அலையும் ஆல்பட்ராஸ் பறவை, கடலோர செம்மரம், பேடோபைரன் தவளை, அமேசான் அல்லி பற்றி எல்லாம் உங்களுக்குத்தெரியுமா? இவை எல்லாம், இன்றைய கூகுள் டுடூலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள்.
உலக பூமி தினத்தை ( ஏப்ரல் 22 ) கொண்டாடும் வகையில் கூகுள் இந்த பிரத்யேக டூடுலை உருவாக்கியுள்ளது. பூமி தினத்தின் மைய செய்தியான உலகின் இயற்கை வளத்தின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், தனிச்சிறப்பு மிக்க உயிரினங்களை தேர்வு செய்து அவற்றை தனது முகப்பு பக்க டுடூல் சித்திரத்தில் இடம்பெற வைத்துள்ளது.
முக்கிய தினங்கள், சாதனையாளர்களை நினைவு கூறும் வகையில் கூகுள், தனது முகப்பு லோகோவை மாற்றி அமைத்து சித்திரமாக வெளியிடும் வழக்கம் கொண்டிருக்கிறது. இவை கூகுள் டுடூல் என பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன.
கூகுள் டுடூள்கள் சுவாரஸ்யமானவை மட்டும் அல்ல, குறிப்பிட்ட தினங்களின் தனித்தன்மையை அழகாக வெளிப்படுத்தும் தன்மையும் கொண்டவை. அண்மையில் கூட, இந்திய மக்களவை தேர்தலை முன்னிட்டு கூகுள் தனது லோகோவை, வாக்களிக்கும் கைவிரலை குறிக்கும் வகையிலான லோகாவாக மாற்றி அமைத்தது.
இந்நிலையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு இன்று பூமியின் இயற்கை வளத்தை கொண்டாடும் டுடூலை வெளியிட்டுள்ளது. இந்த டுடூல் வழக்கமான டுடூல் போல வெறும் சித்திரமாக இல்லாமல், சுவாரஸ்யமான அனிமேஷனாக அமைந்துள்ளது.
எளிமையான அனிமேஷன் விளையாட்டு வடிவில் அமைந்துள்ளது, இந்த லோகோவை கிளிக் செய்ததுமே, அலையும் அல்பட்ராஸ் பறவை தோன்றுகிறது. இந்த பறவை தான் உலகிலேயே அகலமான இறக்கை கொண்ட பறவையாக கருதப்படுகிறது. இறக்கையை அசைக்காமலேயே நீண்ட தொலைவு பறக்கும் திறன் கொண்ட பறவை இது.
வியக்க வைக்கும் இந்த தகவலை தெரிந்து கொண்ட பிறகு, மேலும் கீழே செல்ல கிளிக் செய்தால், கடலோர செம்மரம் தோன்றுகிறது. இதுவும் சாதாரண மரம் அல்ல: 377 அடியில் உலகின் உயரமான மரம் இது. 75 மனிதர்கள் ஏறி நின்றால் தான் இதன் உயரத்தை உணர முடியும். அடுத்ததாக தோன்றுவது, பேடோபைரன் தவளை (Paedophryne Amauensis). நாணயம் அளவே இருக்கும் இந்த தவளை தான் உலகின் மிகச்சிறிய முதுகெலும்பு கொண்ட உயிரினமாகும். அடுத்ததாக தோன்றும் அமேசான் அல்லி மலர், இலை உலகிலேயே மிகெப்பரிய தண்ணீர் தாவர இலையாகும். இதில் ஒரு சிறிய மனிதர் உட்கார்ந்து கொள்ளலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து டைனோசர் காலம் தொட்டு , அதாவது 407 மில்லியன் ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கும் கோய்லேகான்த் எனும் உயிரினம் மற்றும் ஆழ்கடல் இருளில் வசிக்கும் ஸ்பிரிங்டைல் எனும் உயிரினம் தோன்றுகின்றன.
இந்த உயிரனங்கள் எல்லாம் வியக்க வைக்கின்றனவா? பூமியில் காணப்படும் உயிரினங்களின் தனித்தன்மை மற்றும் பரந்து விரிந்த தன்மையின் சிறிய உதாரணம் தான் இவை எனும் குறிப்புடன், உலக பூமி தினத்தை கொண்டாடுவோம் எனும் கோஷத்துடன் இந்த அனிமேஷன் சித்திரம் முடிகிறது.
இந்த டுடூல் அனிமேஷன் அசத்தலாக இருப்பதாக நினைத்தால் இதை நண்பர்களுடன் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொள்ளும் வசதியையும் கூகுள் வழங்கியுள்ளது. இந்த தகவல்களால் வியந்து போய், பூமி தினம் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால், அதற்கான தேடல் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
தேடல் வசதிக்கான ஐகானை கிளிக் செய்தால் உலக பூமி தினம் தொடர்பான தேடல் பக்கம் தோன்றுகிறது. அதன் முதல் முடிவாக பூமி தின இயக்கத்திற்கான இணையதளம் இடம்பெற்றுள்ளது.
உலக பூமி தினம், 1970 ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு, இதன் பொன்விழா ஆண்டாக அமைகிறது. அமெரிக்க எம்பியான கேலார்டு நெல்சன் (Gaylord Nelson) என்பவர் பூமி தினத்தின் நிறுவனராக போற்றப்படுகிறார். அமெரிக்காவில் பெரும் எண்ணெய் கசிவு ஏற்பட்ட போது, அது தொடர்பாக எழுந்த மக்கள் எதிர்வினையை பூமியை காக்கும் விழிப்புணர்வு இயக்கமாக மாற்ற உலக பூமி தினத்தை அவர் உண்டாக்கினார். அவர் எதிர்பார்த்தது போலவே இது ஒரு இயக்கமாக உருவாகி பொன்விழா காண உள்ளது.
உலக பூமி தினம் பற்றி மேலும் அறிய: https://www.earthday.org/about/the-history-of-earth-day/
பூமி தன் டுடூல் பக்கம் : https://www.google.com/doodles/earth-day-2019
—