ஐரோப்பிய நாடான எஸ்டோனியா சின்னஞ்சிறிய தேசம் என்றாலும், தொழில்நுட்ப பயன்பாடு என்று வரும்போது உலகிற்கே வழிகாட்டும் டிஜிட்டல் தேசமாகும். ஏற்கனவே எஸ்டோனியா, பெரும்பாலான அரசு சேவைகளை ஆன்லைனில் கொண்டு வந்திருக்கிறது. அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கியிருக்கிறது. அன்லைன் வாக்களிப்பு, ஆன்லைனி வரித்தாக்கல் என பலவற்றை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. இந்த வரிசையில் தற்போது, நீதிமன்றங்களில் தேங்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து பைசல் செய்யவும் தொழில்நுட்பத்தை நாட தீர்மானித்துள்ளது. அந்த தீர்வு என்ன தெரியுமா? ரோபோ நீதிபதியை உருவாக்குவது தான்.
ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க கூடிய வகையில் இந்த ரோபோ நீதிபதி சேவை அமைந்திருக்கும். அளவில் சிறிய வழக்குகள் கணம் பொருந்திய ரோபோ நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்கின்றனர். இதற்காக செயற்கை நுண்ணறிவி மற்றும் ரோபோவியலுக்கு சட்ட அந்தஸ்து வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் வழக்கறிஞர்களுக்கு உதவுவதற்காக சட்ட ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் எஸ்டோனியா ஒரு படி முன்னே நின்று, நீதி வழங்கும் பொறுப்பையே ரோபோவிடம் ஒப்படைத்திருக்கிறது.
எஸ்டோனியா இப்படி வியக்க வைக்கிறது என்றால், ஆப்பிரிக்க நாடான சாட்,அதை நினைத்து பரிதாபபட வைக்கிறது. ஏனெனில் அந்நாட்டில் கடந்த ஒராண்டு காலமாக பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக உடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம். அந்நாட்டு அதிபர் இட்ரிஸ் டெபே (Idriss Deby) 2033 வரை தன்னைத்தானே அதிபராக அறிவித்துக்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்துவதில் சமூக ஊடகங்கள் முக்கிய அங்கம் வகித்ததால், அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.
—
செவ்வாய்க்கு போவோமா!
கூகுள் ஸ்டிரீட் வியூ சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகுள் வரைபடத்தின் மீது, குறிப்பிட்ட இடங்களின் சுற்றுச்சூழலும் வகையிலான காட்சிகளை பார்க்க வழி செய்வது தான் இந்த சேவையின் சிறப்பு. அதாவது, ஸ்டிரீட்வியூ காமிராவில் எடுக்கப்பட்ட காட்சிகளை 360 கோணத்திலும் பார்க்கலாம். திரையில் தோன்று காட்சியை மவுஸ் கொண்டு மேலும் கீழும் பக்கவாட்டிலும் என எப்படி நகர்த்தினாலும் அந்த திசையில் விரியும் காட்சியை பார்க்கலாம். பார்க்கும் இடத்திலேயே உலாவுவது போன்ற உணர்வை இது அளிக்கும்.
இந்த வகையில் இப்போது ஸ்டிரீட்வியூ மூலமே செவ்வாய் கிரக அனுபவத்தை பெற கூகுள் வழி செய்திருக்கிறது. செக்கச்செவேலான தோன்றும் செவ்வாய் கொஞ்சம் கரடுமுரடான பிரதேசமாக அறியப்படுகிறது. செவ்வாய்க்கு நிகரான ஒரு பகுதி பூமியிலும் இருக்கிறது. கனடா அருகே ஆர்டிக் கடல் பகுதியில் உள்ள டேவன் தீவுகள் தான் அந்த பகுதி. உலகில் மனித நடமாட்டமே இல்லாத பகுதி இது. இதன் வறண்ட பாறைப்பகுதி பெரும் சலானாது.
