இது நம்ம இடம், இங்கு நமக்கான தகவல்களை தேடலாம், இதில் நம் மனதில் உள்ள விஷயங்களை விவாதிக்கலாம். இத்தகைய எண்ணத்தையும், உணர்வையும் பெண்கள் மத்தியில் ஏற்படுத்திய ஆரம்ப கால பெண்களுக்கு மட்டுமான இணையதளங்களில் ஐவில்லேஜ் முக்கியமானது. இணையம் வளரத்துவங்கிய காலத்தில், 1995 ம் ஆண்டு அறிமுகமான ஐவில்லேஜ், இணையம் எல்லோருக்குமானது எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.
இணையம் எனும் அற்புதத்தை கண்டறிவத்துவங்கியிருந்தவர்கள் பலரும் தங்கள் விருப்பம், நோக்கத்திற்கு ஏற்ப புதிய இணையதளங்களையும், சேவைகளையும் உருவாக்கி கொண்டிருந்த நிலையில், இணையம் வேகமான வளர்ச்சி அடைந்துக்கொண்டிருந்தது. இந்த வளர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர்கள், இணையத்தை தாங்கள் அறிந்த வகையில் பயன்படுத்த முற்பட்டனர்.
இணையம் பெரும்பாலும் தொழில்நுட்ப மயமாக இருந்தது. பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்ந்து கொண்டன. இணையம் மூலம் பொருட்களை வாங்கும் புதுமை வசதி அறிமுகமானது. இணையத்தில் அரட்டை அடிக்க முடிந்தது. தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது. இன்னும் பல திசைகளில் இணையம் வளர்ந்து கொண்டிருந்தது.
வயதில் இளையவர்களையும், தொழில்நுட்ப ஆர்வம் கொண்டவர்களையும் இணையம் முதலில் ஈர்த்தது என்றாலும், இந்த நிலை மாறி அனைத்து தரப்பினரும் இணையத்தை நோக்கி வரத்துவங்கியிருந்தனர். இந்த பின்னணியில், பெண்களுக்கான இணையதளமும், அவர்களுக்கான பிரத்யேக உள்ளடக்கமும் இல்லை என்றால் எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்படி ஒரு நிலையை இணையம் எதிர்கொள்ளவில்லை.
பெண்களுக்கான இணையதளங்களை உருவாக்கும் தேவையை உணர்ந்திருதவர்கள், அதை செயல்படுத்தியும் இருந்தனர். இப்படி உருவான தளங்களில் ஒன்று தான் ஐவில்லேஜ். ஆனால், மற்ற பெண்கள் தளங்களை எல்லாம் விட, ஐவில்லேஜ் பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்தது, கவனத்தை ஈர்த்தது. அதற்கு காரணம், ஐவில்லேஜ் பின்னே இருந்த தொலைநோக்கும், அதற்கு வலு சேர்த்த தெளிவான வர்த்தக திட்டமும் தான்.
ஐவில்லேஜ் ஒற்றை தளமாக அறிமுகமாகவில்லை. மாறாக அது பெண்களுக்கு ஆர்வம் அளிக்ககூடிய பலவகை தகவல்களையும், சேவைகளையும் வழங்க கூடிய, எண்ணற்ற தளங்களை ஒரே குடையின் கீழ் அளிக்கும் மாபெரும் தளமாக அறிமுகமானது. அது பெண்களுக்கான தகவல்களை மட்டும் வழங்க முற்படவில்லை. இணையத்தை நோக்கி வரக்கூடிய பெண்கள் எதிர்பார்க்க கூடிய அநேக விஷயங்கள் இருக்க கூடிய இடமாக, முக்கியமாக அவர்கள் தங்களுக்குள் சுதந்திரமாக உரையாடி கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடிய இடமாக ஐவில்லேஜ் உருவாகி இருந்தது. அதாவது பெண்களுக்கான இணைய சமூகமாக அமைந்தது.
உண்மையில், ஒருமித்த கருத்துள்ளவர்கள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, ஒரு சமூகமாக செயல்பட இணையம் வாய்ப்பை உருவாக்கித்தந்த அம்சமே, ஐவில்லேஜ் நிறுவனர்களில் ஒருவரான கேண்டைஸ் கார்பண்டரை (Candice Carpenter) கவர்ந்திருந்தது. அப்போது அவர் அமெரிக்க ஆன்லைன் நிறுவனத்தில் ஆலோசகராக பணிக்கு சேர்ந்திருந்தார். பணி நிமித்தமாக முதல் முறையாக லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வாய்ப்பும், அதன் வாயிலாக இணைவெளியில் உலாவும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
இணையம் மோசமாக இருப்பதாக உணர்ந்தாலும், அதில் செயல்பட்டு வந்த சமூகங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. இந்த திசையில் தான் இணையம் வளரும் என நினைத்தார். இதே நோக்கில், பெண்களை மையமாக கொண்ட இணைய சமூகத்தை உருவாக்கலாம் என நினைத்தார். அதை வர்த்தக நோக்கிலும் செயல்படுத்தும் உத்தேசத்துடன், இதழியல் இருந்த தனது தோழி நான்சி இவான்ஸ் மற்றும் ஆலோசகராக இணைந்த ராப்ர்ட் லெவிட்டன் ஆகியோருடன் இணைந்து ஐவில்லேஜ் இணைய நிறுவனத்தை துவக்கினார்.
