பிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது?

blகருந்துளைகள் விஞ்ஞானிகளையே வியக்க வைக்ககூடியவை. புரியாத புதிரானவை. ஒளியை கூட விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் தன் ஈர்ப்பு விசையால் விழுங்கிவிடும் அவற்றின் ஆற்றல் பற்றி அறிந்தால் சாமானியர்களுக்கும் வியப்பாக இருக்கும். எல்லாம் சரி, கருந்துளைகள் எப்படி உருவாகின்றன? கருந்துளைகள் எங்கிருந்து தோன்றுகின்றன? ஏன் அவை உருவாகின்றன. இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அறியும் முன், முதலில் கருந்துளைகளின் வகைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
கருந்துளைகளில் மூன்று வகைகள் இருக்கின்றன. நட்சத்திர வகை 9 ஸ்டெல்லார்), பிரம்மாண்ட வகை ( சூப்பர் மேசிவ்) மற்றும் குட்டி கருந்துளைகள் ( மினியேச்சர்) ஆகிய கருந்துளைகள் உள்ளன. இவற்றின் நிறை கொண்டு இவ்வாறு பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கருந்துளையும் ஒவ்வொரு விதமாக உருவாகின்றன.
வழக்கமான கருந்துளைகள், இறக்கும் நட்சத்திரங்களில் இருந்து பிறக்கின்றன. சூரியனை விட 20 மடங்கு நிறை கொண்ட நட்சத்திரம் அதன் அந்திம காலத்தில் கருந்துளையை உருவாக்குகிறது.
நட்சத்திரம் ஒளி வீசுகிறது என்பது நமக்குத்தெரியும். ஆனால் நட்சத்திரத்தில் என்ன நிகழ்கிறது என்பது தெரியுமா? நட்சத்திரத்தில் ஓயாமல் ஒரு இழுபறி நடந்து கொண்டே இருக்கிறது என்கின்றனர். ஒரு பக்கம் ஈர்ப்பு விசை உள்ளுக்குள் இருந்து இழுக்க, அதற்கு எதிரான அழுத்தம் வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது. மையத்தில் நிகழும் அணு விளைவு வெளிப்புறம் தள்ளுவதற்கான ஆற்றல் மற்றும் அழுத்தத்தை அளிக்கிறது. பெரும்பாலும், ஈர்ப்பு விசை மற்றும் வெளிப்புறமாக தள்ளுவது சமமாக இருப்பதால் நட்சத்திரம் நிலையாக இருக்கிறது.
ஆனால் நட்சத்திரத்திற்கு அணு உலைக்கான சரக்கு தீர்ந்துவிட்டால், ஈர்ப்பு விசையின் கை ஓங்கி விடுகிறது. விளைவு மையத்தில் இருக்கும் பொருட்கள் இன்னும் நெருக்கமாகின்றன. மையத்தில் இப்படி நெருக்கம் அதிகமாகும் போது ஈர்ப்பு விசையும் எக்கச்சக்கமாகிறது. இதன் விளைவாக நட்சத்திரம் தன் எடையே தாங்க முடியாமல் நொறுங்கி விடுகிறது.
கொஞ்சம் சிரிய நட்சத்திரம் என்றால், அணு உலைக்கான எரிபொருள் தீர்ந்து விடும் போது, ஈர்ப்பு விசையை எதிர்க்க முடியாமல் போய்விடுகிறது. நட்சத்திரத்திற்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் எதிர்ப்பு விசை, மேலும் நொறுங்குவதை தவிர்க்கும் அழுத்தத்தை உருவாக்குகிறது. நட்சத்திரம் மெல்ல குளிர்ந்து மரணிக்கிறது. இந்த வகை நட்சத்திரம் ஒயிட் டுவார்ஸ் எனப்படுகிறது.
பெரிய நட்சத்திரம் எனில், அதன் அணு உலை எரிபொருள் தீர்ந்த பின் வெடித்து சூப்பர் நோவாவாகிறது. வெளிப்பகுதி விண்வெளியில் சிதறி உள்பகுதி தனக்குள் காணாமல் போகிறது.
சூப்பர் நோவாவிற்கு பின் மிஞ்சும் மையப்பகுதி, சூரியனை விட 2.5 மடங்கு அளவுக்கு பிரம்மாண்டமாக இருந்தால், கருந்துளை ஆகும் அளவுக்கு அதை நொறுங்க வைக்கும் அளவுக்கு ஈர்ப்பு விசையை எதிர்க்க கூடிய எந்த எதிர்ப்பு ஆற்றலும், நட்சத்திரத்திற்குள் இருக்க வாய்ப்பில்லை.
ஆக பெரிய நட்சத்திரங்கள் இறந்து தனக்குள் நொறுங்கும் போது நட்சத்திர கருந்துளை உண்டாகின்றன.
சூப்பர் மேசிப் பிளாக் ஹோல் எனப்படும் பிரம்மாண்ட கருந்துளைகள் நம்முடைய பால்வீது மண்டலம் உள்ளிட்ட அனைத்து கேலக்சிகளின் மையத்திலும் இருப்பதாக கருதப்படுகின்றன. இவை கோடிக்கணக்கான சூரியன்களின் நிறை கொண்டவை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவை எப்படி உருவாகின்றன என்பது சரியான தெரியவில்லை என்கின்றனர். கேலக்சி உருவான போது இவை பக்கவிளைவாக வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவை கேலக்சியின் நடுவே இருப்பதால், இவற்றுக்கு தீனி கிடைத்துக்கொண்டே இருப்பதால் இவை வளர்ந்து கொண்டே இருப்பதாகவும் கருதப்படுகின்றன.
நம்முடைய சூரியனை விட சிறிய கருந்துளைகள் மினியேச்சர் கருந்துளைகளாக கருதப்படுகின்றன. இவற்றை யாரும் இதுவரை கண்டறிந்ததில்லை. எனினும். 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பு நிகழ்வில் பிரபஞ்சம், உண்டான பிறகு மினியேச்சர் கருந்துளைகள் உண்டாகியிருக்கலாம் என கருதப்படுகின்றன.
கருந்துளையை அவற்றின் சுழற்சி தன்மையை வேறுபடுத்துவதாக கருதப்படுகிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *