செல்பீ யுகத்தில் ஷட்டர்பிளை நிறுவனத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான். அதிலும், இன்ஸ்டாகிராம் போன்ற புகைப்பட பகிர்வு சேவைகளில் மூழ்கியிருக்கும் நவீன தலைமுறைக்கு ஷட்டர்பிளையின் அருமையை புரிந்து கொள்வது இன்னும் கடினம்.
ஷட்டர்பிளையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கொஞ்சம் பழைமை உணர்வு இருக்க வேண்டும். ஏனெனில், ஷட்டர்பிளை சேவையே, பழமைக்கும், புதுமைக்குமான பாலமாக உருவானதே. டிஜிட்டல் புகைப்பட கலை பிரபலமாகத்துவங்கிய காலத்தில், டிஜிட்டலில் படம் எடுக்கும் வசதியுடன், பாரம்பரிய முறையில் புகைப்படங்களை அச்சிட்டுக்கொள்ளும் வசதியை இணைக்கும் சேவையாக அறிமுகமானது.
1999 ம் ஆண்டில் ஷட்டர்பிளை அறிமுகமானது என்பதும் கவனைக்க வேண்டியதாகிறது. நுகர்வோர்களுக்கான டிஜிட்டல் காமிராக்கள் மெல்ல புழக்கத்திற்கு வந்த காலமாக 1990 களின் இறுதிப்பகுதி அமைகிறது. அதற்கு முன்னர், டிஜிட்டல் காமிராக்கள் புதுமையாக இருந்தனவேத்தவிர, பெரிய அளவில் ஏற்கப்படவில்லை. ஒன்று அவற்றின் விலை அதிகமாக இருந்தது. மற்றொன்று அவற்றின் புகைப்படத்தரம் மோசமாக இருந்தது. புகைப்பட சுருளில் படம் எடுப்பதற்கு நிகரானது இல்லை எனும் கருத்தே வலுவாக இருந்தது.
ஆனால், இணையம் எல்லா துறைகளிலும் தாக்கம் செலுத்தி தலைகீழ் மாற்றத்தை கொண்டு வந்தது. புகைப்பட கலையும் இதிலிருந்து தப்பவில்லை. டிஜிட்டல் காமிராக்களில் படமெடுப்பது இயல்பாகி, படச்சுருள் காமிராக்கள் வேகமாக மறக்கப்பட்டு வந்ததோடு, பலரது கைகளில் டிஜிட்டல் காமிராக்கள் இருந்தன. இதன் அடுத்த கட்ட பரிமணாம வளர்ச்சியாக பெரும்பாலானோர் கைகளில் செல்போன் காமிரா இருக்கும் நிலை வர இன்னும் சில ஆண்டுகளே இருந்தன.
இதனிடையே, இணையத்தில் டாட்காம் குமிழ் வெடிக்க காத்திருந்த காலமாகவும் 1990 களின் இறுதி அமைந்திருந்தது. அப்போது டாட்காம் அலை வீசிக்கொண்டிருந்த நிலையில், புதுமையான ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டு புதிய நிறுவனத்தை துவக்கும் உற்சாகம் பலருக்கு இருந்தது.
இந்த பின்னணியில் தான், 1999 டிசம்பர் மாதம், ஷட்டர்பிளை அறிமுகமானது. டான் பவும் (Dan Baum ) என்பவரும் இவா மனோலிஸ் (Eva Manolis ) என்பவரும் இணைந்து, சிலிக்கான் வேலி நட்சத்திர முதலீட்டாளர் ஜிம் கிளார்க் ஆதரவுடன் ஷட்டர்பிளையை துவக்கினர். டான் பவும் அப்போது சிலிக்கான் கிராபிக்ஸ் நிறுவனத்தில் வேலையில் இருந்தார். ஒரு விடுமுறை பயணம் மேற்கொண்டு பணிக்கு திரும்பிய நிலையில், அடுத்த வாரமே அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஷட்டர்பிளை நிறுவனத்தை துவக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
பொறியாளர் என்ற முறையில், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் நுட்பத்தில் அவருக்கு நல்ல பரீட்சயம் இருந்ததால், டிஜிட்டல் புகைப்பட கலையில் மாற்றம் ஏற்பட்டு வந்ததை கவனித்தார். பாரம்பரிய காமிராக்களில் இருந்து டிஜிட்டல் காமிராக்களுக்காம மாற்றம் நிகழ்வதை உணர்ந்திருந்தவர், இந்த மாற்றம் வேகமாகவே நிகழ இருப்பதையும் ஊகித்தார்.
இந்த மாற்றங்களின் சமிஞ்சைகள் கணிப்பால் படபடத்துக்கொண்டிருந்த நிலையில், டிஜிட்டல் காமிராவில் இருந்து படங்களை அச்சிடுவதற்கு ஏதேனும் வசதி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது. இந்த எண்ணம் தான் ஷட்டர்பிளை சேவையாக உதயமானது. (ஷட்டர்பிளை அறிமுகமான காலத்திலேயே, ஓபோட்டோ, ஸ்ன்பேப்பிஷ் போன்ற போட்டி சேவைகளும் அறிமுகமாயின.)
ஆம், டிஜிட்டல் காமிராவில் படங்களை எடுத்து கம்ப்யூட்டர் மானிட்டரில் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் போதுமா? அவற்றை அச்சிட்டு பார்க்கும் வசதி அவசியம் அல்லவா? இந்த தேவையை புரிந்து கொண்ட ஷட்டர்பிளை, உங்கள் டிஜிட்டல் படங்களை எங்கள் தளத்தில் பதிவேற்றுங்கள், அவற்றை அழகாக அச்சிட்டு அனுப்பி வைக்கிறோம் என உறுதி அளித்தது. பலரும் இது போன்ற ஒரு சேவைக்காக தான் காத்திருந்தனர்.
அந்த கால கட்டத்தில், கம்ப்யூட்டரில் படங்களை சேமித்து வைக்க போதிய வசதி இருந்தாலும், காமிராவில் இருந்து கம்ப்யூட்டருக்கு மாற்றுவது மற்றும் எடுத்த படங்களை எளிதாக பார்ப்பதும், அதைவிட முக்கியமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் சிக்கலாகவே இருந்தது. அதோடு, புகைப்படம் என்றால் ஆல்பமாக புரட்டுவதும், பிரேம் போட்டு பார்ப்பதும் இயல்பானதாக கருதப்பட்டது.
டிஜிட்டல் மாற்றத்தை, இந்த பாரம்பரிய தன்மையோடு, ஷட்டர்பிளை ஒன்றிணைத்தது. டிஜிட்டல் காமிரா பயனாளிகள் தாங்கள் எடுத்த படங்களை ஷட்டர்பிளையில் சமர்பித்தால், அவற்றை பயனாளிகள் விரும்பிய வகையில் அச்சிட்டு, பிரேம் போடப்பட்ட படமாக அல்லது புகைப்பட ஆல்பமாக தபாலில் அனுப்பி வைத்தது. புகைபட புத்தகங்களை உருவாக்கிக்கொள்ளவும் வழி செய்தது. நினைவுகளை போற்றி பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றும் ஊக்கப்படுத்தியது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வழி செய்தது. அது மட்டும் அல்லாமல், புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான திருத்த வசதியையும் அளித்தது.
இவை எல்லாமே அந்த காலகட்டத்தில் புதுமையாக இருந்தது மட்டும் அல்ல, பயனாளிகள் எதிர்பார்த்தவையாக இருந்தன. இதன் பயனாகவே ஷட்டர்பிளை வளர்ச்சி அடைந்தது. புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் டாட்காம் குமிழ் வெடித்து எண்ணற்ற புதுயுக நிறுவனங்கள் காணாமல் போனாலும், ஷட்டபிளை தாக்குப்பிடித்தது.
அதன் பிறகு, ஒருகட்டத்தில் டிஜிட்டலில் படங்களை பகிர்வது இயல்பாகி, அச்சிடுவது பழைய பழக்கமாகிவிடும் சூழல் வந்த நிலையிலும், ஷட்டர்பிளை தாக்குப்பிடித்து நின்றது. பின்னர், மொபைலில் படம் எடுத்து அதிலேயே பகிர்ந்து கொள்ளும் செல்பி யுகத்தில் அது தாக்குப்பிடித்து நிற்கிறது. சமூக வெளிப்பாடு மற்றும் தனிப்பட்ட பதிப்பு சேவை என வர்ணித்துக்கொள்ளும் ஷட்டர்பிளை மொபைல் உரைகள் மீது படங்களை அச்சிட்டு தருவது வரை பல புதிய வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது.
—
இணையதள முகவரி: https://www.shutterfly.com/index.jsp
—
தமிழ் இந்துவில் எழுதி வரும் வலை 3.0 தொடரில் விடுப்பட்டு போன சேவைகளில் ஒன்று.