பாட்ஷாவில் ‘நான் ஆட்டோகாரன்… என ரஜினி பாடும் பாடல் பிரபலமானது. அதே போல இணைய உலகில் ‘ரெட்டிட்காரர்’ என்று சொல்லப்படுவதும் பிரபலமானது. அத்தகைய ரெட்டிட்காரர்கள் ஒருவர் பிரபலமான சுவாரஸ்யமான கதையை பார்க்கலாம்.
இது சுவாரஸ்யமான கதை மட்டும் அல்ல: இணையத்திற்கான பாடமும் கொண்டிருக்கும் கதை!
இணையத்தின் முகப்பு பக்கம் எனும் சுய வர்னணையோடு அறிமுகமான ரெட்டிட், முன்னணி சமூக வலைப்பின்னல் தளங்களில் ஒன்றாக உருவாகி இருக்கிறது. ரெட்டிட்டை ஒரு சமூக வலைப்பின்னல் தளம் என்று சொல்வது பலருக்கு வியப்பாக இருக்கலாம். எனினும், பேஸ்புக் போல நிலைத்தகவல்களுக்கும், லைக்குகளுக்கமான தளம் அல்ல ரெட்டிட். இணையத்தில் கண்டறியும் சுவாரஸ்யமான இணைப்புகளை பகிர்ந்து கொண்டு அதன் மூலம், உரையாடல் நடத்துவதற்கான சேவை இது.
ரெட்டிட் பற்றி அதாவது, ரெட்டிட் புராணம் தனியே எழுதலாம். இப்போதைக்கு ரெட்டிட் தளம் பிரதானமாக ஒரு இணைய சமூகம் என்பதையும், அதன் உறுப்பினர்கள் ரெடிட்ட்காரர் என பிரபலமாக குறிப்பிடப்படுகின்றனர் என்பதை மட்டும் நினைவில் கொள்வோம்.
துவக்கத்தில் சொன்னது போல, இந்த ரெட்டிட்காரர்களில் ஒருவர் பற்றி பார்க்கலாம். அவர் பெயர் ஆண்டி போவன் (Andy Bowen). இவர் தான் இன்று சக உறுப்பினர்கள் கொண்டாடும் ரெட்டிட்காரராகி இருக்கிறார். ரெட்டிட்காரர்கள் அவரை கொண்டாடுவதற்கான காரணத்தை தெரிந்து கொண்டீர்கள் என்றால் நீங்களும் அசந்து போய் விடுவீர்கள்.
கிட்டதட்ட ஒரு வருட காலம் ரெட்டிட்டில் மவுன விரதத்தை எதிர்கொண்டதற்காக அவர் பலராலும் பாராட்டப்படுகிறார். மவுன விரதம் என்றால், நாம் அறிந்தது போல பேசாமல் இருப்பதல்ல, தான் பேசுவதை யாரும் கேட்கவில்லை என தெரிந்தும் கூட, மனம் தளராமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது.
அதெப்படி ஒருவருமே காது கொடுத்து கேட்காத நிலையில் ஒருவரால் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியும் என கேட்கலாம். அப்படி பேசுபவரை உலகம் சந்தேகமாக அல்லவா பார்க்கும் என்றும் நினைக்கலாம். ஆனால், ஆண்டி போவன் எதிர்கொண்ட மவுனம் வேறுவிதமானது.
ரெட்டிட்டின் ஆதார அம்சம் அதன் பின்னே இருக்கும் மாபெரும் இணைய சமூகமம் தான். இந்த சமூகத்தை மையமாக கொண்டு நிகழும் எண்ணற்ற உரையாடல்கள் தான் ரெட்டிட்டின் இன்னொரு முக்கிய பலம். எந்த தலைப்பின் கீழ் வேண்டுனாமாலும் ரெட்டிட்டில் விவாதம் நடத்தலாம். ஒவ்வொரு தலைப்பின் கீழ் பல்வேரு துணை தலைப்புகளிலும் விவாதம் நடக்கும். இவற்றில் கேள்வி கேட்கலாம், பதில் அளிக்கலாம், கருத்து கூறலாம். ஜனநாயக அம்சங்களோடு பெரும்பாலும் ஆரோக்கியமாக இந்த விவாதங்கள் நடைபெறும்.
ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த விவாவதங்கள் தகவல் சுரங்கங்கள். பல நேரங்களில் பயனுள்ள தகவல்களும் கிடைக்கும். அதனால் தான் ரெட்டிட்காரர்கள், இந்த தளமே கதியென கிடக்கின்றனர்.
ஆண்டி போவனும் இத்தகைய ஆர்வம் உள்ள ரெட்டிட்காரராக தான் இருந்திருக்கிறார். அவரும் ஆர்வத்துடன் ரெட்டிட் விவாதங்களில் பங்கேற்று கருத்து கூறி வந்திருக்கிறார். ஆனால் பிரச்சனை என்னவெனில், அவர் கூறிய பதில்களை ஒருவருமே பொருட்படுத்தவில்லை என்பது தான். ஏனெனில், அவர் தெரிவித்த கருத்துக்கள் ஒன்று கூட சக ரெட்டிகாரர்கள் யாருமே பதில் அளித்ததில்லை. அவர் வெளியிட்ட பதிவுகளுக்கும் இதே கதி தான்.
இங்கு தான் இந்த கதை சுவாரஸ்யமாகிறது.
இணைய விவாதம் என்றில்லை, எந்த ஒரு விவாதத்திலும் நாம் சொல்வதை யாருமே கேட்கவில்லை என்றால் என்ன செய்வோம்? கோபம் கொள்வோம் அல்லது வெறுத்துப்போவோம். அதைவிட முக்கியமாக, போதும் உங்கள் உரையாடல் என விலகிச்சென்றுவிடவே வாய்ப்பு அதிகம்.
