இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக இணையத்தில் தொடர்பில் இருப்பது என புரிந்து கொள்ளப்படுகிறது. இது ஆன்லைன் என குறிப்பிடப்படுகிறது. பிரவுசிங் என சொல்லப்படுவது, இணையத்தில் உலாவுவதை குறிக்கிறது. அதாவது பிரவுசர் மூலம் வலை வடிவில் இணையத்தை அணுகுவதை குறிக்கிறது.
இணையத்தில் உலாவுவது பயனுள்ளதா? செயல்திறன் மிக்கதா? என்பது அவரவர் நோக்கம் மற்றும் செயல்பாட்டை பொருத்தது.
ஆனால், இணையத்தில் சும்மா சுற்றித்திரிவது என்று ஒரு வகை பழக்கம் இருக்கிறது. இது ’சைபர் லோஃபிங்’ என சொல்லப்படுகிறது. தமிழில் மின்வெளி சுற்றித்திரிதல்.
இணையத்தில் உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி வேண்டுமானால் பயன்படுத்தலாம்- அது உங்கள் உரிமை. ஆனால், நீங்கள் அலுவலக ஊழியராக இருந்து, அலுவலக நேரத்தில், அலுவலகம் அளிக்கும் இணைய வசதியை அலுவலக பணி அல்லாதவற்றுக்காக பயன்படுத்தினால் அது, சைபர் லோஃபிங் எனப்படுகிறது.
அலுவலக நேரத்தில், அலுவல் இணையம் வாயிலாக சொந்த இமெயில் அனுப்புவது, யூடியூப் வீடியோ பார்ப்பது, பேஸ்புக்கில் நிலைத்தகவல் போடுவது, டிவிட்டரில் மேய்வது கேம் ஆடுவது.. இன்னும் இத்யாதிகள் அனைத்தும் சைபர் லோஃபிங் தான்.
சுருக்கமாக சொன்னால், அலுவலக நேரத்தில் அலுவல் இணையத்தை அலுவல் அல்லாத பணிகள் எதற்கு பயன்படுத்தினாலும், அது இந்த வகை தான். அலுவலகத்தில் பணி செய்யாமலேயே, ஆனால் வேலை செய்வது போன்ற பாவனையில், இணையத்தில் உலா வந்து கொண்டிருப்பதாகவும் இதை கொள்ளலாம்.
நவீன ஊழியர்களில் பலருக்கு இந்த பழக்கம் இருக்கிறது. இதை கண்காணிக்கவும் தடுக்கவும் பிரத்யேக மென்பொருள்கள் எல்லாம் வந்துவிட்டன. மேலும் , இந்த பழக்கத்தால் நிறுவனங்களுக்கு ஏற்படும் செயல்திறன் இழப்பு பற்றி எல்லாமும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால், மின்வெளி திரிதலை முற்றிலும் மோசமான செயல் என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலும் ஊழியர்கள் இதை எந்த உள்நோக்கமும் இல்லாமல் செய்வது உண்டு. அது மட்டும் அல்ல, பணிக்களைப்புக்கு நடுவே, யூடியூப் வீடியோ பார்ப்பதோ, சிறிது நேரம் இணையத்தில் உலாவுவதே புத்துணர்ச்சி அளிப்பதாக அமையலாம். எனவே, வேலைக்கு பழுதில்லை என்றால், இதை கண்டு காணாமல் இருந்துவிடலாம்.
ஆனால், நீங்கள் நேர்மையான ஊழியர் என்றால், அலுவலக நேரத்தில் இணையத்தை சொந்த வேலைக்கு பயன்படுத்தாமல் இருப்பது நலம். அப்படியே பயன்படுத்த நேர்ந்தாலும், அலுவலக இணையத்தை நாடாமல் சொந்த இணையத்தை நாடுவது இன்னும் நலம்.
நிற்க, இந்த பழக்கம் தொடர்பாவ விவாதம் ஒரு பக்கம் இருக்க, இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதை அதி தொடர்பு தன்மை என்கின்றனர். அதாவது ஹைபர் கனெக்டிவிட்டி. (Hyperconnectivity)
அலுவலக நேரம் முடிந்ததா? வேலை மறந்தோமா? எனும் நிலை இல்லாமல் ஊழியர்கள் வீட்டிற்கு வந்ததும் கூட, பணி சார்ந்த மெயில்களை பார்ப்பதும், விடுமுறை நாட்களில் கூட அலுவலக தொடர்பில் இருந்து பதில் அளிப்பதையும் தான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
இணைய வசதி, அதிலும் குறிப்பாக கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் இணையத்தை அணுகும் வசதி, அலுவலக நேரம் எனும் எல்லையை உடைத்து, வீட்டிற்குள்ளும் பணி நேரம் ஊடுருவ வைத்துள்ளது. இதனால், ஊழியர்கள் 24 மணிநேரமும் அலுவலக தொடர்பில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். அதிலும் நிறுவன செலவில் ஸ்மார்ட்போன் பெற்றிருந்தால் இது இன்னும் தீவிரமாக இருக்கும். இதனால் பணி வாழ்க்கை சமன் பாதிக்கப்படுகிறது.
ஆக, அதி தொடர்பு தன்மையை, மின்வெளி திரிதலில் மறுபக்கமாக பார்க்கலாம். ஊழியர்கள் அலுவலகத்தில் இணையம் மூலம் சொந்த வேலை பார்க்கின்றனர் என்றால், அவர்கள் வீட்டிற்கு வந்ததும் இணையமும் மூலம் அலுவலக வேலையும் பார்க்கின்றனர்.
எப்படி அலுவலகத்தில் இணையத்தை சொந்த வேலைக்காக பயன்படுத்தக்கூடாது என சொல்லப்படுகிறதோ, அப்படியே, அலுவலக வேலையை வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது என்றும் நவீன ஊழியர்களுக்கு வாழ்வியல் ஆலோசனை சொல்லப்படுகிறது.
இது பற்றி வெப்போபீடியா விளக்கம்: https://www.webopedia.com/TERM/C/cyberloafing.html
பிபிசியின் சுவாரஸ்யமான கட்டுரை: https://www.bbc.com/worklife/article/20170818-how-can-bosses-put-a-stop-to-workers-idly-browsing-online
–
முந்தைய டெக் டிக்ஷனரி: http://cybersimman.com/2019/07/29/tech-21/