எல்லாமே ஸ்மார்ட்டாகி கொண்டிருக்கும் காலம் இது. ஏற்கனவே சந்தையில் புளூடூத் வசதி மற்றும் இன்னும் பிற நவீன அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டூத்பிரெஷ்கள் அறிமுகமாகி இருக்கின்றன. இந்நிலையில், ஜப்பானில் பாட்டு கேட்டுக்கொண்டே பல் தேய்க்க வழி செய்யும் இசைமயமான டூத் பிரெஷ் அறிமுகம் ஆகியிருக்கிறது.
சோனி நிறுவனத்தின் ஸ்டார்ட் அப் ஊக்க திட்டம் கீழ், யோசரா கார்ப்பரேஷன் மற்றும் லயன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து போஸி எனும் பெயரில் இந்த இசை டூத்பிரெஷ்ஷை உருவாக்கியுள்ளன.
சின்ன குழந்தைகளை காலையில் எழுந்ததும் பல் தேய்க்க வைப்பது எந்த பெற்றோருக்கும் சவாலான செயல் தான் அல்லவா? அதிலும் வேலைக்குசெல்லும் பெற்றோர் என்றால் இது இன்னும் சவாலானது. எனவே தான், சிறுவர், சிறுமியர்கள் பெற்றோர்களின் தூண்டுதல் அல்லது வற்புறுத்தல் இல்லாமல் தாங்களாகவே உற்சாகமாக பல் தேய்க்க ஊக்குவிக்கும் வகையில், போஸி டூத்பிரெஷ் உருவாக்கப்பட்டுள்ளது.
பைசோ எலெக்ட்ரிக் எனப்படும் நுண் மின்சார திறன் கொண்ட இந்த பிரெஷ் முனை பல்லில் படும் போது, அதிலிருந்து இசை கேட்கும் வகையில் இந்த டூத்பிரெஷ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக, பிள்ளைகள் கையால் பிடித்தபடி, இந்த பிரெஷ்ஷால் பல் தேய்க்கத்துவங்கினால் காதில் சங்கீதம் கேட்கத்துவங்கிவிடும்.
கைப்பிடியில் உள்ள பட்டனை கொண்டு பாடல்களை மியூட் செய்யலாம். ஸ்மார்ட்போன் அல்லது வேறு ஆடியோ சாதனத்துடன் இணைத்து, இந்த டூத்பிரெஷ்ஷில் பாடல்கள் ஒலிக்கச்செய்யலாம்.
அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் இந்த நவீன டூத்பிரெஷ் இந்திய மதிப்பு படி, ரூ.9,450 விலை கொண்டது.
—
சமையல்குறிப்பு தேடியந்திரம்
இணையத்தில் சமையல் குறிப்புகளை வழங்கும் இணையதளங்களுக்கு குறைவில்லை. சமைக்க கற்றுத்தரும் யூடியூப் வீடியோக்களும் கொட்டிக்கிடக்கின்றன. இந்த இரண்டையும் இணைக்கும் வகையில், குக்ஃபுட்.இயோ (https://cookfood.io) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
குக்ஃபுட் இணையதளத்தில், உங்களுக்கு விருப்பமான சமையல் குறிப்புகளை நீங்கள் தேடிக்கொள்ளலாம். எல்லாமே வீடியோ விளக்கங்களாக அமைந்துள்ளன என்பது இதன் சிறப்பம்சமாகும்.
தளத்தின் முகப்பு பக்கத்தில், வீடியோ சமையல் குறிப்புகள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. இவைத்தவிர, உணவு வகை, மூலப்பொருட்கள் வகை, உணவு முறை உள்ளிட்டவற்றின் அடிப்படையிலும் சமையல் குறிப்புகளை தேடலாம். ஏதேனும் ஒரு மூலப்பொருள் கொண்டு சமைக்க கூடிய உணவு வகைகளை தனியே தேடிக்கொள்ளலாம். இல்லை தந்தூரி அல்லது இத்தாலியன் உணவு வகைகளை மட்டும் தேடலாம்.
அந்த வகையில் இந்த தளத்தை சமையல் குறிப்பு வீடியோக்களுக்கான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம். இணையத்தில் அல்லது யூடியூப்பில் தனியே சென்று சமையல் குறிப்புகளை தேடாமல், இந்த தளத்தில் ஒரே இடத்தில் எளிதாக வலைவீசலாம்.
ஒவ்வொரு சமையல் குறிப்புக்குமான வீடியோ வழிகாட்டியை இந்த தளத்திலேயே காணலாம். சர்வதேச இணையதளம் என்றாலும், இட்லி உள்ளிட்ட இந்திய உணவுகளுக்கான வீடியோ குறிப்புகளை பார்க்க முடிகிறது.
=———–
கார்ட்டூன் வடிவில் உரையாடலாம்
வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஹைக் என ஏற்கனவே ஏகப்பட்ட மேசேஜிங் சேவைகள் இருந்தாலும், புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் சுடோ மெசஞ்சர் சேவை சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.
இந்த மேசேஜிங் சேவை, பயனாளிகள் தங்கள் கார்ட்டூன் உருவங்கள் மூலம் உரையாட வழி செய்கிறது. பல்வேறு மேசேஜிங் சேவைகளில், இமோஜிகள் மற்றும் ஸ்டிக்கர்களை உருவாக்கி கொள்ளும் வசதி இருக்கிறது.
சுடே மேசஞ்சர், பயனாளிகள் தங்களைப்போலவே தோற்றம் அளிக்கும் கார்ட்டூன் சித்திரங்களை உருவாக்கி கொள்ள்ள வழி செய்கிறது. மெசஞ்சரில் உள்ள காமிராவை இயக்கி படம் எடுத்து அல்லது ஏற்கனவே உள்ள தங்கள் புகைப்படங்களை இதில் பதிவேற்றி பயனாளிகள் தங்களுக்கான கார்ட்டூன் சித்திரங்களை உருவாக்கி கொள்ளலாம்.
அதன் பிறகு செய்திகளை அனுப்பும் போது இந்த கார்ட்டூன்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு: https://chu.do/