செவ்வாய் கிரகத்தின் தன்மையை பெற்றிருப்பதால், மார்ஸ் கழகத்தின் தலைவர் பாஸ்கல் லீ தலைமையிலான ஆய்வுக்குழு இந்த தீவில் ஆய்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவாலான சூழலை சமாளிக்க தேவைப்படும் முன்னேற்பாடுகளை அறிவதற்காக இக்குழு இங்கு ஆய்வு செய்கிறது. அண்மையில், கூகுளின் ஸ்டிரீட்வியூ குழு, இந்த தீவுக்குசென்று இங்குள்ள சூழலை படம் பிடித்து ஸ்டிரீட்வீயுவில் அரங்கேற்றியுள்ளது. ஆக, நீங்களும் கூட, இப்போது பூமியில் உள்ள செவ்வாய கிரகப்பகுதியை ஆன்லைனில் பார்த்து வியக்கலாம்: https://www.google.com/maps/@75.4081407,-89.5874263,0a,109.7y,177.1h,100.43t/data=!3m4!1e1!3m2!1s4hzhnL3wBowAAAQrDCE2bQ!2e0?source=apiv3
–
சமூக ஊடக உலகில் புதிய சேவைகள் அறிமுகமாக இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், ஜேனே மன்சுன் வாங்கை (Jane Manchun Wong) டிவிட்டரில் பின் தொடர்வது நல்லது. ஏனெனில், ஹாங்காங்கைச்சேர்ந்தவரான ஜேனே வாங் புதிய சேவைகளை கண்டறிந்து சொல்வதை தனது பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். 24 வயதான வாங் ஓய்வு நேரத்தில் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளின் பின்னே உள்ள நிரல்களை ஆய்வு செய்து அதன் மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய சேவைகளை முன்னதாகவே ஊகித்து அந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார். இதற்காகவே பத்திரிகையாளர்கள் கூட அவரை டிவிட்டரில் பின் தொடர்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது அவரது டிவிட்டர் பக்கம்: @wongmjane
கடந்த காலங்களில், இன்ஸ்டாகிராம் புதிய டேஷ்போர்டை அறிமுகம் செய்ய இருப்பது, டிவிட்டர் உரையாடல் தொடர்பான புதிய சேவையை அறிமுகம் செய்ய இருப்பது உள்ளிட்ட விஷயங்களை இப்படி தான் அவர் கச்சிதமாக கண்டறிந்து சொல்லியிருக்கிறார். புதிய சேவைகளை கண்டறிந்து சொல்வதோடு, இணைய சேவைகளில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் அவற்றையும் அறிந்து நிறுவனங்களுக்கு தகவல் கொடுக்கிறார். ( இதற்கு நிறுவனங்கள் பரிசும் அளிக்கின்றன). கம்ப்யூட்டர் அறிவியல் படிக்கும் வாங், உள்ளூர் நூலக புத்தகங்களை படித்து மென்பொருள் மற்றும் நிரல்களை கற்றுக்கொண்டாராம்.
–
தேர்தல் ஸ்டார்ட் அப்
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்போது எல்லா துறைகளிலும் பிரபலமாக இருக்கின்றன. தேர்தல் தொடர்பான ஸ்டார்ட் அப்களும் கவனத்தை ஈர்க்கத்துவங்கியுள்ளன. அவற்றில் ஒன்று ரைட்2வோட் (Right2Vote ). தேர்தலில் வாக்களிப்பதை ஆன்லைனுக்கு கொண்டு வந்திருக்கும் ஸ்டார்ட் அப் இது. ஆம், இந்நிறுவனம் ஆன்லனில் வாக்களிப்பதற்கான வசதியை உருவாக்கியுள்ளது. அதுவும் கையில் உள்ள மொபைல் இருந்தே செயலி வடிவில் வாக்களிக்க வழி செய்கிறது.
இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் என்.ஆர்.ஐகள், ராணுவ வீரர்கள், வேறு மாநிலங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பிரிவினர் தேர்தலில் வாக்களிக்க உதவி செய்வதை இந்த ஸ்டார்ட் அப் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது. அண்மையில் இந்த ஸ்டார்ட் அப்பிற்கு மத்திய அரசின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. ஆனால் 2019 மக்களவை தேர்தலில் இதன் மூலம் வாக்களிக்கும் வசதி சாத்தியமில்லை. இதற்கான நாடாளுமன்ற ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.
எதிர்வரும் தேர்தல்களில் இந்த வசதி அறிமுகமாகும் வாய்ப்பு இருக்கிறது. மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையம் பஞ்சாயத்து தேர்தல்களில் இதை சோதித்து பார்க்க திட்டமிட்டுள்ளது. எல்லாம் சரியாக வந்தால் வருங்காலத்தில் வாக்குச்சாவடிக்கு போகாமலே வாக்களிக்கும் வசதியும் அறிமுகமாகலாம். இதெல்லாம் சாத்தியமா? எனும் சந்தேகம் இருந்தால், ஏற்கனவே நிறுவனங்களில் பங்குதாரர் கூட்டங்கள் எல்லாம் ஆன்லைன் வாக்களிப்பு முறை அமலுக்கு வந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உள்ளுர் குழுக்கள், சங்கங்கள், குடியிருப்பு அமைப்புகள் உள்ளிட்டவை இந்த ஸ்டார்ட் அப்பின் வாக்களிப்பு வசதியை பயன்படுத்தி வருகின்றன.
இந்த ஸ்டார்ட் அப் பற்றி மேலும் அறிய: https://right2vote.in/