவை சூழல் மோசமாக இருந்ததால் பலியாகி கொண்டிருப்பது அவரது உள்ளத்தை உருக்கியது. நிலைமையை மாற்றினால் பலரது உரியை காப்பாற்றலாம் என அவர் அறிந்திருந்தார். உதாரணமாக, மருத்துவமனையில் தகவல்கள் பற்றி யாருமே கவலைப்படவில்லை. அவற்றை பதிவு செய்யவும் இல்லை. இறந்து போனவர்கள் எண்ணிக்கையை கூட சரியாக குறித்து வைக்காமல் இருந்தனர். நைட்டிங்கேல் இந்த குறைகளை முதலில் சீராக்கினார். அதோடு மேலும் பல தகவல்களை சேகரித்தார். புதிய தகவல்கள், மருத்துவமனையின் சுகாதாரமற்ற நிலையை உணர்த்தியது. அதை சீராக்கினார். மோசமான சுகாதார சூழலுக்கு காரணமான அம்சங்களை புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கண்டறிந்தவர் அவற்றை சரி செய்தார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு என சமைக்கப்பட்ட உணவும், ஆரோக்கியமான சூழலும் ஏற்பட வழி செய்தார். இந்த நடவடிக்கைகள் உயிர்பலியை தடுக்க உதவியது.
நைட்டிங்கேல் இத்துடன் நின்றுவிடவில்லை. மருத்துவமனை சூழலை முழுவதுமாக ஆய்வு செய்து தேவையான மாற்றங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யும் விரிவான அறிக்கையை அனுப்பி வைத்தார். 800 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் எல்லா தகவல்கள் இருந்தாலும், அதிகாரிகளும், அமைச்சர்களும் அதை பொறுமையாக படித்தால் தானே பலன் இருக்கும். ஆகவே, நைட்டிங்கேல் அறிக்கையில் சொல்லியிருக்கும் விஷயத்தை எளிதாக உணர்த்தும் வகையில் அவற்றை வரைபடமாக உருவாக்கி காட்டினார். அவர் உருவாக்கிய வரைபடம், போர்க்காயங்களை விட வீரர்கள், சுகாதார சீர்கேட்டால் அதிகம் பலியானதை பளிச்சென உணர்த்தியது. இந்த வரைபடம் ஏற்படுத்திய விளைவு காரணமாக, மருத்துவனமை சூழல் மேம்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆக, இன்று மருத்துவமனைகளில் பின்பற்றப்படும் பழக்கங்களுக்கும், சுத்தமும், சுகாதாரமும் பேனப்படுவதற்கும் முக்கிய காரணம் நைட்டிங்கேல் தான். இதை அவர் தரவுகளை கொண்டு சாதித்தார். மருத்துவமனை சூழல் தொடர்பாக, தகவல்களையும் எண்ணிக்கைகளையும் கொண்டு புரிந்து கொண்டவர், அதை அதிகாரிகளுக்கும் புரிய வைத்தார். அந்த வகையில் அவர் இன்று பெரிதாக பேசப்படும் பிக்டேட்டாவை அன்றே பயன்படுத்தியிருக்கிறார். அதைவிட முக்கியமாக இன்று தகவல்களை காட்சிபடுத்தும் உத்தியான இன்போகிராபிக்சையும் அவர் திறம்பட பயன்படுத்தியிருக்கிறார்.
நைட்டிங்கேல் வாழ்க்கை பொதுவாகவே வியக்க வைக்க கூடியது. இப்படி பிக்டேட்டா பின்னணியில் பார்த்தால் அவர் மீதான மதிப்பு இன்னும் அதிகமாகிறது.
நைட்டிங்கேல் பற்றி மற்றொரு சுவாரஸ்யமான தகவல் அவர் கணிதத்திலும், புள்ளியியலிமும் வல்லமை மிக்கவர் என்பதாகும். புள்ளியியலை அவர் கடவுளின் மொழியாக பார்த்ததாக பிபிசி வீடியோ குறிப்பிடுகிறது.
பிக்டேட்டாவின் முக்கியத்துவத்தை மட்டும் அல்ல, அது மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நைட்டிங்கேல் வாழ்க்கை உணர்த்துகிறது. பிக்டேட்டா என்பது பர்ந்த அளவில் திரட்டப்படும் தகவல்களில் இருந்து புதிய போக்குகள் மற்றும் தகவல்களை பெறுவதாக கருதப்படுகிறது. இன்று, வர்த்தக நிறுவனங்கள் பயனாளிகளின் தகவல்களை அறுவடை செய்வதில் காட்டும் ஆர்வமும்,.அதை பிரதானமாக விளம்பர வலை விரிக்க பயன்படுத்தும் நிலையில், பிக்டேடாவை சமூக நலனுக்காக பயன்படுத்துவது எப்படி என்பதற்கான உதாரணமாக நைட்டிங்கேல் திகழ்கிறார்.
நைட்டிங்கேல் பற்றிய பிபிசி வீடியோ:
நைட்டிங்கேல் பிக்டேட்டா கட்டுரைகள்; https://www.bbc.com/…/florence-nightingale-healthcare-anal…/
http://bigbangdata.somersethouse.org.uk/florence-nightinga…/
https://thisisstatistics.org/florence-nightingale-the-lady…/
தமிழில் நைட்டிங்கேல் பற்றி அந்த காலத்திலேயே புத்தகம் வந்துள்ளது: http://www.noolaham.org/…/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE…