டிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா ? !

indexமூர்ஸ் விதியை தெரியுமா? என கேட்டு இந்த பதிவை துவங்க முடியாது. ஏனெனில் தமிழ் சூழலில் மூர்ஸ் விதியை அத்தனை பிரபலம் இல்லை. எனவே, மூர்ஸ் விதி தெரியும்! ஆனால் மூயர்ஸ் விதி தெரியுமா? என பதிவை துவக்குவது எதிர்பார்த்த பலனை அளிக்காது. எனவே இந்த பதிவை கூகுளின் தாத்தாவை உங்களுக்குத்தெரியுமா? என கேட்டு துவங்குவது பொருத்தமாக இருக்கும்.
இப்படியும் உங்களுக்கு ஆர்வம் இல்லை எனில், மூயர்ஸ் விதி பற்றியும், அதை முன் வைத்த கெல்வின் மூயர்ஸ் பற்றியும் உங்களுக்கு தெரியாமலே போகட்டும். ஆனால் அது கொஞ்சம் ஆபத்தானது. ஏனெனில் மூர்ஸ் விதியை விட, மூயர்ஸ் விதி நாம் அறிந்து கொள்ள வேண்டிய நம் காலத்து விதியாக இருக்கிறது.
மூயர்ஸ் விதி அப்படி என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்கு முன், அதை முன்வைத்த கெல்வின் மூயர்சை அறிமுகம் செய்து கொள்ளலாம். கெல்வி மூயர்ஸ் அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானி. கம்ப்யூட்டர் துறையின் வளர்ச்சியில் பலவிதமான பங்களிப்பு செலுத்தியவர். மூயரின் பங்களிப்பில் மிகவும் முக்கியமானது, தகவல் மீட்பு தொடர்பானது. இதன் காரணமாகவே தகவல் மீட்பின் தந்தை என அவர் பாராட்டப்படுகிறார்.
தகவல் மீட்பு என்பது அத்தனை சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். ஆங்கிலத்தில் இதை இன்பர்மேஷன் ரெட்ரிவல் என்கின்றனர். அதாவது தகவல்களை தேடி எடுப்பது. ஆம், இணையத்தில் நன்கறியப்பட்ட தேடல் சேவையின் மூலம் இந்த தகவல் மீட்பு தான். கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு வரத்துவங்கிய காலத்தில் அவற்றை கொண்டு தகவல்களை தேடி எடுக்க பயன்படுத்தப்பட்ட முறைகளும், உத்திகளுமே இன்றைய இணைய தேடலின் முன்னோடியாக அமைகிறது. ஒரு விதத்தில் பார்த்தால், தகவல் தேடல் என்பது இணையத்திற்கும் முந்தியது. இதை இன்னும் கூட பின்னுக்கு கொண்டு செல்லலாம் என்றாலும் கம்ப்யூட்டரின் வருகையினால், தகவல் மீட்பில் ஏற்பட்ட புதுமைகளை நம் துவக்கப்புள்ளியாக கொள்வது பொருத்தமாக இருக்கும்.
இந்த துறையில் சிறந்து விளங்கியவர் என்பதாலும் , தகவல் மீட்பு என்ற வார்த்தையை உருவாக்கியவர் என்பதாலும், கூகுளின் தாத்தா என கெல்வின் மூயர்சை கருதலாம். அந்த காலத்தில் அதாவது 1950 களில் கம்ப்யூட்டர்களை கொண்டு, அறிவியல் மற்றும் மருத்துவ தகவல்களை வகைப்படுத்தவும், வெவ்வேறு இடங்களில் உள்ள தகவல்களை தேவையான போது தேடி எடுக்கவும் தகவல் மீட்பு முறை பயன்பட்டது. இதற்கு தேவையான அடிப்படை உத்திகளை மூயர் வகுத்துக்கொடுத்தார்.
மூயர் முன் வைத்த உத்திகளில் மிகவும் முக்கியமானது ஜேட்டாகோடிங் எனப்படுகிறது. பல ஆவணங்கள் தொடர்பான விளக்க குறிப்புகளை ஒரே இடத்தில் ஒன்றன் மேல் ஒன்று இடம்பெற வைப்பதற்கான வழியாக இது அமைகிறது. தகவல்களை எளிதாக தேட இந்த உத்தியே கைகொடுத்தது. இதுவே பின்னாளில் ஹேஷ்கோடிங் என்ற உத்தியாக மாறியது.
தகவல் மீட்பு தொடர்பான உத்திகள் மிகவும் தொழில்நுட்ப நோக்கிலானது என்பதால், இந்த துறையின் மன்னாதி மன்னனாக மூயர் விளங்கினார் என்பதை மட்டும் உள்வாங்கி கொண்டு, மூயர்ஸ் விதிக்கு செல்லலாம்.
