பொதுவாக இணையத்தில் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வது அத்தனை உகந்தது அல்ல. பல நேரங்களில் இருப்பிடத்தை பகிர்வது பாதுகாப்பானது அல்ல என்பது மட்டும் அல்ல, இது ஒருவரது தனியுரிமை சார்ந்ததும் தான்.
ஆனால், இப்போது நாம் பார்க்கப்போவது, இணையத்தில் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள கிளிம்ஸ் (Glympse ) எனும் செயலி பற்றி தான்.
இருப்பிடத்தை பகிர்வது நல்லது அல்ல என எச்சரித்துவிட்டு, இதற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள செயலியை அறிமுகம் செய்வது ஏன்? என நீங்கள் நினைக்கலாம். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கிறது. முதல் விஷயம், இணையத்தில் வலைவிரிப்பதற்காக நடைபெறும் தகவல் வேட்டையில் இருப்பிடம் சார்ந்த விவரங்களையும் அறிந்து கொள்வதில் இணைய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதால் இது குறித்த விழிப்புணர்வு வேண்டும் என்பதாகும்.
இந்த விழிப்புணர்வு இருந்தால், எப்போது, யாருடன் இருப்பிடம் சார்ந்த தகவலை பகிரலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்கும் போது, இந்த வசதியை உங்கள் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே இரண்டாவது விஷயம்.
கிளிம்ஸ் செயலி இதை தான் செய்கிறது. போனில் இருக்கும் ஜிபிஎஸ் நுட்பம் வாயிலாகவே இருப்பிடம் தொடர்பான தகவல்களை அறிய முடிகிறது, கண்காணிப்பிற்கும் இதுவே வழி செய்கிறது. ஜிபிஎஸ் நுட்பத்தை பயன்படுத்தி, வரைபடத்தின் மீது பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ள கிளிம்ஸ் உதவுகிறது.
ஆக, கிளிம்ஸ் செயலியை நீங்கள் போனில் நிறுவிக்கொண்டீர்கள் என்றால், அதில் உள்ள ஷேர் லொகேஷன் வசதியை கிளிக் செய்து, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் எனும் விவரத்தை, உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆக, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு தாமதமாக சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் இந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கலாம். அதே போல, விருந்து கொண்டாட்டம் போன்றவற்றுக்கு செல்லும் போது, காத்திருக்கும் நண்பர்களுக்கு, இதோ வந்து கொண்டே இருக்கிறேன் எனும் தகவலை இருப்பிடத்துடன் பகிர்ந்து கொள்ளலாம். இசை நிகழ்ச்சி போன்றவற்றுக்கு செல்லும் போதும் நண்பர்களை கண்டறிய இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதே போல முக்கிய வேலையாக சென்று கொண்டிருக்கும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டாலும், அது தொடர்பான தகவலை பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் பல விதங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
இதில் என்ன விஷேசம் என்றால், நண்பர்கள் இந்த தகவலை பார்க்க, இந்த செயலியில் உறுப்பினராக இணைய வேண்டும் என்றில்லை, இணைய இணைப்பு இருந்தாலே போதுமானது. ஏனெனில் அவர்களுடன் நீங்கள் நேரடியாக தகவலை பகிர்ந்து கொள்ளலாம்.
மேலும் இந்த செயலி வாயிலாக உங்கள் இருப்பிட தகவலை பகிர்ந்து கொள்வது மட்டும் அல்ல, நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்கள் இருப்பிடம் தொடர்பான தகவலை பகிர்ந்து கொள்ளவும் கோரிக்கை வைக்கலாம்.
இன்னொரு முக்கியமான அம்சம், இருப்பிட தகவல் குறிப்பிட்ட நேரம் கழித்து தானாக டெலிட் செய்யப்பட்டு விடுகிறது. அந்த வகையில் பாதுகாப்பானது. இது நுகர்வோர் தரப்பிலான வசதிகள். இது தவிர, வர்த்தக நிறுவனங்கள், குறிப்பாக டெலிவரி நிறுவனங்கள் இந்த சேவையை தங்கள் வாடிக்கையாளருக்கு மேம்பட்ட தகவல்களை அளிக்க பயன்படுத்திக்கொள்வதற்கான வசதியையும் கிளிம்ஸ் அளிக்கிறது.
கிளிம்ஸ் தவிர, இருப்பிட பகிர்வுக்கு உதவும் மேலும் சில செயலிகள் இருக்கவே செய்கின்றன. அதோடு, கூகுள் மேப்ஸ் மற்றும் வாட்ஸ் அப் சேவைகளிலும் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனால் கூகுள் மேப்சில் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் போது, அதை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு செயலிழக்க வைக்க மறந்துவிடக்கூடாது.
கிளிம்ஸ் செயலியை டவுண்லோடு செய்ய: https://glympse.com/