முதலில் பெற்றோர்களை ஈர்க்கும் வகையில் பேரண்ட்ஸ் சூப் எனும் இணையதளம் அறிமுகமானது. இந்த தளம், பெண்களுக்கான தகவல்களுடன், அவர்கள் பரஸ்பரம் உரையாடலில் ஈடுபடுவதற்கான வசதிகளை கொண்டிருந்தது. தளத்தில் மேல்பகுதியில், அரட்டை, தகவல் பலகை, வல்லுனர்கள், விளையாட்டுகள் ஆகிய பகுதிகள் இடம்பெற்றிருந்தன. வலது பக்க பட்டையில், அம்மாக்களாக இருக்கும் பெண்கள், இளம் அம்மாக்கள், பதின் பருவ பிள்ளைகளின் அம்மாக்கள் உள்ளிட்டோருக்கான இணைய சமூகங்கள் அமைந்திருந்தன. பெண்கள் தங்களுக்கு எதில் ஆர்வமே அந்த பகுதியை கிளிக் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதைத்தவிர, பெற்றோர்களுக்கான தினசரி வாக்கெடுப்பு வசதியும் அளிக்கப்பட்டிருந்தது.
வல்லுனர்களுடன் உரையாடும் வாய்ப்பு, குழந்தை பெயர்கள், தேடல் வசதி ஆகியவையும் இந்த தளத்தில் இருந்தது. மொத்தத்தில் பெண்கள் தங்களை இந்த தளத்திலேயே மூழ்கடித்துக்கொள்ளக்கூடிய வகையில் அவர்களுக்கான பிரத்யேக உள்ளடக்கம் அமைந்திருந்தது. இந்த தளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, ஐவில்லேஜின் மற்ற துணை தளங்கள் அறிமுகமாயின. உணவு, ஆரோக்கியம், நிதி, உறவு, குழந்தை வளர்ப்பு ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டது. என்றாலும், உரையாடல் அம்சம் பிரதானமாக இருந்தது. பெண்களுக்கான பல்வேறு தலைப்புகளிலான தகவல் பலகைகள் இதில் முக்கிய அங்கம் வகித்தன.
அட நம்ம தளம் என்று பெண்கள் இந்த தளத்தை தழுவிக்கொண்டனர். அதே நேரத்தில் விளம்பர நிறுவனங்களை ஈர்ப்பதற்கான வர்த்தக அம்சங்களும் அமைந்திருந்தன. வர்த்தக நிறுவனங்கள் விளம்பரங்களை வெளியிடும் வகையில், அவற்றுக்கு பொருத்தமான உள்ளடக்கம் உருவாக்கப்பட்டன. இவை பெண்களை ஈர்க்ககூடியதாகவும் இருந்தன. விளைவு, இந்த தளம் வர்த்தக நோக்கிலும் வரவேற்பு பெற்று, 1999 ல் பொது பங்குகளை வெளியிட்டது. இது இணையத்தின் வெற்றிக்கதைகளில் ஒன்றாக ஐவில்லேஜை உருவாக்கியது.
இதனிடையே போட்டி தளங்களும் இந்த பரப்பில் உருவாக, பெண்களுக்கான இணையதள பிரிவு இணையத்தில் தனி கவனத்தை ஈர்த்தது. இதே பாணியில் உருவான பெண்கள், பெற்றோர்கள், குழந்தை வளர்ப்பு தளங்களுக்கு எல்லாம் இது முன்னோடி தளமாக அமைந்தது.
ஐவில்லேஜ் பின்னர் தடுமாற்றத்திற்கு உள்ளாகி, டுடே இணையதளத்தால் வாங்கப்பட்டு, அதனுள் ஐக்கியமாகிவிட்டது. இன்று, ஐவில்லேஜ் தளத்தை இணையத்தில் அணுக வழியில்லை. ஆனால், ’வேபேக் மெஷின்’ சேவை மூலம் அதன் கடந்த கால பக்கங்களை புரட்டிப்பார்த்தால், இணையத்தின் ஆரம்ப காலத்தில், பெண்களுகளுக்கான இனிய உலகமாக அந்த தளம் அமைந்திருந்ததை புரிந்து கொள்ளலாம்.
https://web.archive.org/web/19980122031757/http://www.ivillage.com/
https://www.newyorker.com/magazine/1999/10/11/free-money
–
வலை 3.0 தொடரின் ஒரு பகுதி