1959 ல் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கெல்வின் மூயர் இந்த விதிக்கான மூல கோட்பாட்டை சமர்பித்தார். “தகவல்களை பெறாமல் இருப்பதற்கான விலை, தகவல்களை பெறுவதற்கான விலையை விட அதிகமாக இல்லாத வரை மக்கள் தகவல்களை பெற முன்வரமாட்டார்கள்” என அவர் குறிப்பிட்டார். இந்த உரையே தகவகல்களை தேடுவது தொடர்பான பழக்கம் சார்ந்த அம்சங்களை விளக்கியது.
மூயர் தகவல் மீட்பு தொடர்பாக முன்வைத்த கோட்பாடே மூயரின் விதியாக கொள்ளப்படுகிறது. “வாடிக்கையாளர்களுக்கு தகவலை பெறுவது, தகவலை பெறாமல் இருப்பதைவிட வலி மிக்க அனுபவத்தை அளிக்குமானால, ஒரு தகவல் மீட்பு அமைப்பு பயன்படுத்தப்படாமலே இருக்கும்’ என்பதாக இந்த விதி அமைகிறது.
“மக்களில் பலரும் தகவல்களை பெறுவதை விரும்பாமல் இருக்கலாம் என நான் கருதுகிறேன். தகவல் அளிக்கிறது என்பதாலேயே அவர்கள் ஒரு தகவல் அமைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம் என்றும் அவர் இந்த மாநாட்டு உரையில் குறிப்பிட்டார். தகவல்கள் இருந்தால், அதை முதலில் படிக்க வேண்டும், இது கடினமானது.. என்று அவர் குறிப்பிடுகிறார். அதன் பின் தகவல்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், தகவல்களை புரிந்து கொள்வது உங்கள் செயல்பாடு தவறானது அல்லது தேவையற்றது என உணர்த்தலாம். தகவல்களை பெறாமல் இருப்பது அல்லது பயன்படுத்தாமல் இருப்பது பல நேரங்களில் தகவல்களை பெறாமல் இருப்பதை விட பிரச்சனை மற்றும் வலு குறைந்தது’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கொஞ்சம் சிக்கலாக தோன்றினாலும், இந்த கருத்துகளை ஊன்றி படித்தால் நம் காலத்திற்கான செய்தியை அவை கொண்டிருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆம், பொய்ச்செய்திகள் பிரச்சனையில் மூயரின் விதி கச்சிதமாக பொருந்து வருவதை நீங்கள் உணரலாம்.
இப்போது இணையத்தை பொய்ச்செய்திகள் ஆட்டிப்படைத்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். எங்கு பார்த்தாலும் பொய்ச்செய்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பொய்ச்செய்திகளை ஆய்வு செய்யும் அறி\ஞர்கள், பொய்யானது என தெரிந்தும் மக்கள் ஏன் அவற்றை பயன்படுத்துகின்றனர் என கேள்வி எழுப்புகின்றனர். பொய்யான தகவல்கள் ஏன் வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும் தொடர்ந்து ஏன் பகிரப்படுகின்றன? தகவல்களை சரி பார்ப்பது எளிது என தெரிந்தும் பலரும் ஏன் அவ்வாறு செய்வதில்லை?
இந்த கேள்விகளுக்கான பதில் தான் மூயர் விதியில் இருக்கிறது. தகவல்களை தேடுவது எளிதாக இருக்கலாம். ஆனால் அவற்றை பெறுவது உங்களுக்கு வேதனை அளிக்கும் எனில் தகவல்களை தேடாமல் இருப்பதே நல்லது என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதனால் தான் தங்கள் நம்பிக்கையையும், நிலைப்பாட்டையும் உறுதி செய்யும் தகவல்களை நாடுகின்றனர். அது பொய் செய்தியாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.
இந்த தீர்கதரிசனம் காரணமாகவே கெல்வின் மூயர் இப்போது மிகவும் கவனிக்கப்படுகிறார். அவரது மூயர் விதியை கொண்டு பொய்ச்செய்தி நிகழ்வுகள் மற்றும் அவை பரவும் விதத்தை புரிந்து கொள்ள வல்லுனர்கள் முயன்று வருகின்றனர்.
நீங்களும் கூட மூயரையும், மூயர் விதியையும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
கெல்வின் மூயர் குறித்து அறிய: https://eandt.theiet.org/content/articles/2017/04/fake-news-the-appeal-of-a-good-story-true-or-false/
http://www.garfield.library.upenn.edu/commentaries/tsv11(06)p09y19970317.pdf

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *