டிஜிட்டல் டைரி – நேசமணி பற்றி பில்கேட்ஸ் சொன்ன கருத்து!

105198974-GettyImages-519919641இணையத்தில் வைரலாகி பரவிய காண்ட்ராக்டர் நேசமணி குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்சும், நேசமணி பற்றி தன் கருத்தை பதிவு செய்திருப்பதாக கூறினால், நன்றாக தான் இருக்கும். ஆனால், உலக அளவில் டிரெண்ட் ஆனதை மீறி, நேசமணி மீம், பில்கேட்சின் கவனத்தை ஈர்க்ககூடியதாக அமையவில்லை. இருப்பினும், நேசமணி டிரெண்டுடன் பில்கேட்சை பொருத்தியிருப்பதற்கான காரணம், இன்று இணையத்தில் பிரபலமாக இருக்கும் பல விஷயங்களை பில்கேட்ஸ் அன்றே கணித்திருக்கிறார் என்பதால் தான்.

பிரெண்ட்ஸ் திரைப்படம் வெளியான போது, வடிவேலு காமெடி ஏறக்குறைய 20 ஆண்டு கழித்து, இணையத்தில் வைரலாகும் என்றோ அல்லது இணையத்தில் மீம் எனும் கருத்தாக்கம் பிரபலமாக இருக்கும் என்றோ யாரேனும் கணித்திருந்தால் எப்படி இருக்கும்? 1995 ல் பில்கேட்ஸ் ஏறக்குறைய இதற்கு நிகரான கணிப்புகளை தான் வெளியிட்டிருக்கிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?

ஆம், இன்று நாம் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் இணைய ஸ்டீரிமிங் சேவை மற்றும் இணையத்தை உலுக்கி கொண்டிருக்கும் பொய்செய்தி பற்றி எல்லாம் பில்கேட்ஸ் 1995 லேயே கணித்திருக்கிறார்.

பில்கேட்சின் தொழில்நுட்ப கணிப்புத்திறன் ஒன்றும் புதிதல்ல தான். 1995 ல அவர் எழுதிய ’ரோட் அஹெட்’ (The Road Ahead) எனும் புத்தகத்தில், இணைய தொழில்நுட்பத்தின் எதிர்கால சாத்தியங்கள் பற்றி விரிவாகவே விவரித்திருக்கிறார். அதே ஆண்டு தான், அவரது மைக்ரோசாப்ட் நிறுவனம் இணையத்தை அணுகுவதற்கான  இண்டெர்நெட் எக்ஸ்பிளோரர் பிரவுசரை வெளியிட்டது.

பில்கேட்சின் புத்தகம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு அமெரிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான டெரி பிராட்கட் (Terry Pratchett) என்பவர் ஜிகியூ பத்திரிகையின் பிரிட்டன் பதிப்பிற்காக பில்கேட்சிடம் பேட்டி கண்டார். இந்த பேட்டியின் போது, இணையம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என கேட்சிடம், பத்திரிகையாளர் பிராட்கட் கேட்டிருக்கிறார்.

இதற்கு கேட்ஸ் அளித்த பதில்கள் இப்போது பார்த்தால் வியப்பாக இருக்கிறது. ஏனெனில், தற்போது இணையத்தில் பிரபலமாக நெட்பிளிக்ஸ் போன்ற இணைய ஸ்டீரிமிங் சேவைகளை அவர் கணித்து கூறியிருக்கிறார். திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களை நாம் பார்க்கும் விதத்தையே இணையம் மாற்றி அமைக்கும் என கேட்ஸ் கூறியிருக்கிறார்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்ல், 1995 ல் இணையமே அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை என்பது தான். அமெரிக்காவிலேயே கூட ஆன்லைன் என்றால் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் குறைவாகவே இருந்த கால கட்டம் அது. மேலும், திரைப்படங்களை வீடியோ காசெட்களில் பார்ப்பது இயல்பாகவும் பிரபலமாகவும் இருந்தது.

D7qg9Q_W4AAYq2Zடிவிடி போன்ற நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகத்துவங்கிய நிலையில், பில்கேட்ஸ் அடுத்த பத்தாண்டுகளில் விசிஆர் போன்றவை காலாவதியாகிவிடும் என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டு திகைத்த பத்திரிகையாளர் என்னது, முழுவதும் காலாவதியாகி விடுமா? என்று கேட்க, ” அடுத்த ஐந்தாண்டுகளில் அவை மீடியா பிளேயாரால் பின்னுக்குத்தள்ளப்படும் என்றும், வலைப்பின்னல் வழியே பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை அணுகுவதை தான் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

விசிஆர் சாதனங்கள் மிக மோசமான இடைமுகம் கொண்டுள்ளன என்று விமர்சித்த கேட்ஸ், நாம் பேசும் விஷயங்கள் பயனாளிகளுக்கு வழிகாட்டும் திரைகளை கொண்டிருக்கும், அவை உங்களுக்கு வழிகாட்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கேட்ஸ் விவரித்த இந்த விஷங்களை தான், இப்போது இணையத்தில் ஸ்டீரிமிங் வாயிலாக வீடியோ மற்றும் திரைப்படங்களை பார்ப்பதாக அமைந்துள்ளது.

நிற்க, கேட்ஸ் இந்த கருத்தை வெளியிட்ட போது, ஸ்டிரீமிங்கின் மையாக இருக்கும் நெட்பிளிக்ஸ் சேவையும் துவக்கப்படவில்லை, வீடியோவுக்கான இணையதளமான யூடியூப்பும் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல, பத்திரிகையாளர் கேட்சிடம், இணையம் தவறான தகவல்களை அதிகமானவர்களுக்கு கொண்டு சேர்க்க வழி செய்யுமா 😕 என்றும் கேட்டிருக்கிறார். இதற்கு, “ இது எல்லாம் இருக்கிறது. ஒரு விஷயம் உண்மையா அல்லது யாரேனும் அதை உருவாக்கினாரா? என்பதை அறிய வழியில்லை என கேட்ஸ் கூறியிருக்கிறார். ஏறக்குறைய இன்று பொய் செய்திகள் விஷயத்தில் இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

அதனால் தான் பில்கேட்சின் இந்த பழைய பேட்டி இப்போது மிகவும் முக்கியமாகி இருக்கிறது. கேட்சை பேட்டி கண்ட பத்திரிகையாளர் பிராட்கெட் பற்றி புத்தகம் எழுதிக்கொண்டிருக்கும் மார்க் பரோஸ் என்பவர், இந்த பழைய பேட்டியை படித்து வியந்து, அதிலிருந்து பில் கேட்ஸ் கணிப்புகளை டிவிட்டரில் எடுத்து வெளியிட்டிருப்பதால், இந்த விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது.

நீங்களும் விரும்பினால் பில் கேட்சின் அந்த தொலைநோக்கு பேட்டியை கட்டணம் செலுத்தி அந்த இதழை வாங்கி வாசிக்கலாம்: https://www.crazyaboutmagazines.com/ourshop/prod_3597573-British-GQ-magazine-July-1995-Uma-Thurman-cover.html

இல்லை எனில் பரவாயில்லை, பில்கேட்சின் வலைப்பதிவை பின் தொடருங்கள், மனிதர் சுவாரஸ்யமான பல விஷயங்களை அதில் பகிர்ந்து கொண்டு வருகிறார். குறிப்பாக பில்கேட்சின் புத்தக பரிந்துரை அருமையாக இருக்கும்: https://www.gatesnotes.com/

https://minnambalam.com/k/2019/06/03/30

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *