டிஜிட்டல் டைரி- டிவிட்டரில் பதவி நீக்கம் செய்யும் அதிபர்

880x495_cmsv2_61ad0064-f460-5701-bda2-e0ccf1899886-3948420நாடாளும் தலைவர்கள், டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பது எல்லாம் செய்தி அல்ல: அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல், நம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி வரை பல நாட்டு தலைவர்கள் டிவிட்டரில் இருக்கின்றனர். இந்த வரிசையில் இணைந்திருக்கும், மத்திய அமெரிக்க நாடான, எல் சால்வடாரின் புதிய அதிபர் நயீப் புகேலி (Nayib Bukele ), டிவிட்டர் பயன்பாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

ஜூன் 1 ம் தேதி அதிபராக பதவியேற்றுக்கொண்ட புகேலி, டிவிட்டரில் நாடாள துவங்கியிருக்கிறார். ஆம், பதவியேற்ற பின் அவர் மேற்கொண்ட முக்கிய முடிவுகளை டிவிட்டர் பதிவுகளாக அறிவித்திருக்கிறார்.

புகேலியின் முக்கிய முடிவுகள் பெரும்பாலும் பதவி நீக்கங்களாக அமைந்துள்ளன. ” நீங்கள் சில நேரங்களில் கசப்பு மருந்தை எடுத்துக்கொண்டாக வேண்டும்” எனும் அறிவுரையுடன் அவர் அதிகாரி ஒருவரை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக 30 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை பதவி நீக்கம் செய்திருக்கிறார்.

அனைத்து பதவி நீக்க உத்தரவுகளும் டிவிட்டர் வாயிலாக அதிபரால் வெளியிடப்பட்டுள்ளன. பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த எப்.எ.எம்.என் கட்சி மற்றும் முன்னாள் அதிபர் சான்சஸ் செரனுக்கு நெருக்கமானவர்களாக கருதப்படுகின்றனர்.

புதிதாக பொற்ப்பேற்றுள்ள அமைச்சர்களும், அதிபரின் உத்தரவை செயல்படுத்துவதை டிவிட்டர் மூலமே அறிவித்துள்ளனர்.

புதிய அதிபர் டிவிட்டரில் எடுத்து வரும் அதிரடி முடிவுகள், அந்நாட்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனையில் சிக்கித்தவித்து வரும் எல் சால்வடார் நாட்டில், மக்கள் முந்தைய ஆட்சியின் உழல் மற்றும் இதர பிரச்சனைகளால் வெறுத்துப்போயிருக்கும் நிலையில், புதிய அதிபரின் செயல்பாடுகளை நம்பிக்கையோடு பார்க்கின்றனர்.

அதிபர் புகேலி, டிவிட்டரில் பதவி நீக்கங்களை அறிவிப்பதை, வெளிப்படையான நிர்வாகமாகவும் பலரும் பார்க்கின்றனர். ஆனால், இது வழக்கமான பழி வாங்கும் நடவடிக்கை என்று நினைப்பவர்களும் இல்லாமல் இல்லை.

37 வயதில் அதிபராகி இருக்கும் முன்னாள் மேயரான புகேலி, புத்தாயிரமாண்டின் அதிபர் என வர்ணிக்கப்படுகிறார். இளம் வயதில் அதிபரான புகேலி, டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக செயல்பாட்டிலும் சிறந்து விளங்குகிறார்.

அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கூட, அவர் வழக்கமான பிரச்சார முறையை தவிர்த்து டிவிட்டர் போன்ற சாதனங்களை பிரதமானமாக பயன்படுத்தியிருக்கிறார். தேர்தல் பிரச்சார விவாதங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. ஊடகங்களுக்கு நேர்காணலும் அளிக்கவில்லை. மாறாக சமூக ஊடகங்களை தான அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

சமூக ஊடக பிரச்சாரம் வாயிலாக, ஆட்சிக்கு வந்துள்ள புகேலி, அதிபராக தனது பொறுப்பை நிறைவேற்றவும் டிவிட்டரை பயன்படுத்தி வருகிறார். ஆனால், பதவி நீக்கங்களுக்கு மட்டும் அல்ல, பதவி நியமனங்களுக்கும் அதிபர் டிவிட்டரை பயன்படுத்தி வருகிறார்.

கட்டிடக்கலை மாணவர் ஒருவர், பொருளாதார நெருக்கடி காரணமாக படிப்பை தொடராமல் இருப்பது தொடர்பான செய்தி உள்ளூர் நாளிதழிகளில் வெளியானதை அடுத்து, அதிபர் தலையிட்டு, சால்வடார் பள்ளிகளை மேம்படுத்தும் பொறுப்பில் அந்த மாணவர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். காவல் துறைக்கான துணை இயக்குனரையும் அதிபர் டிவிட்டர் மூலமே நியமித்திருக்கிறார்.

இதனிடையே, யூடியூப் சானல் ஒன்று, அதிபரின் டிவிட்டர் அதிரடிகளை கேலி செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘ உலகின் கூலான அதிபர் இவரா? எனும் கேள்வியையும் எழுப்பியிருந்தது. இந்த விடியோவை உருவாக்கியவருக்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்த புகேலி, சந்தேகத்திற்கு இடமில்லாமல் தானே, உலகின் கூலான அதிபர் என்றும் கூறியிருந்தார்.

அதிபர் புகேலியின் டிவிட்டர் ஆட்சி வெறும் ஸ்டண்டாக அமையுமா? அல்லது நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த நிர்வாகத்தை அவரால் தர முடியுமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், ஒன்று சமூக ஊடகத்தை பிரதானமாக பயன்படுத்தி ஆட்சிக்கு வருபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன், உக்ரைன் நாட்டில், நகைச்சுவை நடிகரான விலாதிமீர் ஜெலென்ஸ்கி என்பவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஜெலென்ஸ்கி, அரசியல் அனுபவம் இல்லாதவர் என்பது மட்டும் அல்ல வழக்கமான பாணி தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் ஆட்சியை பிடித்திருக்கிறார். ’மக்களின் சேவகன்’ எனும், தொலைக்காட்சி மற்றும் யூடியூப் தொடர் மூலம் பிரபலமான ஜெலென்ஸ்கி, தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எல்லாம் பங்கேற்காமல், யூடியூப், பேஸ்புக் வாயிலான பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *