புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான இணையவாசிகள் அலட்சியம் செய்து வேறு வேலை பார்க்க சென்றுவிடலாம். கூகுளில் நாள் முழுவதும் இலவசமாக தேட முடியும் போது, கட்டண தேடியந்திரமா? என பலரும் கடுப்பாகலாம்.
ஆனாலும், ஆப்சே தேடியந்திரம் மிகுந்த நம்பிக்கையோடு கட்டண சேவையாக அறிமுகம் ஆகியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த தேடியந்திரம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால், நீங்களும் கூட கட்டணம் செலுத்த முன்வரலாம். ஏனெனில், ஆப்சே உங்களுக்கான தனிப்பட்ட தேடியந்திரமாக செயல்படுகிறது என்பதே விஷயம்.
ஆம், ஆப்சே உங்கள் கம்ப்யூட்டரில் மறைந்திருக்கும் தகவல்களை தேட உதவுகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை தேட வழி செய்வதோடு, இணையத்தில் நீங்கள் தேடிய விஷயங்களையும் மீண்டும் தேட உதவுகிறது.
இணையத்தில் நீங்கள் தேடியதை மீண்டும் தேடுவதற்கான தேவையை நீங்கள் பல முறை உணர்ந்திருக்கலாம். என்றோ ஒரு நாள், இணையத்தில் நல்ல செய்தி அல்லது பயனுள்ள தகவலை படித்திருப்பீர்கள். அந்த தகவலை மீண்டும் பெற விரும்பினால், எப்படி அந்த பக்கத்தை சென்றடைந்தீர்கள் என்பது மறந்திருக்கும். கூகுளில் மாற்றி மாற்றி கீர்வேர்டை டைப் செய்து தேடினாலும் அந்த பக்கத்தை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.
அதே போல உங்களுக்கு வந்த இமெயில் அல்லது கோப்புகளை டெலிட் செய்துவிட்ட, பின்னர் அந்த தகவல் தேவைப்படும் போது எப்படி மீட்டெடுப்பது என தெரியாமல் விழிக்கலாம்.
இது போன்ற நேரங்களில் எல்லாம் கைகொடுப்பதற்காக ஆப்சே உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்சேவை தரவிறக்கம் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவிக்கொண்டால், நீங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போதெல்லாம் அது பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும். அதாவது நீங்கள் செல்லும் இணைய பக்கங்கள் மற்றும் தகவல்கள், கோப்புகளின் நகல்களை சேமித்து, பட்டியலிட்டு வைத்துக்கொள்ளும்.
பின்னர் எப்போதாவது உங்களுக்கு அந்த தகவல் தேவைப்பட்டால், நீங்கள் ஆப்சேவில் தொடர்புடைய கீவேர்டை டைப் செய்து தேடினால், அந்த தகவலை அது அடையாளம் காட்டும்.
இணையத்தில் தேடுவது என்றால், கூகுள் போன்ற தேடியந்திரங்கள் ஏற்றவை. ஆனால் உங்கள் சொந்த பயன்பாட்டிற்கான தேடல் என்றும் வரும் போது, ஆப்சே அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
நாம் விஜயம் செய்த இணைய பக்கங்களை தேட, பிரவுசரில் புக்மார்க் வசதி இருந்தாலும், அதில் நிறைய போதாமைகள் இருப்பதை நடைமுறையில் உணரலாம். அந்த வகையில் ஆப்சே, புக்மார்க்கிங் மற்றும் தேடல் இணைந்த தேடியந்திர சேவையாக அமைகிறது. விண்டோஸ், லினக்ஸ், மேக் உள்ளிட்ட இயங்குதளங்களில் செயல்படுகிறது.
கம்ப்யூட்டரில் பெரும்பாலான பணிகளை செய்யும் வழக்கம் கொண்டவர்கள்,. வர்த்தக பிரமுகர்கள், ஆய்வாளர்களுக்கு இந்த தேடியந்திரம் பயனுள்ளதாக இருக்கும்.
எல்லாம் சரி, நம்முடைய கம்ப்யூட்டரில் தேட மூன்றாம் தரப்பு மென்பொருளை அனுமதிக்கலாமா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். நாம் பார்க்கும் இணையதளங்களை எல்லாம் ஒரு தேடியந்திரம் குறித்து வைக்க அனுமதிப்பது சரியா? என்றும் கேட்கலாம். கூகுள் இதை தான் பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறது என்பதை மீறி, ஒரு தனிப்பட்ட தேடியந்திரத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்த தயங்கலாம்.
இந்த அச்சங்களுக்கு பதில் அளிப்பது போல, ஆப்சே, உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம். எந்த தகவல்களையும் நாங்கள் கிளவுட்டில் சேமிப்பதில்லை, எல்லாம் உங்கள் கம்ப்யூட்டரில் தான் இருக்கும் என்கிறது. அதே போல விளம்பரங்களையும் இடம் பெறச்செய்வதில்லை, உங்கள் தகவல்களையும் அறுவடை செய்து விற்பதில்லை என்கிறது.
ரயான் எனும் மென்பொருளாளர் இந்த தேடியந்திரத்தை உருவாக்கியிருக்கிறார். ரயான் வேறு சில செயலிகளையும் உருவாக்கியுள்ளார்: https://foxrow.com/
தேடியந்திர முகவரி: https://apse.io/
–