பேஸ்புக்கின் டிஜிட்டல் நாணயம் ’லிப்ரா’ பற்றி நீங்கள் அறிய வேண்டியவை எல்லாம்

_107410230_calibraapp_earlylook_en-2xஇணைய உலகில் பேசப்பட்டு வந்தது போலவே சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக், தனது டிஜிட்டல் நாணய திட்டத்தை அறிவித்துள்ளது. லிப்ரா எனும் பெயரில் இந்த டிஜிட்டல் நாணயத்தை 2020 ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 2.4 பில்லியன் பயனாளிகளை கொண்ட பேஸ்புக், டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்ய இருப்பது, நிதி உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த திட்டம் கட்டுப்பாட்டிற்கு உள்ளாகலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

பேஸ்புக்கின் டிஜிட்டல் நாணயம், முன்னணி கிரிப்டோ நாணயமான பிட்காயின் போன்றது என்றாலும், முக்கிய வேறுபாடுகளை கொண்டிருக்கிறது. பேஸ்புக்கின் லிப்ரா டிஜிட்டல் நாணய திட்டம் தொடர்பாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இதோ:

பேஸ்புக்கின் திட்டம் என்ன?

பேஸ்புக் திடிரென டிஜிட்டல் நாணய துறையில் குதித்துவிடவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே , பிளாக்செயின் அடிப்படையிலான டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்யும் முயற்சியில் பேஸ்புக் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. 2018 ம் ஆண்டில் வயர்டு பத்திரிகை பேஸ்புக்கின் இந்த திட்டம் பற்றி விரிவான கட்டுரை வெளியிட்டது. உலகம் முழுவதும் பிளாக்செயின் தொழில்நுட்பம் பிரபலமாகி வரும் நிலையில், பேஸ்புக்கும் இந்த நுப்டத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது. இந்நிலையில், பேஸ்புக் தற்போது அதிகாரபூர்வமாக இந்த திட்டம் பற்றி அறிவித்துள்ளது.

பேஸ்புக் டிஜிட்டல் நாணயம் எப்போது வருகிறது?

பேஸ்புக் ட், லிப்ரா எனும் பெயரில் தனது டிஜிட்டல் நாணயம் லிப்ரா எனும் பெயரில் அறிமுகம் ஆகும் என தெரிவித்துள்ளது. லிப்ரா என்றால் சுவிஸ் மொழில் எடை எனும் பொருள் ஆகும். 2020 ம் ஆண்டில் முதல் கட்டமாக லிப்ரா டிஜிட்டல் நாணயம் அறிமுகம் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. லிப்ரா டிஜிட்டல் நாணயத்துடன், கேலிப்ரார் எனும் டிஜிட்டல் வாலெட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

லிப்ராவை எப்படி பயன்படுத்துவது?

லிப்ரா டிஜிட்டல் நாணயத்தை அதன் கேலிபர் வாலெட் கொண்டு பயன்படுத்தலாம். பேஸ்புக்கின் மெசஞ்சர், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் மற்றும் இதற்கான பிரத்யேக செயலியில் லிப்ரா இயங்கும். இந்த செயலிகளின் வாயிலாக லிப்ராவில் பரிவர்த்தனை செய்யலாம். வாட்ஸ் அப் செய்தி அனுப்புவது போலவே, லிப்ராவை அனுப்புவது அல்லது பெறுவது எளிதாக இருக்கும்.

லிப்ரா, பிட்காயினுக்கு போட்டியா?

லிப்ரா, பிட்காயின் போலவே கிரிப்டோ நாணயம் என்றாலும், பிட்காயினுக்கும் இதற்கும் முக்கிய வேறுபாடு இருக்கிறது. பிட்காயின் சுயேட்சையான நாணயம். அதன் காரணமாகவே அது ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகிறது. ஆனால், லிப்ரா அப்படி இல்லை. அது ஸ்டேபிள் காயின் வகையை சேர்ந்தது. அதாவது, அதன் மதிப்பு சுயேட்சையாக தீர்மானிக்கப்படாமல், டாலர் , யூரோ போன்ற சர்வதேச நாணயங்களுக்கு நிகரானதாக கொள்ளப்படும். எனவே இதன் மதிப்பு பிடிகாயின் போல ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகாமல் பெருமளவு நிலையானதாகவே இருகும்.

லிப்ராவை எதற்கு பயன்படுத்தலாம்?

லிப்ராவை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். அதாவது, லிப்ரா நாணயத்தை இன்னொருவருக்கு அனுப்பி வைக்கலாம். மற்றவர்களிடம் இருந்து லிப்ராவை பெற்றுக்கொள்ளலாம். டாலர் போன்ற பணத்தை லிப்ராவாக மாற்றி அனுப்பலாம். லிப்ராவையும் டாலராக மாற்றிக்கொள்ளலாம். அடுத்த கட்டமாக, பல்வேறு சேவைகளையும் லிப்ரா மூலம் அணுகலாம். அதன் பிறகு, மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போலவே லிப்ராவை எதற்கும் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிப்ராவை யார் பயன்படுத்தலாம்?

