மைக்ரோசாப்ட் என்றால் பில்கேட்ஸ் மட்டும் அல்ல: பால் ஆலனும் உண்டு. ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் அல்ல: ஸ்டீவ் வாஸ்னியக்கும் உண்டு. டிவிட்டர் ஜேக் டோர்சிக்கு, இவான் வில்லியம் என்றால், பேஸ்புக்கின் மார்க் ஜக்கர்பர்கிற்கு ஒரு சீன் பார்க்கர் உண்டு.
முன்னவர்கள் நிறுவனர்கள் என்றால் பின்னவர்கள் எல்லாம் அவர்களுடன் கைகோர்த்து வெற்றிக்கு வழிவகுத்த இணை நிறுவனர்கள்.
ஸ்டார்ட் அப் வெற்றிக்கதைகள் பலவற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட இணை நிறுவனர்கள் உண்டு. ஒரு சில கதைகளில் இணை நிறுவனர்கள் புகார், பழி போடல் போன்றவற்றில் ஈடுபடுவது உண்டு என்றாலும், பெரும்பாலான வெற்றிக்கதைகளில் இணை நிறுவனர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
புதிய ஐடியா பளிச்சிடும் போது, அதை உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்துவதில் துவங்கி, வர்த்தக நோக்கில் முன்னெடுத்துச்செல்வது வரை துணை நிற்பதிலும், தோள் கொடுப்பதிலும் இணை நிறுவனர்கள் பங்கு கணிசமானது. எல்லாவற்றையும் விட முக்கியமாக தோழமை உணர்வோடு பேசிக்கொள்ளவும், தடைகளால் துவண்டுவிடாமல் தார்மீக ஆதரவு அளிக்கவும், இத்தகைய தொழில் நண்பர்கள் தேவை.
அதனால் தான் ஸ்டார்ட் அப் பாலபாடத்தில், வெற்றிகரமான ஸ்டார்ட் அப்புக்கு தேவையான விஷயங்களில், புதுமையான ஐடியா, அதன் செயலாக்கம், மார்க்கெட்டிங் பற்றி எல்லாம் விவரிக்கும் போது, இணை நிறுவனர்களையும் வலியுறுத்துகின்றனர்.
ஸ்டார்ட் அப் பயணத்தை துவக்கும் பலரும் இயல்பாகவே நமக்கு தோள் கொடுக்க ஒரு இணை நிறுவனர் (கள்) இருந்தால் நல்லது என நினைத்து அதற்கான தேடலில் ஈடுபடுவதும் உண்டு.
இப்போது இந்த தேடலில் கைகொடுக்கவும் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட்பீ (https://www.startbee.io/ ) எனும் அந்த தளம், நிறுவனர்கள் தங்களுக்கான இணை நிறுவனர்களை தேடிக்கொள்ள வழி செய்கிறது. இந்த தளத்தின், பைண்ட் மீ ஏ கோபவுண்டர் ( இணை நிறுவனரை கண்டுபிடு) வசதியை பயன்படுத்தி பொருத்தமான இணை நிறுவனரை அடையாளம் காணலாம். அதே போல புதுமையான ஐடியா கொண்டவர்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பவர்கள் இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது இணை நிறுவனராக செயல்பட சம்மதம் தெரிவிக்கலாம்.
ஆக, இந்த தளம் நிறுவர்களையும் இணை நிறுவனர்களையும் இணைக்கும் பாலமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இணை நிறுவனர் ஏன் தேவை? எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அவர்களால் ஏற்படக்கூடிய பல்வேறு நன்மைகளும் முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் ஐடியாவுடன் வலம் வருபவர்கள், தங்களுக்கு பொருத்தமான இணை நிறுவனரை கண்டறிய இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது அறிமுக நிலையில் இருக்கிறது. ஆனால், ஸ்டார்ட் அப் எண்ணம் கொண்டவர்கள் பரவலாக இந்த தளத்தை பயன்படுத்த துவங்கினால், இது ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மற்றும் இணை நிறுவர்களை இணைக்கும் மேடையாக உருவாக வாய்ப்பிருக்கிறது.