இணைய ஆதரவாளர்களை மென்சோகத்தில் ஆழ்த்தி விடைபெற்றிருக்கிறது ’கிரம்பி கேட்’ பூனை. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் இந்த பூனையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்னும் பலர், கிர்மபி கேட்’ பூனையின் மறைவுக்கு உரிய வகையில், மீம்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஒரு பூனையின் மறைவு இணைய உலகில் இத்தனை தாக்கத்தை செலுத்துமா? என வியக்க வேண்டாம். தனது 7 வது வயதில் உலகில் இருந்து விடைப்பெற்றிருக்கும் கிரம்பி கேட் ஒன்றும் சாதாரண பூனை அல்ல: அது இணையம் கொண்டாடி மகிழ்ந்த நட்சத்திர பூனை.
இந்த பூனையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியாகியுள்ள இணைய செய்திகளில் இருந்தே இதன் செல்வாக்கை தெரிந்து கொள்ளலாம்.
பிரபலமான செய்தி தளங்களில் துவங்கி, பிபிசி, சிஎன்.என் உள்ளிட்ட முன்னணி தளங்கள் வரை எண்ணற்ற தளங்கள் கிரம்பி கேட் மறைவுக்கு நினைவாஞ்சலி செலுத்தியுள்ளன. முன்னணி ஊடகமான கார்டியன், கிரம்பி கேட் பூனையின் வாழ்க்கையை புகைப்பட தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
எல்லா செய்திகளுமே, கிரம்பி கேட்டை இணையத்தின் மிக பிரபலமான பூனை என்று வர்ணித்துள்ளன. பிரபலமான மட்டும் அல்ல, இணையவாசிகள் கொண்டாடி மகிழ்ந்த பூனை!
இணைய உலகில் எப்போதுமே பூனைகளுக்கு செல்வாக்கு அதிகம் என நீங்கள் அறிந்திருக்கலாம். இமெயில் பகிர்வுகளில் துவங்கி, யூடியூப் வீடியோக்கள் வரை பூனைகளின் ஆதிக்கம் அதிகம். பூனைகளுக்காகவே அமைக்கப்பட்ட இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன.
ஆனால், வேறு எந்த பூனைக்கும் கிடைக்காத பெயரும் புகழும் கிரம்பி கேட்டுக்கு தான் சாத்தியமாயிற்று. அதிருப்தியை தெரிவிக்கும் அதன் சோகமான முகமே இதற்கு காரணமாக இருந்தது.
கிரம்பி கேட்டின் வெற்றிக்கதை 2012 ம் ஆண்டில் துவங்கியது. அதன் உரிமையாளர்கள் அந்த ஆண்டு, இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட் தளத்தில், அந்த பூனையின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டனர்.
இணையம் அதற்கு முன்னரும் பின்னரும் ஆயிரக்கணக்கான பூனை படங்களை பார்த்திருக்கிறது. ஆனால், கோபாமான பூனையை ( கிரம்பி கேட்) பாருங்கள் எனும் தலைப்புடன் வெளியான இந்த பூனையின் படம் பார்த்தவர்களை எல்லாம் கவர்ந்திழுத்தது. கோபத்தில் முறைத்து பார்ப்பது போல, அந்த பூனையின் முகபாவம் அமைந்திருந்ததே ஈர்ப்புக்கான காரணம்.
ரெட்டிட் தளத்தில் இன்னமும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அந்த படத்தை இப்போது நீங்கள் பார்த்தாலும் நிச்சயம் கவரப்படுவீர்கள். அந்த அளவுக்கு பூனை உங்களை பார்த்து முறைப்பது போலவே இருக்கும். விளைவு, ரெட்டிட்வாசிகள் மத்தியில் இந்த பூனை பிரபலமானது. பூனையின் கோபம் பற்றி பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்திருந்தனர்.
அடுத்த கட்டமாக புகைப்பட பகிர்வு தளமான இம்கூரில் இந்த பூனையின் படம் பகிரப்பட்டு லட்சக்கணக்கானோரால் பார்த்து ரசிக்கப்பட்டது.