லிப்ராவை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றாலும், உலகில் இன்னமும் சொந்தமாக வங்கி கணக்கு வைத்திராதவர்களையே இந்த நாணயத்திற்கான பிரதான இலக்காக கொண்டுள்ளதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள வங்கி சேவைக்கு வெளியே உள்ளவர்களை பேஸ்புக் குறி வைக்கிறது. இவர்களுக்கு வங்கி சேவைக்கு நிகரானதை வழங்குவதோடு, இவர்கள் பணம் அனுப்பி வைக்க லிப்ரா எளிய வழியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. லிப்ராவில் பரிவர்த்தனை கட்டணம் சொற்பம் என்பதால், பணம் அனுப்பி வைக்க இது ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது.

லிப்ரா பாதுகாப்பானதா?

மற்ற கிரிப்டோ நாணயங்கள் போலவே லிப்ரா, பிளாக்செயின் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. எனவே பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

லிப்ராவை நிர்வகிப்பது யார்?

நல்ல கேள்வி. லிப்ரா பேஸ்புக்கின் திட்டம் என்றாலும், இது பேஸ்புக்கின் கையில் மட்டும் இருக்கப்போவதில்லை. உண்மையில் விசா, பேபால், இபே, உபெர், ஸ்பாட்டிபை உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்துள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து லிப்ரா சங்கம் எனும் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் கீழ் தான் லிர்பா செயல்படும். இதில் பேஸ்புக்கும் ஒரு உறுப்பினர்.

லிப்ராவில் முதலீடு செய்யலாமா?

பிட்காயினில் முதலீடு செய்வது போல, லிப்ராவில் முதலீடு செய்ய முடியாது. லிப்ராவின் மதிப்பு பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்பதால் இதை வாங்கி வைத்துக்கொண்டு லாபம் பார்க்க முடியாது. இது அடிப்படியில் பரிவர்த்தனைக்கானது. மேலும், பிட்காயின் போல இதை மைனிங் முறையில் உருவாக்கி கொள்ள முடியாது. இப்போதைய நிலையில், ஆரம்ப கட்ட லிப்ரா நாணயத்தை பெறுவது எப்படி என பேஸ்புக் விளக்கவில்லை. நிச்சயம் மைனிங் மூலம் லிப்ரா ஜாக்பாட் அடிக்காது என சொல்லலாம்.

பேஸ்புக்கிற்கு என்ன பலன்?

லிப்ரா மீது பேஸ்புக் ஏன் ஆர்வம் கொண்டுள்ளது என்பதற்கான பதில் மிக நீளமானது. அடிப்படையான விஷயம் பேஸ்புக், பிளாக்செயின் நுட்பம் மற்றும் தனது பரந்துவிரிந்த பயனாளிகள் பரப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது. லிப்ரா மூலம் அது வருவாய் பார்க்க விரும்புகிறது. மேலும் வேறு ஒரு நிறுவனம் இது போன்ற உலக காயினை அறிமுகம் செய்து தான் கோட்டை விட்டு நிற்பதை விரும்பாமல் முதலில் களத்தில் இறங்கியுள்ளது.

பேஸ்புக்கை நம்பலாமா?

பேஸ்புக் ஏற்கனவே பயனாளிகள் தரவுகளை கையாள்வதில் எக்கச்சக்கமாக கெட்ட பெயர் வாங்கி இருப்பதால், பேஸ்புக்கை நம்பி டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாமா எனும் கேள்வி எழுவது இயற்கையானது தான். ஆனால் லிப்ராவை பொருத்தவரை தரவுகள் விஷயத்தில் பொறுப்புடன் இருப்போம், பேஸ்புக் பயனாளி தரவுகளும் லிப்ரா பயனாடு தரவுகளும் தனித்தனியாக இருக்கும் என பேஸ்புக் உறுதி அளித்துள்ளது.

லிப்ரா கட்டுப்பாடுக்கு உள்ளாகுமா?

பேஸ்புக்கின் லிப்ரா திட்டம் நிச்சம் நிதி உலகில் தாக்கம் செலுத்தும். அதிலும் பேஸ்புக் வங்கிச்சேவை இல்லாதவர்களை குறி வைப்பதால் நிச்சயம் பெரிய அளவில் தாக்கம் இருக்கும். ஆனால் அரசுகளும் வங்கிகளும் இதை எப்படி பார்க்கும் என்பது தெரியவில்லை. நிச்சயம் பல்வேறு நாடுகளில் ஏதேனும் கட்டுப்பாட்டிற்கு உள்ளாகலாம். அமெரிக்காவில், இப்போதே லிப்ராவுக்கு எதிரான குரல் ஒலிக்கத்துவங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற அனுமதி பெற்ற பிறகே லிப்ரா அறிமுகம் செய்யப்பட வேண்டும் என அந்நாட்டு எம்பி ஒருவர் கூறியுள்ளார். பேஸ்புக்கும் தன் பங்கிற்கு அரசு தரப்பு கேள்விகளுக்கு பதில் அளிக்கத்தயார் என கூறியுள்ளது./

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

பேஸ்புக், வாட்ஸ் அப் பயன்பாட்டில் இந்தியர்கள் முன்னிலையில் இருந்தாலும் லிப்ரா அறிமுகத்திற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும். முதல் கட்டமாக லிப்ரா இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி கிரிப்டோ நாணயங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதால் லிப்ரா இங்கு முதல் கட்டமாக அறிமுகம் ஆக வாய்ப்பில்லை.

லிப்ரா திட்டம் தொடர்பான பேஸ்புக் வெள்ளை அறிக்கை: https://libra.org/en-US/white-paper/

— தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *