பிரதமர் நரேந்திர மோடிக்கு இணைய உலகில் ஆதரவாளர்களும், அபிமானிகளும் அதிகம் என்பது தெரிந்த விஷயம் தான். மோடி ஆதரவாளர்கள், சமூக ஊடகங்களில் தீவிரமாக இருப்பதோடு, மோடிக்கு எதிரான அல்லது விமர்சன கருத்துகளுக்கு பதிலடி தருவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என எந்த ஊடகத்தில் மோடி எதிர்ப்பு கருத்துக்கள் வந்தாலும், அவரது இணைய ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி எதிர்ப்பாளர்களை ஒரு வழி செய்து விடுவார்கள்.
மோடி ஆதரவாளர்கள் இப்போது, இணைய பதிலடிக்கு பயன்படுத்தும் ஆயுதங்களில் விக்கிபீடியாவையும் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில், அமெரிக்காவின் டைம் பத்திரிகை பிரதமர் மோடியை, இந்தியாவை மதரீதியாக பிளவு படுத்தும் தலைவர் என பொருள் படும் தலைப்பில் முகப்பு கட்டுரை வெளியிட்டிருந்தது. சர்வதேச நாடுகள் மத்தியில் மோடிக்கு நல்ல மதிப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்ற நிலையில், டைம் இதழின் இந்த கட்டுரை மோடி மீதான கடும் விமர்சனமாக அமைந்தது.
ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படுபவர்களா மோடி ஆதரவாளர்கள். இந்த விமரசன கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் அதிஷ் தஸீர் மீது களங்கம் கற்பித்து, டைம் இதழின் நடுநிலையையும் கேள்விக்குறியாக்கினர்.
தஸீர் கடுமையாக தான் கட்டுரை எழுதியிருகிறார், ஆனால் அவர் அப்படி தான் எழுதுவார். ஏனெனில் அவர் காங்கிரஸ் கட்சியின் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியிருக்கிறார் தெரியுமா? என்பது போல, மோடி ஆதரவாளர் ஒருவர் டிவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார். இதற்கு ஆதாரமாக, விக்கிபீடியாவில் உள்ள தஸீர் தொடர்பான தகவல்களையும் ஸ்கிரின்ஷாட்டாக வெளியிட்டிருந்தார்.
தஸீர் காங்கிரஸ் கட்சியின் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் எனும் தகவல் பலருக்கு அதிர்ச்சியை தரலாம். இந்த தகவலை தெரிந்த கொண்ட பிறகு டைம் இதழின் விமர்சன கட்டுரையின் நோக்கம் மீதும் சந்தேகம் வரலாம். டிவிட்டரில் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட மோடி ஆதரவாளர் விரும்பியதும் அது தான். ஆனால் பிரச்சனை என்னவெனில், இந்த தகவல் பொய்யானது என்பது தான்.
தஸீர் பிரிட்டனில் வசிக்கும் பத்திரிகையாளர். இந்திய பத்திரிகையாளர் தவ்லீன் சிங்கின் மகன் போன்ற விக்கிபீடியா தகவல்கள் எல்லாம் சரி தான். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் மக்கள் தொடர்பு பணி எல்லாம் செய்தது கிடையாது. அது அவரது விக்கிபீடியா பக்கத்தில் விஷமிகள் திட்டமிட்டு சொருகிய தகவல். விக்கிபீடியாவில் இடம்பெறும் தகவலை யார் வேண்டுமானாலும், திருத்தலாம் எனும் வசதியை பயன்படுத்தி இந்த தவறான தகவல் உள்நோக்கத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பொய் தகவலோடு, விக்கிபீடியா பக்கத்தை ஸ்கீரின்ஷாட் எடுத்து, தஸீர் கட்டுரைக்கு உள்நோக்கம் கற்பித்து, டைம் பத்திரிகையின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பிருந்தனர். இந்த டிவிட்டர் செய்தி, மோடி ஆதரவாளர்கள் லைக் செய்யப்பட்டு, ஆர்வத்தோடு பகிர்ந்து கொள்ளப்பட்டது. டைம் பத்திரிகை கட்டுரை முன் வைத்த விமர்சனத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த இந்த பதிலடி பயன்பட்டது என மோடி ஆதரவாளர்கள் குதூகலம் அடைந்திருக்கலாம்.
ஆனால், பொய்த்தகவல்களை கண்டறிந்து அம்பலப்படுத்தும் ஆல்ட் நியூஸ் இணையதளம், இந்த பதிலடியின் பின்னணியை ஆய்வு செய்து, டைம் கட்டுரை வெளியான பிறகு மே 10 ம் தேதி கட்டுரையாளர் தஸீர் விக்கிபீடியா பக்கம் தாக்குதலுக்கு உள்ளாகி, அவரைப்பற்றி பொய்த்தகவல் சேர்க்கப்பட்டதாகவும் தெளிவுபடுத்தியது. ஆனால் அதன் பிறகு, உண்மை கண்டறியப்பட்டு, இந்த பொய்த்தகவல் நீக்கப்பட்டதோடு, எளிதாக திருத்தங்களை மேற்கொள்ள முடியாத வகையில், தஸீரின் விக்கிபீடியா பக்கம் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டது.
கட்டற்ற இணைய களஞ்சியமான விக்கிபீடியாவின் பலம் அதை யார் வேண்டுமானாலும் திருத்தலாம் என்பது தான். இந்த கட்டற்ற தன்மையை பயன்படுத்திக்கொண்டு விஷமிகள் உள்நோக்கத்துடன் விக்கிபீடியா தகவல்களில் கைவரிசை காண்பிப்பது உண்டு. இத்தகைய செயல் விக்கி ரவுடித்தனம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதை இஷ்டம் போல செய்ய முடியாது. எதிர் தரப்பினர் இதை கண்டறிந்து பதில் திருத்தத்தில் ஈடுபட்டு பொய்த்தகவல்களை நீக்குவதும் உண்டு. பதிலுக்கு விஷமிகள் மீண்டும் கைவரிசை காட்டுவதுண்டு. விக்கிபீடியாவில், இது திருத்தல் யுத்தம் என குறிப்பிடப்படுகிறது.
இந்த இரண்டும் தான், மோடி விமர்சன கட்டுரை விவகாரத்தில் அரங்கேறியிருக்கிறது.
விக்கிபீடியாவில் பொய்த்தகவல் சரி செய்யப்பட்டு விட்டாலும், மோடி ஆதரவாளர்கள் அதை கண்டு கொள்ளாமல் பழைய ஸ்கிரீன்ஷாட்டையே உற்சாகமான பயன்படுத்தி வருகின்றனர். டிவிட்டர், வாட்ஸ் அப் என இந்த தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது. அண்மையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் தொடர்பான விஷயத்திலும் இப்படி தான் நடந்தது என்பதை கவனிக்க வேண்டும்.
அமர்த்திய சென், பிரதமர் மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருபவர். நாலாந்தா பல்கலைக்கழகத்தின் கவுரவ வேந்தர் என்ற முறையில் அவர் மீதான அடுக்கடுக்கான ஊழக் குற்றச்சாடுகளை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆதாரம் எதுவும் இல்லாமல், இந்த குற்றச்சாட்டுகள் பகிரப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து அந்த பத்திரிகையாளர் குற்றச்சாட்டுகள் வாட்ஸ் அப்பில் வந்தவை எனக்கூறி, தனது குறும்பதிவுகளை நீக்கிவிட்டார். ஆனால், இதற்குள் மோடி ஆதரவாளர்கள் பலர், சென் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறும் டிவிட்டர் செய்திகளை படம் எடுத்து வைத்துக்கொண்டு வாட்ஸ் அப்பில் பகிரத்துவங்கிவிட்டனர். ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான நடவடிக்கையால் தான் சென், மோடி அரசை விமர்சிக்கிறார் என்றும் வாதம் செய்தனர்.
ஆக, அனாமதேய வாட்ஸ் அப் செய்தியை அடிப்படையாக கொண்டு ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்து கொண்ட தகவல்கள், டிவிட்டரில் வெளியானது எனும் அங்கீகாரத்தை ஆதாரமாக கொண்டு வாட்ஸ் அப்பில் முன்பைவிட வேகமான உலா வரச்செய்யப்பட்டதி என்னவென்று சொல்வது. இணையத்தில் எதை படிக்கிறோம், அதன் பின்னணி என்ன என்பதில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
–
https://minnambalam.com/k/2019/05/22/11