ஆனால் போவன் இதை எதையுமே செய்யவில்லை. யாருமே தனது கருத்துக்களை படிக்காத நிலையிலும் அவர் ஆர்வத்துடன் பதிவுகளை வெளியிடுவதையும், கருத்து சொல்வதை தொடர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இப்படி அவர் யாருமே இல்லாத கடையில் டீ ஆற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.
இடைப்பட்ட காலத்தில் அவர், தான் மிகவும் அலுப்பூட்டுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாகவே தான் சொல்வதை யாரும் படித்து பதில் அளிக்கவில்லை என அவர் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே தற்செயலாக ரெட்டிட் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது தான், அவரது கருத்துகளில் எந்த பிரச்சையும் இல்லை, தவறுதலாக அவரது கணக்கு ஷேடோ புரபைலிங் எனும் நடவடிக்கைக்கு உள்ளானதால், மற்றவர்கள் அவரது கருத்துக்களை பார்க்க முடியாமல் போனது எனும் விஷயம் தெரிய வந்தது.
ஆக, ஓராண்டு காலமும் அவர் தெரிவித்த, கருத்துக்களை மற்றவர்கள் பார்க்க முடியாமல் இருந்திருக்கிறது. அதனால் தான் அவரது கருத்துக்களுக்கு பதில் கருத்து வந்திருக்கவில்லை. நல்ல வேளையாக ரெட்டிட் நிர்வாகம் இந்த பிரச்சனையை சரி செய்து விட்டது.
இதன் பிறகு தான் சின்னதாக இணைய அற்புதம் நடந்தது.
தனது கணக்கு சரி செய்யப்பட்டதும் போவன், தனது அனுபவத்தை ரெட்டிட்டில் பகிர்ந்து கொண்டார். அதைப்படித்துப்பார்த்த சக ரெட்டிட்காரர்கள் வியந்து போயினர். பலரும் அவரது பொறுமையை பாராட்டி கருத்து தெரிவித்தனர். ஒரு சிலர், உங்களுக்கு கோபமே வரவில்லையா? என வியப்புடன் கேட்டனர்.
அது மட்டும் அல்ல, எண்ணற்ற உறுப்பினர்கள் அவரது செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது பதிவுக்கு வாக்களித்தனர். ரெட்டிட்டில் இப்படி வாக்களிப்பதே ஒரு பதிவுக்கான ஆதரவு அல்லது எதிர்பாக அமைகிறது. ஆதரவு வாக்குகள் ’அப்வோட்’ என குறிப்பிடப்படுகின்றன.
அடுத்த 24 மணி நேரத்தில் அவரது பதிவுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் ஆதரவு வாக்குகள் குவிந்தன. பலரும் அவருக்கு ரெட்டிட்டின் விஷேச சலுகைகளையும் பரிசளித்தனர்.
இந்த எதிர்பாராத ஆதரவு போவனை திக்குமுக்காட வைத்துள்ளது. ஒரு வருட காலம் மவுன அறையில் பேசிக்கொண்டிருந்தவருக்கு, திடிரென பார்த்தால் லட்சக்கணக்கானவர்களின் கைத்தட்டல்களும், சபாஷ்களும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என போவன் அசந்து போயிருக்கிறார். எனக்கு கருத்து சொல்வது பிடிக்கும் தொடர்ந்து என் கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருந்தேன் என்று அவர் கூறியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் தான் வெளியிட்ட பயனுள்ள பதில்களை யாரும் பார்க்கவில்லை என்பது ஏமாற்றம் அளித்தாலும், பகிரும் ஆர்வத்தால் தொடர்ந்தேன் என அவர் கூறியிருக்கிறார்.
ஆக, இணையத்தில் இது நமக்கான முதல் பாடம். யோசித்துப்பாருங்கள், நம்மில் எத்தனை பேர், இணைய மவுனத்தை மீறி தொடர்ந்திருப்போம். இணைய நட்புகளையும், உரையாடல்களையும், லைக்குகளாலும், பகிர்வுகளாலும் அளவிட்டுக்கொண்டிருக்கும் காலத்தில், கருமமே கண்ணாயினார் என்பது போல, ஆர்வத்துடன் கருத்து சொல்வதில் ஈடுபட்ட போவன நமக்கெல்லாம் முன்னுதாரணம் தானே.
இணையத்தில் சொல்லடிகளிலும், தவிர்க்க கூடிய பதிலடி விளையாட்டுகளிலும் ஈடுபடுவதற்கு முன் போனன் போன்றவர்களை நினைத்துப்பார்த்து நம் இணைய உரையாடல்களை இன்னும் பயனுள்ளதாக ஆக்குவோம்.
இரண்டாவது பாடம், இணையம் ஒரு சமூகமாக மகத்தானதாக இருக்கிறது என்பது. ரெட்டிட் சமூகத்தின் செயல் இதற்கு உதாரணம். ஓராண்டு காலம் போவன், அலட்சியத்தை பொருட்படுத்தாமல் வெளிப்படுத்திய ஆர்வத்தை உற்சாகத்தோடு அங்கீகரித்து அவரை பாராட்டி பெருமைப்படுத்திய விதமும் போற்றத்தக்கது.
இணையத்தை இன்னும் சிறப்பான இடமாக்குவது நம் கைகளில் தான் இருக்கிறது!
ரெட்டிட்காரரை அடையாளம் காட்டிய பிபிசி செய்தி: https://www.bbc.com/news/blogs-trending-47888242