அதிருப்தியை வெளிப்படுத்தும் கிரம்பி கேட்டின் கோபமான பார்வை ஏதோ உரையாடலுக்கு அழைப்பு விடுப்பது போலவே இருந்தது. ஒரு மீமை உருவாக்க இதை விட வேறு என்ன வேண்டும். பலரும் கிரம்பி கேட் கோபமான முகத்தை வைத்துக்கொண்டு தங்களுக்கு தோன்றிய கருத்துக்களை தெரிவிக்கும் படங்களை பகிர்ந்து கொண்டனர். இப்படி தான் துவங்கியது கிரம்பி கேட் மீம் அலை.
அதன் பிறகு பார்த்தால், பேஸ்புக், டிவிட்டர் என இணையத்தில் எங்கு பார்த்தாலும் கிரம்பி கேட் தான். ஒரு பூனை திடிரென புகழ் பெற்றதை ஊடகங்களும் சுவாரஸ்யமான செய்தியாக்கின. கிரம்பி கேட்டின் இயற்பெயர் டாடர் சாஸ் என்பதும், அதன் உரிமையாளர் டாபதாவின் மகள் அதற்கு கிரம்பி கேட் என பெயர் சூட்டியது உள்ளிட்ட தகவல்கள் தெரிய வந்தன.
கிரம்பி கேட் படத்தில் உள்ளது போல உண்மையில் கோபத்தில் இல்லை, ஒரு வகையான உடல் குறைபாட்டால் அதன் முக அமைப்பு அவ்விதம் அமைந்திருக்கிறது போன்ற விவரங்களும் வெளியாகின. இவை எல்லாம் கிரம்பி கேட்டை இன்னும் பிரபலமாக்கியது.
கிரம்பி கேட் புகழ் இணையத்தில் பரவவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்க தொலைக்காட்சி டாக்ஷோக்களில் பங்கேற்றதோடு, வேறு பல கண்காட்சி நிகழ்ச்சிகளிலும் இந்த பூனை சிறப்பு விருந்தினர் போல கலந்து கொண்டது.
கிரம்பி கேட் வெறும் இணைய புகழ் மட்டும் பெறவில்லை. அதுவே ஒரு பிராண்டாக மாறியது. அதன் பெயரில் வர்த்தக நோக்கில் பொருட்கள் அறிமுகமாகி விற்பனையானது. வருவாய் அள்ளித்தரும் பணக்கார பூனையாக மாறிய கிரம்பி கேட், வாழ்க்கையை சொல்லும் திரைப்படமும் வெளியாகி வெற்றி பெற்றது. காப்புரிமை மீறல் வழக்கிலும் வெற்றி பெற்று லட்சங்களை பெற்றுத்தந்தது.
இதனிடையே அதன் கோமான முகம், இணையவாசிகளுக்கு, எண்ணற்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வடிகாலாக அமைந்தது. எனவே தொடர்ந்து மீம்களில் இடம்பெற்றுக்கொண்டே இருந்தது.
கிரம்பி கேட் பேஸ்புக் பக்கத்தில் அதற்கு 85 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 24 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். டிவிட்டரில் 13 லட்சம் பாலோயர்கள் இருக்கின்றனர். யூடியூப்பில் 2.6 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.
இது தான் கிரம்பி கேட் புகழின் சுருக்கமான வரலாறு. தனது உடல் கோளாறை மீறி, இணைய புகழுடன் வலம் வந்து கொண்டிருந்த இந்த பூனை, உடல நலக்குறைவால் அண்மையில் மரணம் அடைந்தது. அதன் உரிமையாளர்கள், பூனையின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தியை மிகுந்த உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டதை அடுத்து அதன் ரசிகர்கள் மென் சோகத்தில் ஆழ்ந்தனர்.
பலரும் பேஸ்புக் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரங்கல் குறிப்புகள் வெளியாகியுள்ளன. பூனையின் அபிமானிகள் பலர், டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
லட்சக்கணக்கான மீம்களுக்கு உயிர் கொடுத்த அந்த பூனைக்கு பலரும் மீம்கள் வாயிலாகவே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.